search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Lottery Dealer"

    • மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் தங்கவேல் பயிற்சி பெற்ற விஜி பண்ருட்டி கும்பகோணம் ரோட்டில் மகேஷ் பேக்கரி எதிரில்ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் .அப்போது பண்ருட்டி அவுலியா நகர் சேர்ந்த ஷேக் அப்துல்லா (46) என்பவர்தமிழ்நாடு அரசால் தடை செய்ய ப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற குற்றத்திற்காகஅவரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.

    • கெளதம் ஓட்டல் அருகில் போலீஸை பார்த்து ஓடிய நபரை போலீஸ் மடக்கிப் பிடித்தனர்.
    • அரசால்தடை செய்யப்பட்ட அந்நிய மாநில லாட்டரி சீட்டுகள் 20, பணம் ரூபாய் 200 வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவுப்படி திண்டிவனம் உட்கோட்டம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா மேற்பார்வையில் திண்டிவனம் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் மற்றும் போலீசார் திண்டிவனம் மேம்பாலம் கீழ் ரோந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது கெளதம் ஓட்டல் அருகில் போலீஸை பார்த்து ஓடிய நபரை போலீஸ் மடக்கிப் பிடித்து விசாரணை செய்த போது கிடங்கள்-2 பகுதியைச் சேர்ந்த மோகன் 48 அவர் அரசால்தடை செய்யப்பட்ட அந்நிய மாநில லாட்டரி சீட்டுகள் 20, பணம் ரூபாய் 200 வைத்திருந்ததை பறிமுதல் செய்தனர். மேற்படி திண்டிவனம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு மோகனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அதேபோல குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர் சண்முகம் மற்றும் காவலர்கள் திண்டிவனம் சந்தைமேடு குற்ற வழக்கு சம்பந்தமாக வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனர். அப்போது செஞ்சி மார்க்கத்திலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நிறுத்தாமல் சென்றவரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரணை விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் பெலாக்குப்பம் ரோடு பாரதிதாசன் பேட்டையை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்தது இவரிடம் இருந்த அரசால்தடை செய்யப்பட்ட அந்நிய மாநில லாட்டரி 48 வைத்திருந்ததை பறிமுதல் செய்து சுரேஷ் மீது ரோசணை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.இவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ×