என் மலர்
இந்தியா

அமெரிக்காவிடம் இருந்து ஆண்டிற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்
- முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
- இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும்.
அமெரிக்காவில் இருந்து வருடத்திற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்தார். இதன்மூலம் முதல் முறையாக அமெரிக்காவிடம் இருந்து இந்தியா LPG இறக்குமதி செய்யவுள்ளது.
இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்கா சென்று அங்குள்ள எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், தற்போது ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது இந்தியாவின் வருடாந்திர LPG இறக்குமதியில் கிட்டத்தட்ட 10% ஆகும். தற்போது, இந்தியா தனது LPG தேவைகளில் 50% க்கும் அதிகமாக இறக்குமதியை சார்ந்தே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






