search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    நிலக்கடலையில் புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை
    X

    நிலக்கடலையில் புழுக்களை கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி ஆலோசனை

    • பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள‌ நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
    • ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

    பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.

    தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

    டிரைகோகிரமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 நாட்கள் இடை வெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோப்பிரைட் அல்லது குளோரிபைரிபாஸ் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

    மேலும் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×