என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆந்திராவில் 1 லட்சம் சேலைகளால் விநாயகர் சிலை பிரதிஷ்டை
    X

    ஆந்திராவில் 1 லட்சம் சேலைகளால் விநாயகர் சிலை பிரதிஷ்டை

    • சேலைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி விநாயகர் சிலையை தயார் செய்துள்ளனர்.
    • விநாயகர் சிலையை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், பழைய கஜுவாகா லங்கா மைதானத்தில் 86 அடி உயரத்தில் 1 லட்சம் பட்டு சேலைகளை கொண்டு ஸ்ரீ சுந்தர வஸ்திர கணபதி சிலை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்காக கொல்கத்தா மற்றும் சூரத்தில் இருந்து 1 லட்சம் சேலைகள் வரவழைக்கப்பட்டன.

    சேலைகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி விநாயகர் சிலையை தயார் செய்துள்ளனர். விநாயகர் சிலை தயார் செய்யும் கலைஞர்கள் பெரும்பாலான வேலைகளை முடித்து விட்டனர்.

    சேலைகளால் தத்ரூபமாக உருவாக்கப்பட்ட விநாயகர் சிலையை ஏராளமான பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா நிறைவு நாளில் சேலைகள் பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளதாக விழா குழுவினர் தெரிவித்தனர்.

    Next Story
    ×