search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மண் கலந்த நிலக்கடலை; வியாபாரிகள் வாங்க மறுப்பு
    X

    ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மண் கலந்த நிலக்கடலை; வியாபாரிகள் வாங்க மறுப்பு

    • ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மண் கலந்த நிலக்கடலையை வியாபாரிகள் வாங்க மறுத்தனர்
    • அதிகாரிகள் பாஸ்கரிடம் பேசி சமாதானம் செய்து 50 மூட்டையை எடுத்துக் கொண்டு மண்ணாக உள்ள 7 மூட்டையை திருப்பி அனுப்பினார்கள்.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-திருச்சி சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள சிலால் வாரியங்காவல், சின்ன வளையம், புதுச்சாவடி, உடையார்பாளையம், ஒக்கநத்தம், கல்லாத்தூர், மேலூர் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து விவசாயிகள் கடலை உள்ளிட்ட பயிர்களை கொண்டு வருவது வழக்கம். இந்நிலையில் வானதிறப்பட்டினத்தைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் அவருடைய கடலை மூட்டைகளை கடலை கமிட்டியில் போடுவதற்காக வந்துள்ளார்.அங்கே உள்ள வியாபாரிகள் கடலைகளை வாங்கி அதிக லாபத்திற்கு விற்பது வழக்கமாக உள்ளது.

    இந்நிலையில் பாஸ்கரின் கடலை மூட்டையில் மண் இருப்பதாக கூறி கடலை மூட்டையை வாங்காமல் நீண்ட நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் விவசாயம் செய்ய பல்வேறு போராட்டங்களை தாண்டி விவசாயம் செய்து வருகின்றனர். ஆனால் நீங்கள் இதுபோன்று செய்வது விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போல் இருக்கிறது எனக் கேட்டுள்ள பாஸ்கரிடம் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.மேலும் விற்பனை கூடத்தில் உள்ள அதிகாரிகள் பாஸ்கரிடம் பேசி சமாதானம் செய்து 50 மூட்டையை எடுத்துக் கொண்டு மண்ணாக உள்ள 7 மூட்டையை திருப்பி அனுப்பினார்கள். இதனால் ஒழுங்குமுறை கூடம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    Next Story
    ×