search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ganesha idol"

    • கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.
    • விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டியில் கடந்த 22-ந் தேதி விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

    நிகழ்வில் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.

    பேட்டை சிவா, கோட்டூர் ராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊர்வலத்தை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி, மடப்புரம், ரொக்க குத்தகை, அண்ணாநகர், பாரதியார் தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் திருத்துறைப்பூண்டி சன்னதி தெருவில் இருந்து புறப்பட்டது.

    ஊர்வலத்தை பா. ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கருப்பு முருகானந்தம் தொடங்கி வைத்தார்.

    விழா ஏற்பாடுகளை இந்து முன்னணி நிர்வாகிகள் விக்னேஷ், மாதவன், பா.ஜனதா மாவட்ட துணை தலைவர் சிவகுமார், மாவட்ட செயலாளர் வினோத், நகர தலைவர் அய்யப்பன், ஒன்றிய தலைவர் பூபதி, முன்னாள் மாவட்ட செயலாளர் இளசுமணி, முன்னாள் மாவட்ட பொதுச்செயலாளர் கணேசன் ஆகியோர் செய்து இருந்தனர்.

    முடிவில் இந்து முன்னணி மாவட்ட துணை தலைவர் ஜெயபால் நன்றி கூறினார்.

    • இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
    • மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை.

    பல்லடம், செப்.24-

    பல்லடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் 26 விநாயகா் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த நிலையில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக கடைவீதியில் இந்து மக்கள் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சித்தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு பேசுகையில்:-

    விநாயகா் சிலைகளை வைத்து வழிபடுவது என்பது வழிபாட்டு உரிமையுடன் தொடா்புடையதாகும். விநாயகா் சதுா்த்தி தினத்தை புராண நம்பிக்கைகளின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கத்தல்ல என்பதால் வாழ்த்து தெரிவிக்க மாட்டோம் என்று தற்போதைய அரசு தெரிவித்துள்ளது. பல இடங்களில் புதிதாக விநாயகா் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கவில்லை. மகளிா் உரிமைத் தொகை திட்டத்தில் பல பேருக்கு தொகை சென்றடையவில்லை. இந்தத் திட்டத்தில் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் உதவித்தொகை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் காலனி பிரபு, மாநில இளைஞர் அணி தலைவர் ஹோம் கார்டு பாலாஜி, கோவை மாவட்ட தலைவர் திருமுருகனார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் பிர்லா போஸ், பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், நகரத் தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் விநாயகர் சிலைகள் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அவிநாசி பாளையம் அருகே உள்ள குளத்தில் கரைக்கப்பட்டது.

    விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    • கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம்.
    • ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம்.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ந் தேதி கொண்டாடப்பட்டது. இதைத்தொடர்ந்து முக்கிய நகரங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்காக வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகின்றன.

    இந்நிலையில் சில இடங்களில் விநாயகர் சிலைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பந்தலில் விநாயகப் பெருமானின் பல்வேறு வடிவங்களை காட்சிபடுத்தி உள்ளனர். அந்த வகையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் ஜெய்ராம்பூர் காலனியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு பந்தலில் விநாயகப் பெருமானின் 108 விதமான வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளன.

    சங்கு, சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸ், சாய்பாபா, சிவன், கிருஷ்ணா மற்றும் பல வடிவங்களில் சிலைகள் இடம்பெற்றுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த அனில் ஆகா கூறுகையில், நாங்கள் கடந்த 40 வருடங்களாக இந்த காலனியில் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான கருபொருளுடன் விநாயகப் பெருமானை வடிவமைத்து பிரதிஷ்டை செய்கிறோம். இந்த ஆண்டு 108 விதமான வடிவங்களில் விநாயகப் பெருமானை சித்தரித்துள்ளோம் என்றார். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பேச்சுவார்த்தையை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்
    • போலீசார் விசாரணை

    திமிரி:

    ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த பரதராமி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குட்டை புறம்போக்கு இடத்தில் இரவோடு இரவாக சமன் செய்து கல் விநாயகர் சிலை வைத்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதனால் அங்கு பொதுமக்கள் கூடினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு, திமிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்க்கரசி மற்றும் கிராம நிர்வாக அலுவலர் நேரில் சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பின்னர் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.
    • நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும்.

    மாமல்லபுரம்:

    இன்று விநாயகர் சதூர்த்தி கொண்டாட வைக்கப்படும் சிலைகளை மாமல்லபுரம் கடலில் வரும் 24ம் தேதி கரைக்க போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்., செங்கல்பட்டு மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள 365 சிலைகளும், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவின்படி "பிளாஸ்டர் ஆப் பாரீஸ்" ரசாயனம் பயன்படுத்தப்படாத சிலைகள் என சிலை வைத்துள்ள அமைப்பினர் கூறி அனுமதி வாங்கியுள்ளனர்.

    இந்த சிலைகளை செங்கல்பட்டு மாவட்ட கடலோர பகுதிகளான மாமல்லபுரம், சதுரங்கபட்டினம், கடலூர், கடப்பாக்கம், பெரியகுப்பம் பகுதிகளுக்கு பக்தர்கள் கரைக்க வரும் போது சிலைகள் பரிசோதனை செய்யப்படும் அதில் ரசாயன கலவை இருப்பது தெரியவந்தால் கடலில் கரைக்க அனுமதி கிடையாது. அதேபோல் சிலைகளை மாட்டு வண்டி, மீன்பாடி ஆட்டோ, ரிக்ஷா, தள்ளுவண்டி போன்றவைகளில் கொண்டுவரவும் அனுமதி கிடையாது. டிராக்டர், மினிலாரி, வேன் போன்ற நான்கு சக்கர வாகனத்தில் மட்டுமே கொண்டு வரவேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    • இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கஜுவாக்காவில் 17 அடி உயரமுள்ள ஸ்ரீ அனந்த பஞ்சமுக மகா கணபதி சிலை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த விநாயகர் சிலையை வடிவமைப்பதற்காக அனக்கா பள்ளி மாவட்டம் மற்றும் கொல்கத்தாவில் இருந்து 5 டன் எடையுள்ள களிமண் கொண்டுவரப்பட்டு சிலை செய்யப்பட்டு உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பிரபல சிலை வடிவமைப்பு கலைஞர் கொத்த கொண்ட நாகேஷ் தலைமையில்சிலையை வடிவமைப்பதற்காக மேற்குவங்கம் மற்றும் ஒடிசாவை சேர்ந்த 24 பேர் கொண்ட குழுவினர் சிலை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்தியாவில் மிகப்பெரிய விநாயகர் சிலை இதுதான் என விழாக்குழுவினர் தெரிவித்தனர். 

    • இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.
    • குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    திருவள்ளூர்:

    விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் விநாயகர் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டும் திருவள்ளூரில் 63 இடங்களிலும், திருத்தணி 98, ஊத்துக்கோட்டை 204, கும்மிடிப்பூண்டி 67, பொன்னேரி 20 உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 452 சிலை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

    இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத வகையில் விநாயகர் சிலைகளை வைக்க வேண்டும், குறைந்த அளவிலான உயரம் கொண்ட விநாயகர் சிலைகளை வைப்பதை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு தெரிவித்து உள்ளது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் காக்களூர், திருத்தணி, வெங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் விநாயகர் சிலை செய்வதற்கான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து பல்வேறு வடிவங்களில், பல்வேறு வண்ணங்களில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு, ஆர்டர் கொடுத்தவர்களுக்கு கொடுக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் திருவள்ளூர் - ஆவடி சாலையில் காக்களூர் பகுதியில் உள்ள விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது விநாயகர் சிலையில் அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள் மற்றும் ரசாயன பொருட்களைக் கொண்டு விநாயகர் சிலை செய்யப்படுகின்றனவா என ஆய்வு செய்தனர்.

    • மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள்
    • சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க தடை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.

    இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், ராஜரா ஜன், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் மற்றும் இந்து-முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    பொது மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் அமைப்பினர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் உரிய முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்த போலீ சாரிடம் அனுமதி பெற வேண்டும். கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

    விநாயகர் சிலை அமை விடம் தீ தடுப்பு வசதிகளுடன் அமைந்திருக்க வேண்டு ம். அங்கு எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைத்திருக்க கூடாது. மேலும் சிலை அமைவிடத்தில் முதலுதவி பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்வதற்காக தற்காலிக மின்சாரம் பெற விரும்புவோர், உரிய அதிகாரிகளிடம் முன்கூ ட்டியே விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை வண்ணங்களால் ஆன சிலைகளுக்கு அனுமதி இல்லை.

    விநாயகர் சிலையின் உயரம் 10 அடியை தாண்டி இருக்க கூடாது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மினிலாரி, டிராக்டர்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் சிலைகளை கொண்டு செல்லலாம். மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாக னங்களில் சிலைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாக னத்தில் பயணிப்போர் எண்ணிக்கை மோட்டார் வாகன சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதை களில் பட்டாசுகள் வெடிக் கக்கூடாது. நீர்நிலைகளில் சிலைகளை விசர்ஜனம் செய்யும் முன்பாக மலர்கள், துணிகள், அலங்கார பொருட்களை தனியாக பிரித்துவிட வேண்டும்.

    கோவையில் முத்தண்ணன் குளம், சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செல்லும் பவானி ஆறு, அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை, முக்கோணம் ஆறு, பழத்தோட்டம், சிறுமுகை, சாடிவயல், வாளையார் அணை, ஆத்துப்பாறை, ஆழியாறு, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் ஆகிய பகுதிகளில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவிடம் ஆலோசனை செய்தனர்.
    • 15 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாக உருவான விநாய கருக்கு வரும் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்திவிழா நாடு முழுவதும் 18-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.

    இதனை ஒட்டி வீடுகளிலும் வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். புதுவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் ஆண்டுதோறும் வழிபட்டு வருகின்றனர்.

    இந்த ஆண்டும் புதுவையில் நகரம் மற்றும் கிராமங்களிலும் முக்கிய சந்திப்புகளை விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.

    புதுவை திலாசுப்பேட்டை சேர்ந்த இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலையை செய்து வைக்க திட்டமிட்டனர். இதற்காக இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவிடம் ஆலோசனை செய்தனர்.

    அவர் ரசாயன கலப்பில்லாமல் காகிதங்களைக் கொண்டு விநாயகர் சிலை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.

    இதனை தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதி மக்களிடம் 450 கிலோ காகித தாள்களை சேகரித்தனர். 200 கிலோ பசை கொண்டு 4 மாதங்களாக விநாயகர் சிலையை மாண–வர்களும், இளைஞர்களும் உருவாக்கி னர். மூங்கில் குச்சிகளை வைத்து காகிதங்களை அதனுடன் சுற்றி விநாயகர் கிதார் வாசிப்பது போல் சிலையை உருவாக்கியு ள்ளனர். விநாயகர் சிலைகள் ரசாயன கலப்புடன் கடலில் கரைக்கப்படும் போது கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த காகித விநா–யகரை உருவாக்கியுள்ளதாக நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் தெரிவித்தார்.

    15 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாக உருவான விநாய கருக்கு வரும் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது. 

    • புதிய கட்டுப்பாடுகள்
    • பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை பயன்படுத்த வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பாக நடைபெறுவதை உறுதி செய்வது குறித்த ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி பேசினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

    ராணிப்பேட்டை மாவட்டத்தில் விநாயகர் சிலை நிறுவிட சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விண்ணப்பத்துடன் சிலை நிறுவ உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் தனியார் இடமாக இருப்பின் நில உரிமையாளர் இசைவுக்கடிதமும், பொது இடமாக இருப்பின் சம்பந்தப்பட்ட துறையின் ஆட்சேபணையில்லாச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

    தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொட்டகைக்கு உட்பகுதியில் வைக்கக் கூடாது. விநாயகர் சதுர்த்தி அன்று நிறுவ உத்தேசி க்கப்பட்டுள்ள சிலைகள் அதன் அடிப்பாகம் உட்பட மொத்தம் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    மாற்று மதத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் மருத்துவமனைகள்,கல்வி நிறுவனங்கள் அருகாமை யில் சிலைகள் அமைக்க க்கூடாது. கூம்பு வடிவ ஒலிபெருக்கி அமைப்பது தவிர்த்து பெட்டி வடிவிலான ஒலிபெரு க்கிகளை பயன்படுத்த வேண்டும்.

    இவ்விழா தொடர்பாக கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பின் அவற்றின் ஒலி அளவும் அனுமதிக்கப்பட்ட அளவிற்குள்ளேயே இருத்தல் வேண்டும். விழாக்குழுவினர் சட்டத்திற்கு புறம்பான வகையில் மின்சாரத்தினை பயன்படுத்துவதை தவிர்க்க உரிய கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். விழாக்குழுவினர் சார்பாக இரு தன்னார்வ லர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணி மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். மற்ற மதத்தினர்களின் வழிபாட்டினை, நம்பிக்கை களை இழிவுபடுத்தும் வகையில் கோஷங்கள் எழுப்ப கூடாது.

    5 நாளில் கரைப்பு

    சிலை நிறுவப்பட்ட நாளிலிருந்து 5 நாட்களுக்குள் சிலைகள் கரைப்பதற்கு விழாக்குழுவினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கான ஊர்வலங்கள் காவல் துறை யினரால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே சென்று கரைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • 18-ந் தேதி நாடு முழுவதும் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது
    • சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. வருகிற 18-ந் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.

    இந்த நிலையில் விநாயகர் சிலை வைத்து பூஜை செய்வதற்காக வந்தவாசி சன்னதி தெருவில் மாசு இல்லாத பேப்பர் கூழ் கொண்டு விதவிதமான விநாயகர் சிலை தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    அவ்வகையில் எலி வாகன பிள்ளையார், மயில்வாகன பிள்ளையார், சிம்ம வாகன பிள்ளையார், குழந்தை பிள்ளையார், மும்மூர்த்தி பிள்ளையார், விநாயகர் சிலைகள் சிலை வடிவமைப்பாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    பலவிதமான வண்ணங்களை கொண்டு தயாராகும் விநாயகர் சிலைகளை வந்தவாசி சுற்றியுள்ள சென்னாவரம், பிருதூர், மருதாடு, தென்னாங்கூர், தெள்ளார், பொண்ணூர், கீழ் கொவளைவேடு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து பக்தர்கள் வாங்கி செல்வார்கள் என்று சிலை தயாரிப்பாளர்கள் தெரிவித்தனர்.

    • சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.
    • எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    கோவை:

    விநாயகர் சதுர்த்தி விழா அடுத்த மாதம் 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அப்போது பக்தர்கள் வீட்டில் சிறிய அளவிலான பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபடுவது வழக்கம். இதுதவிர பொது இடங்களிலும் பெரிய வடிவில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து பூஜைகள் செய்து வழிபாடு நடத்துவர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சுண்டக்காமுத்தூர், செல்வபுரம், தெலுங்குபாளையம், புட்டுவிக்கி சாலை, கவுண்டம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிள்ளையார் சிலைகள் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

    அங்கு சனீஸ்வரருடன் அமர்ந்திருக்கும் பிள்ளையார், விவசாய விநாயகர், கடல்கன்னி உருவத்தில் அருள்பாலிக்கும் பிள்ளையார், சிங்க வாகனங்களில் எழுந்தருளிய விநாயகர்.

    முருகன் புல்லட் ஓட்ட பின்சீட்டில் பயணிக்கும் பிள்ளையார், ராஜகணபதி, டிராகனில் வீற்றிருக்கும் விநாயகர், மயில் மீது அமர்ந்த பிள்ளையார், சிவன் சிலையை ஏந்தி நிற்கும் பாகுபலி விநாயகர் என்று பல்வேறு வடிவங்களில் சிலைகள் வடிக்கப்பட்டு வருகின்றன.

    கோவையில் விநாயகர் சிலைகளை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் கலைஞர்கள் கூறுகையில், நாங்கள் வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக களிமண் சிலைகளையும், பொதுஇடத்தில் வைப்பதற்காக பிரமாண்ட வடிவில் சிலைகளையும் தயாரித்து வருகிறோம்.

    நாங்கள் வடிவமைக்கும் விநாயகர் சிலைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் இருக்கும். அதாவது தண்ணீரில் எளிதாக கரையும் கிழங்கு மாவு, ஓடக்கல் மாவு, பேப்பர் கூழ் ஆகியவற்றை பயன்படுத்தி சிலைகள் தயார் செய்யப்படுகின்றன. சிலையின் தாங்கு திறனை உறுதி செய்வதற்காக உட்புறத்தில் சவுக்கு கட்டைகளை பயன்படுத்தி உள்ளோம்.

    அப்படி தயாராகும் சிலைகளை 2, 3 நாட்கள் காயவைத்து, அதன்பிறகு சிமெண்ட் பேப்பர் ஒட்டி, அதில் வாட்டர் கலர் மூலம் பெயிண்ட் அடித்து சிலைகள் செய்கிறோம். அவற்றில் செயற்கை ரசாயனங்கள் மற்றும் எனாமல் கலப்பது இல்லை. எங்களிடம் 2 அடி முதல் 10 அடி உயரம் வரை பிள்ளையார் சிலைகள் விற்பனைக்காக தயார்நிலையில் உள்ளன.

    தமிழகம் முழுவதிலும் விநாயகர் சிலைகள் செய்வதற்கான மூலப்பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்து உள்ளது. எனவே பிள்ளையார் சிலைகளின் விலையும் தற்போது சிறிய அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது.

    அதன்படி சிறிய அளவிலான சிலைகள் ரூ.200 முதல் ரூ.2 ஆயிரம் வரையும், 10 அடி உயரம் உடைய சிலைகள் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையும் விற்கப்பட்டு வருகிறது.

    கோவையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த மே மாதம் முதலே பணிகளை தொடங்கி விட்டோம். எங்களுக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்தும் ஆர்டர்கள் வந்து குவிந்து உள்ளன என தெரிவித்தனர்.

    கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பிள்ளையார் சிலைகள் வடிவமைக்கப்பட்டு வருவது பொதுமக்களிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×