என் மலர்
நீங்கள் தேடியது "imprisonment"
- கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
- நிவாரண தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு தரப்பிடம் இருந்து வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆதித்யா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் பாபநாசம் அனைத்து மகளிர் நிலை போலீசார் வழக்கு பதிவு செய்து ஆதித்யாவை கைது செய்தனர்.
இது தொடர்பான வழக்கு தஞ்சாவூர் போஸ்கோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் ஆதித்யா மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 3½ ஆண்டு 6 மாதம் சிறை தண்டனையும், ரூ.5000 அபராதமும் விதித்து நீதிபதி சுந்தர்ராஜன் உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பிற்கு நிவாரணத் தொகையாக ரூ.35 ஆயிரம் அரசு திரைப்படம் இருந்து வழங்கிட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
- காதலித்த பெண்ணை திருமணம் செய்த மறுத்த வாலிருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார்
அரியலூர்:
ஆண்டிமடம் அருகேயுள்ள சாதனப்பட்டு கிராமம் காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் அருமைநாதன் மகன் ஆனந்தராஜ்(வயது 27). இவர் அப்பகுதியைச் சேர்ந்த பெண்ணை 6 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2016-ம் வருடம் வலுக்கட்டாயமாக பாலியல் துன்புறுதலுக்கு ஆளாக்கி உள்ளார். இதையடுத்து அந்த பெண், தன்னை திருமணம் செய்துக் கொள்ளும்படி கேட்டபோது, ஆனந்தராஜ் மறுத்ததுடன் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து புகாரின் விசாரணை மேற்கொண்ட ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி ஆனந்தராஜ்க்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். இதையடுத்து ஆனந்தராஜ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வழக்குரைஞர் ம.ராஜா ஆஜராகி வாதிட்டார்.
- ஒரு நபர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
- இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் மணியனூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமந்த் (வயது 22). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த மாதம் 26- ந் தேதி அந்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் ஹேமந்தின் விலை உயர்ந்த செல்போனை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக கிச்சிப்பாளையம் கஸ்தூரிபாய் தெரு பகுதியைச் சேர்ந்த பிரதாப் (32) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு சேலம் 4- ஆவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி யுவராஜ், செல்போன் பறித்த வழக்கில் பிரதாப்புக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
- அரியலூர் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது
- குற்றவாளி சுந்தரத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார்
அரியலூர்:
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகேயுள்ள உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(வயது80). இவர் சைக்கிள் பஞ்சர் பார்க்கும் கடை வைத்திருந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு 10 வயது சிறுமி தனது சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்ட வந்தபோது சிறுமியை சுந்தரம் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் துறையினர் சுந்தரத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இறுதி விசாரணை முடிந்து தீர்ப்பளித்தது. இதில் குற்றவாளி சுந்தரத்துக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆனந்தன் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கவும் அவர் உத்தரவிட்டார். இதையடுத்து சுந்தரம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு வழக்குரைஞர் ராஜா ஆஜரானார்.
- போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
- திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த சேகர் (45) என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜவகர் தலைமையிலான போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஆரியூர்பட்டி தண்ணீர் தொட்டி அருகில் பணம் கட்டி சேவல் சண்டையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அங்கு சென்ற போலீ சார் சுற்றி வளைத்த போது, திருச்செங்கோடு வாலரைகேட் பகுதியைச் சேர்ந்த சேகர்( 45) என்பவர் மட்டும் சிக்கினார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
சேகரிடம் இருந்த சேவல் மற்றும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, சேகரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- வீட்டின் பூட்டை உடைத்து 2022 அக்டோபா் 7ஆம் தேதி 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
- வழக்கு விசாரணை கூடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
ஊட்டி
நீலகிரி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் உள்ள மைசூா் மரப்பாலம் மங்குழி பகுதியில் வசிக்கும் கிருஷ்ணன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 2022 அக்டோபா் 7ஆம் தேதி 27 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.
இது தொடா்பாக கூடலூா் போலீஸாா் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி கா்நாடக மாநிலம், மைசூரு பகுதியைச் சோ்ந்த மது (23), கேரளம் மாநிலம், மாநந்தவாடி பகுதியைச் சோ்ந்த மனு (20), அவரின் தாயாா் லதா (38) ஆகியோரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு விசாரணை கூடலூா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சசின்குமாா் மூன்று பேருக்கும் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா்
- திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
- இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன.
அன்னதானப்பட்டி:
சேலம் நெத்திமேடு , கேபி கரடு பகுதியைச் சேர்ந்தவர் இளவரசன் ( வயது 28). இரும்பு கிரில் பட்டறை உரிமையாளர். இவர் நேற்று அன்னதானப்பட்டி அகரமகால் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்றபோது அயோத்தியாப்பட்டணம் மாசிநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த செல்வம் என்கிற அய்யாவு (35) என்பவர் திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து அரை பவுன் மோதிரம், செல்போன், ரூ.2100 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அய்யாவு என்பவரை கைது செய்தனர்.
இவர் மீது ஏற்கனவே ரேஷன் அரிசி கடத்தியதாக 8 வழக்குகள் பதிவாகி உள்ளன. மேலும் 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
- ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற குற்றத்திற்காகஅவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.
- ஆலங்குடியில் வழிபறியில் ஈடுபட்டவர் சிறையில் அடைக்கப்பட்டார்
- இது குறித்து புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே உள்ள கே ராசியமங்கலம் கச்சிராம்பட்டியை சேர்ந் த கருப்பையா மகன் பழனிவேல்( வயது 48). இவர் மீன் வியாபாரத்துக்கு அதிகாலை தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, திருவரங்குளம் தனியார் கல்லூரி எதிரில் அவரை மறித்த ஒருவர் அவரிடம் இருந்து பொருட்களை பறித்து சென்றுள்ளார். இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆலங்குடி இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்கு பதிந்து விசாரணை நடத்தினார். விசாரணையில், இலுப்பூர் தாலுகா கீழக்குறிச்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவரின் மகன் விஜய் (எ) விஜய்பிரசாத் (வயது 17) என்பது தெரிய வந்தது. தலைறைவான அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கீழக்குறிச்சியில் வைத்து கைது செய்தனர். பின்னர் புதுக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தஞ்சாவூர் சிறுவர்கள் காப்பகத்தில் அடைத்தனர்.
- செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
அன்னதானப்பட்டி:
சேலம் செவ்வாய்பேட்டை, சந்தைப்பேட்டை மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 55). சேகோ பேக்டரி உரிமையாளர்.
இவர் நேற்று செவ்வாய்பேட்டை லீபஜார் ரோட்டில், பழைய வணிக வளாகம் அருகே தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் மதிவாணனை திடீரென வழிமறித்து, கத்தியைக் காட்டி மிரட்டி, தாக்கி, அவரிடமிருந்து 3 பவுன் செயின், 1 பவுன் மோதிரம், ரூ.5500 ஆகியவற்றை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் வழிப்பறியில் ஈடுபட்ட, பொன்னம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த குட்டி என்கிற பக்ருதீன் ( 45), அம்மாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து செயின், மோதிரம், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி அவர்களை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
- ராசிபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் மேற்கு வலசு தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி.
- மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டை பிடித்து கொண்டு சென்றதாக கூறினர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பி.மேட்டூர் மேற்கு வலசு தோப்புக்காடு பகுதியைச் சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று அத்தனூர் கிராமம் பெரிய ஊத்து ஓடை பகுதியில் அவர் தனது ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குச் சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தபோது மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளில் 1 கெடா ஆட்டை காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த மணி, அக்கம் பக்கத்தில் விசாரித்ததில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் ஆட்டை பிடித்து கொண்டு சென்றதாக கூறினர். இது பற்றி மணி வெண்ணந்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் வெண்ணந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், ராசிபுரம் அருகே உள்ள பட்டணம் பள்ளிக்கூடத் தெரு பகுதியைச் சேர்ந்த மத்த ராயன் மகன் சின்னதுரை (39). அதே பகுதியைச் சேர்ந்த பிரான்சிஸ் மகன் ராஜ்குமார் (36) புதூர் மலையான்பட்டி கிராமம் புதூர் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் மகன் கோவிந்தன் (40) ஆகிய 3 பேரும் ஆட்டை திருடி சென்றது தெரிய வந்தது. திருடிய ஆட்டை பட்டணம் கிராமத்தைச் சேர்ந்த மணிவேல் என்பவரிடம் விற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் ராசிபுரம் குற்ற வியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்பு ராசிபுரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.