search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கோரி எரிவாயு நிரப்பும் ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்
    X

    ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கோரி எரிவாயு நிரப்பும் ஆலை முன்பு ஆர்ப்பாட்டம்

    • சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் ஒப்பந்த ஊழியருக்கு காயம் ஏற்பட்டது.
    • திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு அடங்கிய கரையான்மேடு பகுதியில் வசித்து வருபவர் குருபாதம் ( 52) இவர் அத்திப்பட்டு புது நகர் பகுதியில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் எரிவாயு நிரப்பும் பகுதியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பி வீட்டு உபயோகத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வெளிபகுதிகளுக்கு லாரிகளில் எடுத்து செல்லப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று மாலை சிலிண்டர் நிரப்பி கொண்டிருந்தபோது திடீரென காலாவதியான சிலிண்டர் வெடித்ததில் அதன் அருகே நின்று இருந்த ஒப்பந்த ஊழியர் குருபாதம் முகம், கை, கால் பகுதிகளில் காயம் ஏற்பட்டு உடனடியாக 108 மூலம் சென்னை திருவொற்றியூர் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் முறையான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை எனவும் பழமையான சோதனைக்கு உட்படுத்தப்படாத சிலிண்டர்களை பயன்படுத்துவதாகவும், இதில் வேலை செய்கின்ற 150 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வேண்டுமெனவும் இது குறித்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு பெட்ரோலியம் கேஸ் ஒர்க்கர்ஸ் யூனியன் தலைமையில் நடைபெற்றது

    Next Story
    ×