என் மலர்
நீங்கள் தேடியது "புழுக்கள்"
- ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
- புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
குறைந்த நேரத்தில் பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன.
இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.
இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம்.
- நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் சுமார் 2000 க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில், அங்கு வாரம் ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று மாலை அங்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. பொதுமக்கள் அந்தந்த பகுதியில் பொருத்தியுள்ள பொதுக் குழாய் மற்றும் வீடுகளுக்கு தனித்தனியாக பொருத்தப்பட்டுள்ள குழாய்களில் குடிநீரை பிடித்தனர். இந்த நிலையில், குடிநீரில் புழுக்கள் நிறைந்தும், துர்நாற்றம் வீசியும் இருந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் 7 நாள் முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை அத்திக்கடவு குடிநீர் ஊராட்சி நிர்வாகம் மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீரை சேமித்து பயன்படுத்தி வந்தோம். இந்த நிலையில் நேற்று வந்த குடிநீரில், புழுக்கள் நிறைந்தும் துர்நாற்றம் வீசியும் இருந்தது. இந்த குடிநீரை பயன்படுத்த முடியாது. குடிநீர் இன்று வருவதால் ஏற்கனவே இருந்த குடிநீரை காலி செய்துவிட்டோம். இப்போது குடிநீருக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
- பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
- ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-
பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.
டிரைகோகிரமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 நாட்கள் இடை வெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோப்பிரைட் அல்லது குளோரிபைரிபாஸ் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.
மேலும் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.






