என் மலர்
நீங்கள் தேடியது "இறக்குமதி"
- முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
- இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும்.
அமெரிக்காவில் இருந்து வருடத்திற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். தற்போது, இந்தியா தனது LPG தேவைகளில் 50% க்கும் அதிகமாக இறக்குமதியை சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.
இந்தியா - வங்கதேச நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், வங்கதேசத்திலிருந்து சாலை, ரெயில் வழியாக சணல் பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு இந்தியா தடை விதித்துள்ளது.
இருப்பினும், வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி, நவா ஷேவா துறைமுகம் வழியாக வங்கதேசத்தில் இருந்து சணல் பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மே 17 அன்று, அண்டை வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் போன்ற சில பொருட்களை இறக்குமதி செய்வதற்கு இந்தியா கட்டுப்பாடுகள் விதித்தது குறிப்பிடத்தக்கது.
- தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
- வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான மாற்றுகளை நோக்கித் திரும்பக்கூடும்.
ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் 50சதவீதம் வரி விதித்துள்ளார்.
இந்த முடிவு வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, மருத்துவம் போன்ற துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும். மேலும் எஃகு, ரசாயனம் ஆகிய ஏற்றுமதியும் பாதிக்கப்படும்.
இந்திய தயாரிப்புகள் அமெரிக்க சந்தையில் எப்போதும் இல்லாத அளவுக்கு விலை உயர்ந்ததாக மாறும். இதனால் இந்திய பொருட்களை வாங்குவதை அங்குள்ள நுகர்வோர் தவிர்ப்பார்கள்.
கூடுதல் வரி காரணமாக, இந்தப் பொருட்களுக்கான தேவை குறையும். இது இந்தியாவின் இந்தத் தொழில்கள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தியையும் பாதிக்கும்.
டிரம்பின் இந்த நடவடிக்கை உலகளாவிய விநியோகச் சங்கிலியிலும் மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அமெரிக்க நிறுவனங்கள் இப்போது இந்தியப் பொருட்களுக்குப் பதிலாக, குறிப்பாக வியட்நாம், பங்களாதேஷ் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து மலிவான மாற்றுகளை நோக்கித் திரும்பக்கூடும். இது இந்தியாவிற்கு நீண்டகால பொருளாதார சவாலாக மாறும்.
- பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார்
- உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, அமெரிக்க பொருட்கள் மீது பல்வேறு நாடுகள் அதிக வரி விதிப்பதாகவும், அதற்கு பதிலடியாக அந்தந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்புக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் அறிவித்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இரும்பு மீதான வரி 50 சதவீதமாக உயர்த்தப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
பென்சில்வேனியாவில் உள்ள இரும்பு ஆலையை ஆய்வு செய்த பின் இந்த அறிவிப்பை டிரம்ப் வெளியிட்டார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, அமெரிக்காவில் இரும்பு இறக்குமதி வரியை 25 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த போகிறோம். இது அமெரிக்காவில் இரும்பு தொழிலை மேலும் பாதுகாக்கும்.
இன்று இங்குள்ள ஆண்களும் பெண்களும் அமெரிக்காவை சக்திவாய்ந்ததாகவும் வலுவாகவும் வைத்திருக்க ஒவ்வொரு நாளும் உழைக்கிறார்கள். இப்போது, இறுதியாக உங்களுக்காக உழைத்து உங்களுக்காகப் போராடும் அதிபராக நான் செயல்படு கிறேன் என்றார்.
- ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம்.
- ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை.
எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்கக் கூடாது என்று வணிகர்களுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இன்று குஜராத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மோடி, "எவ்வளவு லாபம் கிடைத்தாலும் வெளிநாட்டு பொருட்களை விற்க முடியாது என வணிகர்கள் உறுதிமொழி எடுக்க வேண்டும். துரதிஷ்டவசம் என்னவென்றால், விநாயகர் சிலைகளைக் கூட வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். அந்த சிலைகளின் கண்களும் மிகச் சிறியதாக உள்ளன, கண்கள் சரியாக திறப்பது கூட இல்லை. ஹோலி வண்ண பொடிகள் கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை."
ஒரு நாளில் நமக்கே தெரியாமல் நிறைய வெளிநாட்டு பொருட்களை பயன்படுத்துகிறோம். நாம் பயன்படுத்தப்படும் ஹேர்பின், சீப்பு கூட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை தான். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நமது படைகள் கைகளில் மட்டும் இல்லை, 140 கோடி இந்தியர்கள் கைகளிலும் உள்ளது" என்று தெரிவித்தார்.
- வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
- துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
ஆனால் அதே சமயம் மும்பை, கொல்கத்தா துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் சில இந்தியப் பொருட்களுக்கு வங்கதேசம் தடை விதித்த நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
- கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தக பற்றாக்குறை 5.77 பில்லியனாக இருந்தது.
- இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலா் 8.65 பில்லியனாக அதிகரித்துள்ளது.
இந்தியாவின் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்துள்ளது. இதனால் 8.65 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 65.48 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 73.80 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
அதேவேளையில் 2024 ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த இறக்குமதி (பொருட்கள் மற்றும் சேவைகள்) 71.25 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது அது 82.45 பில்லியன் அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதால் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வர்த்தக பற்றாக்குறை 5.77 பில்லியனாக இருந்த நிலையில், இந்த வருடம் ஏப்ரல் மாதத்திலா் 8.65 பில்லியனாக அதிகரித்துள்ளது.
- பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
- பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்தியா தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்த இந்தியா எடுத்த முடிவுக்கு பதிலடியாக இந்தியாவுடனான அனைத்து வர்த்தகத்தையும் பாகிஸ்தான் நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து நேரடி, மறைமுகமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்திய அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து அனைத்துப் பொருட்களை யும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இறக்குமதி செய்யக்கூடாது என்று வர்த்தக அமைச்சகம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
மறு உத்தரவு வரும் வரை பாகிஸ்தானில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் எந்த ஒரு பொருட்களையும் இறக்குமதி செய்வதையோ அல்லது கொண்டு செல்வதையோ தடை செய்யும் வகையில் விதி சேர்க்கப்பட்டு வெளிநாட்டு வர்த்தக கொள்கை திருத்தப்பட்டு உள்ளது.
தேசிய பாதுகாப்பு மற்றும் பொது கொள்கையின் நலனுக்காக இந்த கட்டுப்பாடு விதிக்க்பபட்டுள்ளது என்று வெளிநாட்டு வர்த்தக இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இந்த தடைக்கு எந்தவொரு விலக்குக்கும் இந்திய அரசின் ஒப்புதல் பெற வேண்டும்.
- அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
- அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப் படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். குறிப்பாக மற்ற நாடுகள் மீது வரி விதிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.
அமெரிக்க பொருட்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படுவதாக குற்றம் சாட்டிய டிரம்ப், அதே அளவுக்கு அந்தந்த நாடுகள் மீது ஏப்ரல் 2-ம் தேதி முதல் பரஸ்பர வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார்.
இந்தியாவின் விவசாய பொருட்கள் மீது 100 சத வீதம் வரை வரி விதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக டிரம்ப் இன்று அறிவிப்பை வெளியிடுகிறார்.
இந்த நிலையில் பரஸ்பர வரி விதிப்பு உடனடியாக அமலுக்கு வரும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது:-
அதிபர் டிரம்ப் வர்த்தக குழுவுடன் ஆலோசனை நடத்தினார். வரி விதிப்பு தொடர்பாக அவர் ரோஸ் கார்டனில் நடைபெறும் விடுதலை தின நிகழ்ச்சியில் அறிவிப்பை வெளியிட்டதும் வரிவிதிப்புகள் உடனடியாக அமலுக்கு வரும்.
அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்தியா 100 சதவீத வரியினை விதிக்கிறது. பால் பொருட்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் 50 சதவீதம், ஜப்பான் 700 சதவீதம் வரிகளை விதிக்கிறது. வெண்ணெய் மற்றும் சீஸ் மீது கனடா சுமார் 300 சதவீதம் வரியை விதிக்கிறது.
இதுபோன்ற நாடுகளால், அமெரிக்கா நீண்ட காலமாக கடும் சுரண்டலுக்கு ஆளாகியுள்ளது. அதிபர் டிரம்ப் எடுத்த துணிச்சலான முடிவுகள் அமெரிக்காவுக்கு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது.
நமது ஏற்றுமதிக்கு அந்த நாடுகள் விதிக்கும் அளவுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமல்படுத்தும் நேரம் வந்து விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா விதிக்க உள்ள பரஸ்பர வரிகளால் இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தோனேசியா, ஜப்பான், தென் கொரியா, மலேசியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, சுவிட்சர்லாந்து, தைவான், தாய்லாந்து, துருக்கி, இங்கிலாந்து, வியட்நாம் உள்ளிட்ட நாடுகள் பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் 69.20 பில்லியன் டாலருக்கு ஏற்றுமதி
- இறக்குமதி 14 சதவீதம் குறைந்துள்ளது
இந்தியாவின் ஒட்மொத்த ஏற்றுமதி ஜூன் மாதத்தில் 60.09 பில்லியன் அமெரிக்க டாலராகும். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா 69.20 அமெரிக்க டாலர் அளவில் ஏற்றுமதி செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தை காட்டிலும் தற்போது 13 சதவீதம் குறைந்துள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலை, இந்த குறைவுக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
அதேவேளையில் இறக்குமதியும் குறைந்துள்ளது. 2022 ஜூன் மாதத்தில் 80.12 பில்லியன் டாலர் அளவிற்கு இறக்குமதி செய்த இந்தியா, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 14 சதம்வீதம் குறைத்து 68.98 பில்லியன் டாலருக்கு இறக்குமதி செய்துள்ளது.
இறக்குமதி ஏற்றுமதிக்கு இடையிலான வித்தியாசம் 10.92 பில்லியனில் இருந்து 8.89 பில்லியனாக குறைந்துள்ளது.
ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 182.70 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்துள்ளது இந்தியா. இது கடந்த ஆண்டை விட 7.29 சதவீதம் குறைவாக ஏற்றுமதி செய்துள்ளது.
- சீனாவிலிருந்து விலகிட பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன
- உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது
இனி இந்தியாவில் டேப்லெட், மடிக்கணினி, மற்றும் அனைத்து வகை கணினிகளையும் இறக்குமதி செய்ய உரிமங்கள் (license) வேண்டும்.
வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் அறிவிப்பின்படி மடிக்கணி, டேப்லெட், ஆல்-இன்-ஒன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் அல்ட்ரா ஸ்மால் கம்ப்யூட்டர் மற்றும் சர்வர் ஆகியவற்றை இறக்குமதி செய்ய இனிமேல் உரிமம் வாங்க வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. சில சிறப்பு சேவைகளை செயல்படுத்த அவசியமான ஒரு சில கணினிகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படலாம்.
பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ள வெளிநாட்டு மின்னணு பொருட்களின் இறக்குமதியை குறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கொள்கைகளின் தொடர்ச்சியாக இந்த கட்டுப்பாடு வருகிறது.
சீனாவிலிருந்து விலகி வேறு சில நாடுகளில் தங்கள் உயர்ரக மின்னணு பொருட்களை தயாரிக்க பல பன்னாட்டு நிறுவனங்கள் முயல்கின்றன. இந்த வாய்ப்பை இந்தியா பயன்படுத்தி கொள்ள வேண்டுமென்பதில் பிரதமர் நரேந்திர மோடி தீவிரமாக இருக்கிறார். அதன்படி அரசாங்கத்தின் பல துறைகளுக்கு கொள்கைகளை வகுக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
அதன்படி, மடிக்கணினிகள், டேப்லெட்டுகள் மற்றும் பிற ஹார்டுவேர் தயாரிப்பாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வகையில் ரூ.170 பில்லியன் மதிப்பிலான ஊக்கத்தொகை திட்டத்தை அரசாங்கம் வெளியிட்டது.
அரசாங்கத்தின் உற்பத்தியுடன் இணைக்கப்பட்ட ஊக்கத்தொகைகளை பெற விரும்பும் உற்பத்தியாளர்கள் விண்ணப்பிக்க இம்மாதம் 30 தான் கடைசி தேதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் வருடாந்திர மின்னணு இறக்குமதியில் மடிக்கணினிகள் மற்றும் டேப்லெட்டுகளின் இறக்குமதி $60 பில்லியனுக்கும் அதிகமாக உள்ளது.
ஆப்பிள் நிறுவனம், அதன் ஐபேட் மற்றும் மேக்புக் கணினி வகைகளை இன்னமும் இந்தியாவில் தயாரிக்க தொடங்கவில்லை. இந்த ஊக்கத்தொகைகள் மற்றும் இறக்குமதி கட்டுப்பாடுகள் அந்நிறுவனத்தை இந்தியாவிலேயே உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கலாம் என கருதப்படுகிறது.
டெல் டெக்னாலஜிஸ், ஹெச்பி மற்றும் அஸஸ்டெக் போன்ற நிறுவனங்களும் இதனை பயன்படுத்தி தங்கள் கணிணி வகைகளை இங்கு உற்பத்தி செய்யும் நடவடிக்கைகளை எடுக்கலாம் என கணினி வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இது போன்ற முயற்சிகளின் விளைவாக உள்நாட்டில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என பொருளாதார வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
அரசாங்கத்தின் இந்த அறிவிப்புக்கு பிறகு, இன்று பங்கு வர்த்தகத்தில், பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட உள்ளூர் மின்னணு உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் 2% - 5% வரை உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.
- உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
புதுடெல்லி:
இறக்குமதிக்கு எந்த கட்டுப்பாடும் இல்லாத பொருட்கள் பிரிவில், துவரம் பருப்பு, உளுந்து ஆகியவை வைக்கப்பட்டுள்ளன. இந்த பொருட்களின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதி, 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய இருந்தது.
இந்நிலையில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பின் கட்டுப்பாடு இல்லாத இறக்குமதிக்கான அனுமதியை, 2025-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
உள்நாட்டு வரத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுப்பாட்டில் வைக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.






