என் மலர்
நீங்கள் தேடியது "சிலிண்டர் தட்டுப்பாடு"
- 2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
- மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
தமிழகம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களை உள்ளடக்கிய தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.
இந்த சங்க உறுப்பினர்களுக்கு சொந்தமாக சுமார் 5,500 சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் மத்திய அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வந்தன. இவை சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் கியாசை சிலிண்டரில் நிரப்பும் பாட்டிலிங் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வந்தன.
இதற்காக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒப்பந்தம் கோரப்பட்டு லாரிகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே அமலில் இருந்த ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் முடிவடைந்தது. எனவே புதிய ஒப்பந்தத்துக்கு எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அந்த ஒப்பந்தத்தில் 21 டன் கியாஸ் ஏற்றும் 3 ஆக்சில் லாரிகளுக்கு முன்னுரிமை போன்ற விதிமுறைகள் இருந்தன. இந்த விதிமுறைகளை தளர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் செய்தனர். இதையடுத்து எண்ணெய் நிறுவனங்கள் சில நிபந்தனைகளை தளர்த்தின.
இதற்கிடையே 3,500 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில் 2,800 கியாஸ் டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே வேலைக்கான அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள 700 டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக விவாதிக்க நேற்று நாமக்கல்லில் தென் மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க அவசர பொதுக்குழு கூட்டம் சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் தலைவர் சண்முகப்பா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
2025-30-ம் ஆண்டுக்கான டேங்கர் லாரிகள் ஒப்பந்தத்தில் பல்வேறு புதிய விதிமுறைகளை ஆயில் நிறுவனங்கள் அறிவித்தன.
இந்த நிலையில் 3,500 டேங்கர் லாரிகளுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ஒப்பந்தம் கோரிய நிலையில், 2,800 டேங்கர் லாரிகளுக்கு மட்டுமே எண்ணெய் நிறுவனங்கள் அனுமதி கடிதம் வழங்கி உள்ளன. மீதமுள்ள டேங்கர் லாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
எனவே 2016-ம் ஆண்டுக்கு பிறகு பதிவு செய்யப்பட்ட தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று(நேற்று) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம்.
இதையொட்டி சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் பிளாண்டுகளுக்கு கியாஸ் கொண்டு செல்லும் பணி நிறுத்தி வைக்கப்படும். அடுத்த கட்டமாக கியாஸ் இறக்கும் பணியும் நிறுத்தப்படும். இந்த போராட்டத்தால் 6 மாநிலங்களில் கியாஸ் தட்டுப்பாடு ஏற்படும். ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் லாபம் ஈட்டும் எண்ணெய் நிறுவனங்கள் அனைத்து லாரிகளுக்கும் வேலை கிடைக்கும் என்பதற்கான அங்கீகார கடிதத்தை வழங்க வேண்டும்.
அதுவரை தென் இந்தியா முழுவதும் உள்ள 5 ஆயிரம் கியாஸ் டேங்கர் லாரிகளையும் ஓட்டாமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து உள்ளோம். தகுதியான அனைத்து கியாஸ் டேங்கர் லாரிகளுக்கும் வேலைக்கான உத்தரவு வழங்கும் வரை காலவரையற்ற போராட்டம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பதிவு செய்து 7 நாட்களுக்கு மேலாகியும் சிலிண்டர் வழங்கப்படாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தியாவசிய தேவையாக கருதப்படும் சமையல் கியாஸ் கடந்த 4 வருடங்களில் படிப்படியாக அதிகரித்துள்ளது. முன்பு ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டர் இப்போது ரூ.700-ஐ தாண்டி விட்டது.
இதில் மத்திய அரசு மானியமாக ரூ.150 கொடுத்து வருகிறது. வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் பல்வேறு சீரமைப்புகளை எண்ணை நிறுவனங்கள் செய்து வருகின்றன.
வாடிக்கையாளர்களுக்கு கியாஸ் பதிவு செய்த 3 நாட்களில் சிலிண்டர் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். விற்பனை விலை எவ்வளவு நிர்ணயிக்கப்படுகிறதோ அதற்கு மேலாக வசூலிக்க கூடாது என்பது போன்ற விதிமுறைகளை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமையல் கியாஸ் தட்டுப்பாடு நிலவி வருகிறது. வினியோகஸ்தர்களுக்கு போன் செய்து கேட்டும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் லோடு வரவில்லை அதனால் தாமதமாகிறது என்று காரணம் கூறுகிறார்கள்.
கியாஸ் நிரப்பும் தொழிற்சாலையில் ஊழியர்கள் குறைவாக இருந்ததால் நிரப்பும் பணி பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஒரு கியாஸ் வினியோகஸ்தர் கூறியதாவது:-
கடந்த வாரம் 3 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டதால் கியாஸ் நிரப்பும் ஊழியர்கள் சிலர் விடுமுறையில் சென்று விட்டனர். அதனால்அந்த பணி பாதிக்கப்பட்டது. குறைந்த அளவில் தான் சிலிண்டர் வினியோகிக்கப்பட்டது. எங்களுக்கு வரவேண்டிய லோடு தாமதம் ஆனதால் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் தாமதமாகி வருகிறது.
சிலிண்டர் வினியோகம் படிப்படியாக சீராகி வருகிறது. அதனால் இன்னும் ஒரிரு நாளில் தட்டுப்பாடு பிரச்சனை தீர்ந்து விடும் என்றார்.
வீடுகளுக்கு சிலிண்டர்களை வினியோகிக்கும் ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் அநாகரீகமாக நடந்து கொள்வதோடு சிலிண்டர் விலையை விட ரூ.40, ரூ.50 கூடுதலாக தந்தாக வேண்டும் என்று அடாவடித்தனமாக பேசுகிறார்கள். கூடுதல் தொகை தரவில்லை என்றால் சிலிண்டர் அடுத்த மாதம் சப்ளை செய்யமாட்டேன். அலைந்து திரியுங்கள் என்று தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகின்றனர்.
கியாஸ் ஏஜென்சிகளிடம் வேலை பார்க்கும் ஊழியர்களின் தரம் தாழ்ந்த நடவடிக்கையால் எண்ணை நிறுவனம் மீதும், சம்பந்தப்பட்ட ஏஜென்சிகள் மீதும் வாடிக்கையாளர்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுகிறது. சிலிண்டர் வழங்கும் ஊழியர்கள் பொதுமக்களிடம் எப்படி நடக்க வேண்டும், கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற உறுதிமொழியினை வினியோகஸ்தர்கள் கட்டாயம் பின்பற்ற எண்ணை நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே வாடிக்கையாளர்களின் ஆதங்கமாக உள்ளது. #GasCylinder #CookingGas






