வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள் உட்பட பல பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம்.
வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு
Published on: 

வங்கதேசத்தில் இருந்து ஆயத்த ஆடைகள் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவிற்கு ஆயத்த ஆடைகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்கள், பருத்தி, நெகிழி போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இந்நிலையில், வங்கதேசத்தில் இருந்து தரைவழியாக இந்தியாவிற்குள் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

ஆனால் அதே சமயம் மும்பை, கொல்கத்தா துறைமுகங்கள் வழியாக வங்கதேச பொருட்களை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் சில இந்தியப் பொருட்களுக்கு வங்கதேசம் தடை விதித்த நிலையில், இதற்கு பதிலடி தரும் விதமாக மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com