search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Groundnut"

    • தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி - ஓமலூர் பிரதான சாலையில் கொங்கணா புரத்தை அடுத்த கரட்டுகாடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் கொப்பரை மற்றும் நிலக்கடலை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இந்த வாரம் நடந்த ஏலத்தில் முதல் தர தேங்காய் பருப்பு குவிண்டால் ஒன்று ரூ.8,188 முதல் ரூ.8,690 வரை விற்பனையானது. 2-ம் தர தேங்காய் கொப்பரைகள் குவிண்டால் ஒன்று ரூ.5,825 முதல் ரூ.8010 வரை விலை போனது. இரு முறை நடைபெற்ற பொது ஏலத்தின் மூலம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 80 குவிண்டால் அளவிலான தேங்காய் கொப்பரைகள் விற்பனையானது.

    தொடர்ந்து இப்பகுதியில் நிலக்கடலை அறுவடை பணி நடைபெற்று வரும் நிலையில் தற்போது இம்மையத்தில் நிலக்கடலைக்கான பொது ஏலம் தொடங்கியுள்ளது. இதனை சுற்றுப்புற விவசாயிகள் பயன்படுத்தி தாங்கள் விளைவித்த நிலக்கட லையை எந்தவித கமிஷன் மற்றும் மறைமுக கட்டணம் ஏதுமின்றி விற்பனை செய்திகொள்ளுமாறு வேளாண் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது
    • சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை.

    அவிநாசி:

    சேவூர் சுற்றுவட்டார பகுதி மழை மறைவு பிரதேசம். இப்பகுதியில் வறட்சியை தாங்கி வளரும் பயிர்களில் முதன்மையான இடம்பிடித்திருப்பது நிலக்கடலை. சேவூர் நிலக்கடலை சுற்றுவட்டார கிராமங்கள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களிலும் ஏக பிரசித்தி பெற்றது. பனை மரம் போல் வறட்சியை தாங்கி வளரும் ஒரு உன்னத பயிராக விவசாயிகள் இன்றும் இதனை கருதி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீடுகோரி இப்பகுதி விவசாயிகள் கடந்த வாரம் அவினாசி வந்த மத்திய ஜவுளித்துறை மந்திரி பியூஷ்கோயலிடம் கோரிக்கை மனு அளித்து உள்ளனர்.

    இது குறித்து சேவூர் பகுதி நிலக்கடலை விவசாயிகள் கூறியதாவது:-

    சேவூர், குட்டகம், தண்ணீர்பந்தல்பாளையம், போத்தம்பாளையம், தாமரைக்குளம், பாப்பான்குளம், முறியாண்டாம்பாளையம், கானூர், நடுவச்சேரி, வடுகபாளையம், மங்கரசுவலையபாளையம், தண்டுக்காரன்பாளையம், ராமியம்பாளையம் என 30 கி.மீ. சுற்றுவட்டார பகுதிகளில் நிலக்கடலை விவசாயம் நடந்து வருகிறது. வறட்சியை தாங்கி வளர்வதால் இப்பகுதி விவசாயிகளின் விருப்பத்தேர்வாக இந்த நிலக்கடலை சாகுபடி உள்ளது. மழை பெய்யும் போது கிடைக்கும் நிலத்தடி நீர் மற்றும் நீராதாரத்தை கொண்டு விளையும் மானாவாரி பயிர் என்பதால், பலரும் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோம்.

    சிறு, குறு விவசாயிகளுக்கு பெரிய பொருட்செலவு இல்லை. குறிப்பாக செம்மண் கலந்த சரளை மண் என்பதால், மண்ணில் எதிர்ப்பு சக்தி இயல்பாகவே உள்ளது. அதேபோல் விளையும் கடலைச்செடியிலும் பருப்புகள் மிகவும் உருப்படியாகவும், தரமாகவும் மற்றும் சத்து நிறைந்து ஆரோக்கியமாக இருப்பதால், இங்கு உற்பத்தி செய்யும் கடலைக்கு ஏக மவுசு. அதேபோல் கடலை பருப்பி, கடலை எண்ணெய் மற்றும் வறுகடலைக்கு இந்த கடலைகள் நன்கு சுவையாகவும், இயற்கையாகவும் விளையும் தன்மை கொண்டதால் மக்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துள்ளது. அதேபோல் சுவையுடன், சத்தும் சேர்ந்திருப்பதால் பலர் விரும்பி சாப்பிடுகின்றனர்.

    அதேபோல் கடலை எண்ணெய்யை பல்வேறு மாவட்டங்களில் இருந்து, இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். அதேபோல் உழவர் உற்பத்தியாளர் கூட்டுப்பண்ணை நிறுவனம் மூலம் மதிப்புக்கூட்டிய பொருளாக மாற்றி, விவசாயிகள் பலர் பயன்பெற்று வருகின்றனர். மானாவாரி விவசாயம் என்றால் ஆண்டுக்கு ஒருமுறையும், கிணற்று பாசனம் என்றால் ஆண்டுக்கு இருமுறையும் விளைவிப்போம். 100 நாட்கள் தான் இதன் அறுவடை காலம். எங்கள் கோரிக்கையை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் குறுகிய நிலப்பரப்பில் விளையும் சேவூர் நிலக்கடலைக்கு புவிசார் குறியீட்டை மத்திய அரசு வழங்கி, சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    திருப்பூர் மாவட்ட வேளாண்மைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    சேவூர் நிலக்கடலை இந்த பகுதியில் 4600 ஏக்கரில் விளைவிக்கப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 25 முதல் 30 மூட்டைகள் வரை கிடைக்கும். ஒரு கிலோ மூட்டை 60 கிலோ ஆகும். நல்ல தரமான, சுவையான, சத்தான பருப்பாக இங்கு விளையும் கடலை இருப்பதால் பொதுமக்கள் உட்பட பலரும் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். மத்திய, மாநில அரசுகள் வழிகாட்டுதல்களின் படி, மின்னணு தேசிய வேளாண் சந்தை மூலம் விற்பனை நடைபெறுகிறது. இதனை நம்பி ஏராளமான விவசாயிகள் உள்ளனர்.

    சேவூர் கடலை மூலம் தயாரிக்கப்படும் கடலை எண்ணெய் வெகு பிரசித்தம். இதனை நாடும் நுகர்வோர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். புவிசார் குறியீடு கோரி விவசாயிகள் மத்திய அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். இதனை அரசு தான் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

      பரமத்தி வேலூர்:

      சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

      அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 42.66 1/2குவிண்டால் எடை கொண்ட 140-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.86.46-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.68.29-க்கும், சராசரி விலையாக ரூ.85.29-க்கும் என ரூ.3 லட்சத்து 32ஆயிரத்து 148-க்கு ஏலம் போனது.

      • பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள‌ நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.
      • ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

      பரமத்திவேலூர்:

      நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது:-

      பரமத்தி வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலையில் சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளை துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடு நரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும். வளர்ந்த புழுக்கள் இலைகளை சுருட்டி அதனுள் இருந்து பச்சையத்தைச் சுரண்டி சேதம் விளைவிக்கும்.

      தீவிர தாக்குதலுக்கு உண்டான செடிகள் காய்ந்தும், சுருங்கியும் காணப்படும். ஊடுபயிராக தட்டைபயிர் அல்லது உளுந்து பயிரை நிலகடலை உடன் 1:4 எனும் விகிதத்தில் விதைக்கவேண்டும். ஏக்கர் 1-க்கு விளக்குபொறி 5 எண்கள் வீதம் வைத்து தாய் அந்து பூச்சிகளை அழிக்கலாம்.

      டிரைகோகிரமா கைலோனிஸ் என்ற முட்டை ஒட்டுண்ணியை ஒரு ஏக்கருக்கு 7 முதல் 10 நாட்கள் இடை வெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்தலாம். இமிடாகுளோப்பிரைட் அல்லது குளோரிபைரிபாஸ் இதில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

      மேலும் உழவன் செயலியில் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயின் செல்போனுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும்.

      இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

      • சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.16.57 லட்சத்துக்கு நிலக்கடலைக்காய் விற்பனை நடைபெற்றது
      • விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர்.

      சிவகிரி,

      சிவகிரி ஒழுங்குமுறை விற்பனை க்கூடத்தில் நிலக்கடலைக்காய் விற்பனைக்கான ஏலம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 790 மூட்டைகள் கொண்ட 23 ஆயிரத்து 999 கிலோ எடையுள்ள நிலக்கடலைக்காயை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் கிலோ ஒன்றுக்கு குறைந்த பட்ச விலையாக ரூ.62.39-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.84.30-க்கும், சராசரி விலையாக ரூ.74.50-க்கும் விற்பனையானது. நிலக்கடலைக்காய் மொத்தம் ரூ.16 லட்சத்து 57 ஆயிரத்து 14-க்கு விற்பனையானது.

      • சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம்.
      • ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமாக செய்து கொடுக்கலாம்.

      தேவையான பொருட்கள்

      அரிசி மாவு- ஒரு கப்

      ராகி மாவு- அரை கப்

      உப்பு- ஒரு சிட்டிகை

      தேங்காங் துருவல்- ஒரு கப்

      ஏலக்காய் பொடி- ஒரு டீஸ்பூன்

      வேர்கடலை பொடித்தது- கால் கப்

      பொடித்த வெல்லம்- அரை கப்

      வாழை இலை-1

      செய்முறை:-

      முதலில் கொலுக்கடை செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் அரிசிமாவு, ராகி மாவு, உப்பு சேர்த்து அதில் சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் பூரணம் செய்வதற்கு ஒரு சிறிய பவுளில் துருவிய தேங்காய், வறுத்து பொடித்த வேர்கடலை பொடி, பொடித்த வெல்லம், ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கிளறி பூரணம் ரெடி செய்துகொள்ள வேண்டும்.

      இந்த மாவு கலவையை சிறிது சிறிது உருண்டைகளாக உருட்டி ஒரு வாழை இலையில் நெய் அல்லது எண்ணெய் தடவி வட்டமான வடிவில் தட்டி அதன் நடுவே ஏற்கனவே நாம் செய்து வைத்துள்ள பூரண கலவையை வைத்து வாழை இலையுடன் அதனை மடித்து எடுத்துக்கொள்ளவும்.

      ரெடியாக உள்ள மடித்து வைத்துள்ள வாழை இலை அடையை ஒரு இட்லி பாத்திரத்தில் நீர் உற்றி ஆவியில் வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். சுவையான இலை அடை தயார்.

      ஆவியில் வேக வைத்து எடுத்த உணவு என்பதால் அனைவரும் இதனை உண்ணலாம். சுகர் பேஷண்ட்ஸ் கூட இதனை சாப்பிடலாம். பள்ளி சென்றுவிட்டு வரும் குழந்தைகளுக்கு ஈவ்னிங் ஸ்நாக்காக தினமும் இந்த மாதிரி வித்தியாசமான ஸ்நாக்கு களை செய்து கொடுக்கலாம். விரும்பி சாப்பிடுவர். நீங்களும் செய்து பார்த்து பதில் சொல்லுங்க.

      • முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரை விற்க்கப்பட்டது.
      • மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

      அவிநாசி:

      சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.1.30 லட்சத்துக்கு நிலக்கடலை ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது.இதில் முதல் ரக நிலக்கடலை குவிண்டால் ரூ.7,600 முதல் ரூ.7,800 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ7,600 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,400 முதல் ரூ.7,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.30 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது. 

      • சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.
      • குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

      பரமத்தி வேலூர்:

      சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை காய் ரூ 38 ஆயிரத்து786க்கு ஏலம் போனது.

      சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

      அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை காய் 5.13 1/2 குவிண்டால் எடை கொண்ட 16-மூட்டை நிலக்கடலை காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.76-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.73.20-க்கும், சராசரி விலையாக ரூ.76.76-க்கும் என ரூ 38ஆயிரத்து 786-க்கு விற்பனையானது.

      • மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.
      • முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது.

      அவினாசி:

      சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக ஏலத்தில் ரூ.6.64 லட்சத்துக்கு நிலக்கடலை வா்த்தகம் நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு வரத்து குறைந்ததால் 215 மூட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. குவிண்டாலுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ.7,400 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6.64 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

      காங்கயம் நகரம், கரூா் சாலை பகுதியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் தேங்காய்ப் பருப்பு மறைமுக ஏலம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் காங்கயம் பகுதியைச் சோ்ந்த 2 விவசாயிகள் 44 மூட்டைகள் (2,238 கிலோ) தேங்காய்ப் பருப்புகளை (கொப்பரை) விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இங்கு நடைபெற்ற ஏலத்தில் ரூ.1.56 லட்சத்துக்கு தேங்காய்ப் பருப்புகள் விற்பனையாயின.

      இதில் அதிகபட்சமாக கிலோ ரூ.70க்கும், குறைந்தபட்சமாக ரூ.50க்கும், சராசரியாக ரூ.60க்கும் ஏலம் போனது. ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் செ.ராமன் செய்திருந்தாா்.

      • அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
      • ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

      பரமத்திவேலூர்:

      சாலைப்புதூரில், அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல் பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

      இதில் அருகே உள்ள கரூர் ஒன்றியம், பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.

      இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

      அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 36.61½ குவிண்டால் எடை கொண்ட 106 மூட்டை நிலக்கடலை காய் விற்ப னைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.30-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.65.19-க்கும், சராசரி விலையாக ரூ.71.20-க்கும் என ரூ.2 லட்சத்து 54 ஆயிரத்து 468-க்கு விற்பனையானது.

      • வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நிலக்கடலை ரூ.3½ லட்சத்துக்கு ஏலம் போனது
      • கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் விற்பனையானது

      கரூர்,

      கரூர் நொய்யல் அருகே சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, எள், நிலக்கடலை ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில், கரூர், க.பரமத்தி ஒன்றிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர். அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் நிலக்கடலை 45.70 குவிண்டால் எடை கொண்ட 123 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.76.80-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.70-க்கும், சராசரி விலையாக ரூ.75.80-க்கும் என மொத்தம் ரூ.3 லட்சத்து 40 ஆயிரத்து 891-க்கு நிலக்கடலை விற்பனையானது.

      • ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா்.
      • நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ. 7,450 வரையில் ஏலம் போனது.

      அவினாசி :

      சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.3.20 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

      இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு 115 மூட்டை நிலக்கடலை கொண்டு வந்திருந்தனா். குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,000 முதல் ரூ. 7,450 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ.7,000 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,000 முதல் ரூ.6,500 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.3 லட்சத்து 20 ஆயிரத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.

      ×