search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவையில் பிறமத வழிபாட்டு தலம் அருகில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது
    X

    கோவையில் பிறமத வழிபாட்டு தலம் அருகில் விநாயகர் சிலை வைக்கக்கூடாது

    • மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் வேண்டுகோள்
    • சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதைகளில் பட்டாசுகள் வெடிக்க தடை

    கோவை,

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான முன்னேற்பாட்டு ஆலோசனை கூட்டம் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது.

    இதில் மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம், ராஜரா ஜன், மாவட்ட வருவாய் அதிகாரி ஷர்மிளா, கலெக்ட ரின் நேர்முக உதவியாளர் (பொது) கோகிலா, மாநகராட்சி துணை கமிஷனர் சிவக்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் பண்டரிநாதன், கோவிந்தன் மற்றும் இந்து-முஸ்லிம் அமைப்பினர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் நிகழ்ச்சியில் பேசும்போது கூறியதாவது:-

    பொது மற்றும் தனியார் இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் அமைப்பினர் போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் உரிய முன்அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்த போலீ சாரிடம் அனுமதி பெற வேண்டும். கூம்புவடிவ ஒலிபெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது.

    விநாயகர் சிலை அமை விடம் தீ தடுப்பு வசதிகளுடன் அமைந்திருக்க வேண்டு ம். அங்கு எளிதில் தீப்பற்றும் பொருட்களை வைத்திருக்க கூடாது. மேலும் சிலை அமைவிடத்தில் முதலுதவி பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

    விநாயகர் சிலைக்கு அலங்காரம் செய்வதற்காக தற்காலிக மின்சாரம் பெற விரும்புவோர், உரிய அதிகாரிகளிடம் முன்கூ ட்டியே விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும். பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் செயற்கை வண்ணங்களால் ஆன சிலைகளுக்கு அனுமதி இல்லை.

    விநாயகர் சிலையின் உயரம் 10 அடியை தாண்டி இருக்க கூடாது. மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற மத வழிபாட்டு தலங்களுக்கு அருகில் சிலைகள் அமைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மினிலாரி, டிராக்டர்கள் உள்ளிட்ட நான்கு சக்கர வாகனங்களில் சிலைகளை கொண்டு செல்லலாம். மாட்டு வண்டி, மீன் வண்டி மற்றும் 3 சக்கர வாக னங்களில் சிலைகளை எடுத்து செல்ல அனுமதி இல்லை.

    விநாயகர் சிலைகளை சுமந்து செல்லும் வாக னத்தில் பயணிப்போர் எண்ணிக்கை மோட்டார் வாகன சட்டத்துக்கு உட்பட்டு இருக்க வேண்டும். சிலைகள் அமைவிடம் மற்றும் ஊர்வல பாதை களில் பட்டாசுகள் வெடிக் கக்கூடாது. நீர்நிலைகளில் சிலைகளை விசர்ஜனம் செய்யும் முன்பாக மலர்கள், துணிகள், அலங்கார பொருட்களை தனியாக பிரித்துவிட வேண்டும்.

    கோவையில் முத்தண்ணன் குளம், சிறுமுகை, எலகம்பாளையம், மேட்டுப்பாளையம் சுப்பிரமணியர் கோவில் மற்றும் தேக்கம்பட்டி ஆகிய பகுதிகளில் செல்லும் பவானி ஆறு, அம்பராம்பாளையம் ஆறு, நொய்யல் ஆறு, உப்பாறு, நடுமலை ஆறு, ஆனைமலை, முக்கோணம் ஆறு, பழத்தோட்டம், சிறுமுகை, சாடிவயல், வாளையார் அணை, ஆத்துப்பாறை, ஆழியாறு, குறிச்சிகுளம், குனியமுத்தூர் குளம், சிங்காநல்லூர் குளத்தேரி, வெள்ளக்கிணறு குளம் ஆகிய பகுதிகளில் மட்டும் விநாயகர் சிலைகளை விசர்ஜனம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×