என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர் மாயம்"

    • 23 வயது பெண் செவிலியர் கடலூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார்.
    • அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    கடலூர்:

    கடலூர் செம்மண்டலம் சேர்ந்த 23 வயது பெண் செவிலியர் கடலூர் தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று பெண் செவிலியர் வழக்கம் போல் மருத்துவமனைக்கு வேலைக்கு சென்றவர் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவி ரேவதி (33). செவிலியர்.
    • அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரேவதி கிடைக்கவில்லை.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி பா.நஞ்சகவுண்டன்பாளையம் வேங்கையம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரகுபதி( 42). பெயிண்டர்.

    இவரது மனைவி ரேவதி (33). செவிலியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில் ரேவதி கடந்த 6-ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். ஆனால் அவர் மீ்ண்டும் வீடு திரும்பவில்லை.

    அக்கம் பக்கம், உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் ரேவதி கிடைக்கவில்லை.

    இது குறித்து ரகுபதி கோபிசெட்டிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரேவதியை தேடி வருகின்றனா்.

    ×