என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிறப்புறுப்பு"

    • சுத்தமாக இல்லாதது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணம்.
    • பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட மன அழுத்தமும் காரணமாக அமைகிறது.

    மாதவிடாய் காலங்களிலோ, அந்தரங்க பகுதியில் உள்ள முடிகள் அதிகமாகும்போதோ அல்லது பலநேரங்களில் நமக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படும். அந்த இடத்தில் சொரியும்போது சிலநேரங்களில் காயமாகவும் மாறக்கூடும். சிலர் இதற்கு மஞ்சள் தடவுவது, தேங்காய் எண்ணெய் தடவுவது என சில வைத்தியங்களை செய்வர். ஆனால் இந்த இடத்தில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து அதை சரிசெய்ய வேண்டும். பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து பார்ப்போம்.

    பிறப்புறுப்பு அரிப்பு

    பிறப்புறுப்பு அரிப்பு என்பது பிறப்புறுப்புப் பகுதியில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் மற்றும் அசௌகரியம் ஆகும்.

    பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்பட காரணங்கள்

    சுத்தமாக இல்லாதது

    இது பெண்களின் பிறப்புறுப்பு அரிப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மலம் கழித்த பிறகு அல்லது சிறுநீர் கழித்த பிறகு பிறப்புறுப்பை ஒழுங்காக சுத்தம் செய்யவில்லை என்றால் அரிப்பு ஏற்படும். மாதவிடாய் காலத்தில் சானிட்டரி நாப்கின்களை அடிக்கடி மாற்றவேண்டும். அதுபோல உடலுறவுக்குப் பிறகும் சுத்தம் செய்யவேண்டும். வியர்வை மற்றும் சிறுநீர், முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், பிறப்புறுப்பு பகுதியில் பாக்டீரியா உருவாகி வீக்கத்தை ஏற்படுத்தும். இது நீண்ட நாட்கள் தொடர்ந்தால், அது வஜினிடிஸாக உருவாகலாம். அந்த நேரத்தில் பிறப்புறுப்பு பகுதி பச்சை அல்லது மஞ்சள் சளியை சுரக்கக்கூடும். 

    மேலும் பெண்கள் தங்கள் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியை அடிக்கடி சுத்தம் செய்யக்கூடாது. ஏனெனில் இந்த முடி பிறப்புறுப்பு பகுதியை பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் முடியை நீக்குவது கீறல்கள் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். வேண்டுமானால் அவ்வப்போது முடியை வெட்டிக்கொள்ளலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். 

    ஒவ்வாமை

    பெண்கள் அந்தரங்கப் பகுதியை சுத்தம் செய்ய சோப்பு அல்லது வேதிப்பொருட்கள் அதிகம் நிறைந்த ஜெல்களை பயன்படுத்தக்கூடாது. இந்த பொருட்கள் பெரும்பாலும் வலுவான காரத்தன்மை கொண்டவை. இது யோனியின் சாதாரண pH அளவை மாற்றி, வறட்சி மற்றும் அரிப்புக்கு வழிவகுக்கின்றன. 

    தோல் நோய்கள்

    தோல் நோய்கள் ஏற்பட்டாலும் பிறப்புறுப்பு பகுதியில் சிவத்தல், எரிச்சல் மற்றும் அரிப்பு ஏற்படலாம். 

    பிறப்புறுப்பு அரிப்புக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாக உள்ளது

    பாலியல் ரீதியாக பரவும் நோய்கள்

    ஆண்களை விட பெண்கள் பாலியல் ரீதியாக பரவும் நோய்களுக்கு ஆளாகிறார்கள். பிறப்புறுப்பு மருக்கள், பிறப்புறுப்பு ஹெர்பெஸ், ட்ரைக்கோமோனியாசிஸ் மற்றும் அந்தரங்கப் பேன்கள் (அந்தரங்க முடியில் வாழும் சிறிய பூச்சிகள்) போன்ற சில பொதுவான நோய்கள் உள்ளன. இந்த நோய்கள் பொதுவாக பிறப்புறுப்பு பகுதியில் எரிச்சல், அரிப்பு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகின்றன. 

    மன அழுத்தம் 

    சில ஆய்வுகள் மன அழுத்தமும் பிறப்புறுப்பு அரிப்புக்கு ஒரு காரணம் என கூறுகின்றன. நீண்டகால மன அழுத்தத்தை அனுபவிப்பவர்களுக்கு பெரும்பாலும் ஹார்மோன் கோளாறுகள் ஏற்படும் அபாயம் அதிகம். இந்த நேரத்தில், பாக்டீரியாக்கள் பிறப்புறுப்புகளை ஆக்கிரமித்து அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாதவிடாய் நின்ற நிலையில் உள்ள பெண்களில், நாளமில்லா சுரப்பிகள் குறைவதால் யோனி சளிச்சுரப்பி மெல்லியதாகி, பிறப்புறுப்புகள் வறண்டு அரிப்பு ஏற்படுகிறது.

    • மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார்.
    • இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மனைவியின் மீது சந்தேகப்பட்டு அவரது பிறப்புறுப்பில் துளையிட்டு பூட்டு போட்டு கொடுமைப்படுத்திய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மனைவி தற்போது நலமாக இருக்கிறார். அவர் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் மே 16 ஆம் தேதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மே 11 அன்று நடந்துள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நேபாளம் நாட்டை சேர்ந்த இந்த தம்பதி வேலை தேடி புனே நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்றும் வந்த இடத்தில் மனைவியின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவன் அவளது பிறப்புறுப்பை ப்ளேடு வைத்து காயப்படுத்தி, ஆணியால் துளையிட்டு பூட்டு போட்டுள்ளான் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்ட மனைவியின் வாக்குமூலத்தை காவல்துறையினர் பதிவு செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட கணவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×