என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "gas"
- சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
- கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த கொண்டக்கரையில் தனியார் கியாஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து பைப் மூலம் கியாஸ் கொண்டுவரப்பட்டு சேமிக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து லாரிகள் மூலம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று இரவு டேங்கரில் கியாஸ் நிரப்பிய லாரி ஒன்று மீஞ்சூர்-மணலி நெடுஞ்சாலையில் வெள்ளிவாயில் சாவடி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது லாரியில் உள்ள டேங்கரில்இருந்து திடீரென கியாஸ் கசிந்து வெளியேறத் தொடங்கியது.
சுமார் 20 அடி உயரத்திற்கு மேல் பயங்கர இரைச்சல் சத்தத்துடன் கியாஸ் வெளியேறத் தொடங்கியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த டிரைவர் லாரியை சாலையின் நடுவிலேயே நிறுத்திவிட்டு இறங்கினார். இதனால் பின்னால் வந்த வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.
மேலும் வாகனங்கள் திரும்பி செல்ல முடியாததால் அதில் இருந்தவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் செங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் சோபிதாஸ் மற்றும் போலீசார் விரைந்து வந்து அந்த பகுதியில் போக்குவரத்தை நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டனர். மேலும் லாரியில் இருந்து வெளியேறிய கியாசை நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது.மேலும் அத்திப்பட்டு, மணலி புதுநகர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து சுமார் 2 மணிநேரத்திற்கு பிறகு கேஸ் நிறுவனத்தில் இருந்து வந்த ஊழியர்கள் டேங்கரில் இருந்து கியாஸ்கசிவு ஏற்பட்ட பகுதியை சரிசெய்தனர். இதன்பின்னர் கியாஸ் ஏற்றிய லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
இதனால் மீஞ்சூர்- திருவொற்றியூர் சாலையில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கியாஸ் தீப்பற்றாததால் பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.
- செரிமான அமைப்பு வழியாகத்தான் நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது.
மனித உடலுக்கு நார்ச்சத்துக்கள் மிகவும் அவசியமான ஊட்டச்சத்துக்கள் ஆகும். பல உணவுகளில் இருந்து இந்த நார்சத்துக்களை நம்மால் பெற முடியும். ஆனால் நமது உடலால் இந்த நார்ச்சத்துக்களை முழுமையாக உறிஞ்சவோ அல்லது ஜீரணிக்கவோ முடியாது. செரிமான அமைப்பு வழியாகத்தான் இந்த நார்ச்சத்துக்கள் ஜீரணிக்கப்படுகிறது. குடல் இயக்கங்களுக்கு ஏற்றதாக நார்ச்சத்து பார்க்கப்பட்டாலும், அதிகப்படியாக இதை எடுத்துக்கொள்வதால் நமக்கு சில பக்க விளைவுகளும் ஏற்படும். எனவே இத்தகைய நார்ச்சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால் வரும் பிரச்சினைகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
பொதுவாக நார்ச்சத்துக்களை எடுத்துக்கொண்டால், நீரில் கரையக்கூடிய மற்றும் நீரில் கரையாத நார்ச்சத்துக்கள் என இரு வகைகள் உள்ளது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் பக்கவாதம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. அமெரிக்காவில் ஒரு ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகளின்படி, கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள கொழுப்பின் அளவை கணிசமாக குறைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் நீரில் கரையாத நார்சத்துக்கள் முறையாக உணவுடன் செரிக்கப்படுவதில்லை. இவை நேரடியாக இரைப்பை குடல் வழியாக பயணித்து மலத்தில் கலக்கிறது. இவை மலச்சிக்கலை தடுக்க உதவுகிறது.
நீங்கள் நார்ச்சத்துக்களை உங்கள் உணவில் சேர்க்க விரும்பினால், பருப்பு வகைகள், பழங்கள், பச்சை காய்கறிகள், தானியங்கள், விதைகள் போன்றவற்றை எடுத்துக்கொள்ளலாம். அதேசமயம் நார் சத்துக்களை அதிகமாக உட்கொள்வதால், சில எதிர்மறை பக்க விளைவுகள் உண்டாக வாய்ப்புள்ளது.
அதிகப்படியாக நார்ச்சத்துக்கள் உட்கொள்வதால் சிலருக்கு மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, வாயு, செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது.
மேலும் இவை துத்தநாகம், மெக்னீசியம், கால்சியம் போன்ற சில தாது வகைகளை உறிஞ்சுவதில் சிக்கலை உண்டாக்கலாம். எனவே இவை இரைப்பை குழாயில் சேதத்தை ஏற்படுத்தி ஊட்டச்சத்துக்கள் மற்றும் கலோரிகளை உறிஞ்சுவதில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தலாம். சில மருந்துகளின் செயல் திறனையும் இது பாதிப்பதாக சொல்லப்படுகிறது.
அதிகப்படியான நார்ச்சத்து எடுத்துக் கொள்வதால் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க அதிகப் படியான தண்ணீர் எடுத்துக்கொள்வது நல்லது. அதிகப்படியான நார்ச்சத்து உணவுகளை எடுப்பதை தவிருங்கள். நடைப்பயிற்சி போன்ற சில மிதமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறிப்பாக மருத்துவ உதவி தேவைப்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது.
உடுமலை:
உடுமலை பாரத் கேஸ் விநியோகஸ்தர் சார்பில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவ மாணவியருக்கு எரிவாயு குறித்த ஒரு நாள் விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு அரசு கலைக் கல்லூரி முதல்வர் கே.கல்யாணி தலைமை வகித்தார். எரிவாயு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை கல்லூரி முதல்வர் கல்யாணி, செல்வி கேஸ் உரிமையாளர் அய்யப்பன் முன்னிலையில் வாசிக்க மாணவ மாணவியர் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் எரிவாயு சிக்கனம் , எரிவாயுவை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் சிலிண்டரை எளிதாக பெறுவது குறித்தும் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ஐந்து கிலோ சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை சுலபமாக பெறுவது குறித்தும் விளக்கப்பட்டது. பெண்கள் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் உடுமலை சமூக பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் விவேகானந்தன் கலந்துகொண்டு மாணவர்கள் உழவர் பாதுகாப்புத் திட்ட கல்வி உதவித் தொகையை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கினார்.
எரிவாயு குறித்த வினாடிவினா நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடுமலை அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் வானொலி தங்கவேலு, சமூக ஆர்வலர் விஜயகுமார்,மணி மற்றும் கனகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 23-ந் தேதி நடக்கிறது
- குறைகளை தெரிவித்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மதுரை
மதுரை மாவட்ட எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 23-ந் தேதி மாலை 4.30 மணியளவில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில், எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள்-அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள், தொழிலாளர் நல ஆய்வாளர் அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள் மற்றும் வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, மதுைர மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளை பயன்படுத்தும் பொதுமக்கள், இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இந்த தகவலை மாவட்ட வழங்கல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
- எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம், ராமேசுவரம், கீழக்கரை, ராஜசிங்கமங்கலம், திருவாடானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளைநேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரிவாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 29-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 3 மணிக்கு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
இதில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.
- அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மதுரை
மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை எரிவாயுவை பயன்படுத்துவது.
- எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் பழைய கிராமத்தை இயங்கிவரும் ஓ.என்.ஜி.சி மற்றும் கெயில் நிறுவனத்தில் பிளான்ட் மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் கலெக்டர் கூறியதாவது:-
தொழில்துறை செயலாளர் அறிவுறுத்தலின் பேரில் சீர்காழி வட்டம் பழையபா ளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் செயல்பாடு களையும், தடையின்மை சான்று பெறப்படாமல் இயக்கத்திலி ருக்கும் துறப்பணக்கிண றுளின் நிலைப்பாடு பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தில் இருந்து பயன்பாடின்றி வீணாக எரிந்து கொண்டிருக்கக்கூடிய இயற்கை
எரிவாயுவை கெயில் நிறுவனத்தினர்
பயன்படுத்து வது தொடர்பான சாத்திய கூறுகள் மற்றும் கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் அமையப்பெற்றுள்ள எரிவாயு பைப்லைன் ப்ராஜெக்ட் தொடர்பான தடையின்மைக்கான சாத்திய கூறுகள் தொடர்பாக ஆய்வுகள் நடத்தபட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இவ்வாய்வின் போது மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர்,
சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் ஓ.என்.ஜி.சி, கெயில், நிறுவனங்க ளின் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
- எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது.
- கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கொச்சியில் அதானி நிறுவனத்திற்கு சொந்தமான இயற்கை எரியவாயு நிறுவனம் உள்ளது.
இந்த நிறுவனத்தில் இருந்து எரிவாயு எடுத்து செல்லும் குழாயில் இன்று அதிகாலை திடீர் கசிவு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் குழாயில் இருந்து கசிந்த ரசாயனம் அந்த பகுதி முழுவதும் பரவியது.
இதனால் கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள களமசேரி, காக்கநாடு, எடப்பள்ளி, குசாட் பகுதியில் பலத்த துர்நாற்றம் வீசியது.
கொச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது பற்றி அறிந்ததும் அதிகாரிகள் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் நிறுவன அதிகாரிகளும் விரைந்து சென்று குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அவர்கள் கூறும்போது, குழாயில் இருந்து கசிந்த ரசாயனம், சமையல் எரிவாயுவில் கலக்கப்படும் ரசாயணம் என்றும் ரசாயன கசிவால் பொதுமக்களுக்கு பாதிப்பு எதுவும் இல்லை என்றும், குழாயில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி விரைவில் முடியும் என்றும் தெரிவித்தனர்.
- சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் ஒப்பந்த ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.
- திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார்.
இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வீட்டு உபயோகத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிபகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் அதன் அருகே நின்று இருந்த ஒப்பந்த ஊழியர் குருபாதம் முகம், கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உடனடியாக 108 மூலம் சென்னை திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பழமையான சோதனைக்கு உட்படுத்தப்படாத சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், இதில் வேலை செய்கின்ற 150 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் நடைபெற்றது
- பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
- சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பொதுகழிப்பறை, சட்டநாதர் கோவில் கீழவீதி, நகராட்சி குப்பை கிடங்கு, மற்றும் குப்பைகளை பதப்படுத்தி உரம் தயாரிக்கும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொது கழிப்பறை ஆய்வின்போது கழிவறையை சுகாதாரமாக பாதுகாத்த தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.
ஆய்வின் போது பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்பொழுது குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை எனவும், கோயில் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் சிலர் குறைகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து உடனடியாக அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.
மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மேலாளர் காதர் கான், உடன் இருந்தனர்.