என் மலர்
நீங்கள் தேடியது "public shock"
- குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம்.
- நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அங்கு வாரம் ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் பொருத்தியுள்ள பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை பிடித்தனர். இந்த நிலையில், குடிநீரில் புழுக்கள் நிறைந்தும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் 7 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியாது. குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம். இப்போது குடிநீருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அவினாசி:
அவினாசியை அடுத்த ஆட்டையாம் பாளையம் மாரியம்மன் கோவில் வீதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. நேற்று மாலை 6 மணி அளவில் வீட்டில் இருந்த பெண்கள், குழந்தைகள் அனைவரும் டி.வி. பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது சரவணகுமார் என்பவரது வீட்டிற்குள் 2 குரங்குகள் ஒன்றன்பின் ஒன்றாக நுழைந்து சமையல் அறைக்குள் சென்று பாத்திரங்களை உருட்டும் சத்தம் கேட்டது. இதையடுத்து பெண்கள் ஒடிச் சென்று பார்த்த போது அங்கு 2 குரங்குகள் இருந்தன. குரங்குகளை விரட்ட முயன்ற போது முறைத்த படி அவர்கள் மீது பாய முயற்சித்தது. இதனால் பெண்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடி விட்டனர். அந்தக் குரங்குகள் வீட்டில் இருந்த மாம்பழம் காய்கறிகள் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அடுத்தடுத்த வீட்டிற்குள் நுழைய முற்பட்டது. அப்போது பொதுமக்கள் அவைகளை விரட்டி அடித்தனர்.
இதையடுத்து அந்த குரங்குகள் ரோட்டில் நடந்து செல்பவர்களின் பின்னால் சென்று அவர்கள் கையில் வைத்திருந்த பையை பிடுங்கியது. இதனால் அவர்களும் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து பொதுமக்கள் குரங்குகளை விரட்டிய பின்னர் அந்த குரங்குகள் அங்கிருந்த செல்போன் டவர் மீது ஏறி உட்கார்ந்து கொண்டன.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ஆட்டையாம்பாளையம் பகுதியில் 2 குரங்குகள் வீடுகளில் புகுந்து பாத்திரங்கள மற்றும் அங்குள்ள பொருட்களை தூக்கி எறிந்து அட்டகாசம் செய்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்தில் உள்ளனர் எனவே வனத்துறையினர் வந்து குரங்குகளை பிடித்து காட்டில் கொண்டு விட்டுவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை:
நீலகிரி மாவட்டம் குன்னூர், கோத்தகிரி, தூதுர் மட்டம் உள்ளிட்ட இடங்களில் வன பகுதிகளில் ஏராளமான காட்டு எருமைகள் உள்ளன.
இந்த காட்டு எருமைகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. வனத்துறையினர் அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் காட்டு எருமை ஒன்று நகர் பகுதிக்குள் புகுந்தது. இதனை வனத்துறையினர் காட்டுப் பகுதிக்கு விரட்டி விட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை ஊட்டி கமர்சியல் சாலை, தினசரி சந்தை பகுதிக்குள் காட்டெருமை புகுந்து சுற்றி திரிந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
அதனை காட்டுக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.
காட்டெருமை தொடர்ந்து ஊருக்குள் புகுந்து வருவதால் பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.