எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை நடக்கிறது.அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.
எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
Published on

மதுரை

மதுரையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 20-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4.30 மணியளவில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் எண்ணெய் நிறுவன மேலாளர்கள், பெட்ரோல் பங்க் உரிமையாளர் அசோசியேசன் தலைவர்கள், எரிவாயு நுகர்வோர்கள், எரிவாயு முகவர்கள் மற்றும் தொழிலாளர் நல ஆய்வாளர், அனைத்து குடிமை பொருள் வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் கலந்து கொள்கிறார்கள்.

மதுரை மாவட்டத்தில் உள்ள சமையல் எரிவாயு உருளைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் இந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் மாவட்ட வழங்கல் மற்றும் பாதுகாப்பு அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com