search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "national security"

    • அமைதி உடன்படிக்கை கால கட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.
    • போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது.

    முசோரி:

    உத்தராகண்ட் மாநிலம் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாகவியல் கழகத்தில் நடைபெற்ற 28 வது சிவில் - ராணுவ கூட்டுப்பயிற்சி திட்டத்தை பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:

    தேச பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், வருங்கால சவால்களை எதிர்கொள்ளவும் நிர்வாகம், ராணுவம் மேலும் இணைந்து செயல்படுவது அவசியம்.

    ராணுவ தாக்குதல்களிலிருந்து பாதுகாத்து கொள்வதில், ராணுவம் அல்லாத பல பரிணாமங்கள் இடம் பெற்றுள்ளதால், தேசபாதுகாப்பு என்பது பரந்து விரிந்ததாக மாறியுள்ளது.

    ரஷ்யா - உக்ரைன் நிலவரம் மற்றும் அதேபோன்ற பிற மோதல்கள், வழக்கமான போர் முறைகளிலிருந்து மாறுபட்டு இருப்பதை உலகம் கண்கூடாக காண்கிறது. போர் மற்றும் அமைதி என்பது இனியும் இரண்டு தனித்தனி அம்சமாக இருக்க முடியாது. அமைதி உடன்படிக்கை காலகட்டத்தில் கூட, பல முனைகளில் போர் தொடர்கிறது.

    கடந்த சில தசாப்தங்களாக முழு அளவிலான போர் தவிர்க்கப்பட்டிருக்கிறது. இதற்கு பதிலாக மறைமுக மற்றும் தாக்குதல்கள் இல்லா யுத்தங்கள் நடத்தப்படுகின்றன.

    தொழில்நுட்பம், வினியோக சங்கிலி, தகவல், எரிசக்தி, வர்த்தகம் மற்றும் நிதி நடைமுறைகள் போன்றவை ஆயுதமாக்கப் படுகின்றன.

    இத்தகைய ஆயுதம் வரும் காலங்களில் நமக்கு எதிராக பயன்படுத்தப்படக் கூடும். எனவே, இதுபோன்ற பரந்து விரியும் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×