என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் உணவு"
- ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது என்று ஊழியர்களிடம் கேட்டார்.
- பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த நிஹால் (25) என்ற இளைஞர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது குடும்பத்தினருடன் உத்தரப் பிரதேசத்தின் கத்ராவில் இருந்து மத்திய பிரதேசத்தின் பினா நோக்கி அந்தமான் எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்றுகொண்டிருந்தார்.
பயணத்தின் ஒரு பகுதியாக, அவர் ரெயிலில் சைவ உணவுகளை ஆர்டர் செய்தார். அதன் விலை ரூ.110 ஆக இருந்த நிலையில், கேட்டரிங் ஊழியர்கள் அவரிடம் ரூ.130 வசூலித்தனர். இதற்கு நிஹால் எதிர்ப்பு தெரிவித்து, ஏன் அதிக விலை வசூலிக்கப்படுகிறது? என்று ஊழியர்களிடம் கேட்டார்.
இதனால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த கேட்டரிங் ஊழியர்கள் நிஹாலை தடிகளாலும், பெல்ட்களாலும் கண்மூடித்தனமாக அடித்தனர்.
சக பயணிகள் அவர்களைத் தடுக்க முயன்றாலும், அவர்கள் அதைப் பொருட்படுத்தாமல் தாக்குதலைத் தொடர்ந்தனர். சில பயணிகள் தங்கள் தொலைபேசிகளில் தாக்குதலை படம் பிடித்தனர்.
ரெயில் ஜான்சி ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் அரங்கேறியது. இதன் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ரெயில் பினா நிலையத்தை அடைந்தவுடன் நிஹால் ரெயில்வே காவலரளிடம் புகார் அளிக்க முயன்றார். ஆனால் அவர்கள் இந்த விவகாரம் தங்கள் எல்லைக்குள் நடக்கவில்லை என கூறி புகாரை ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இது பழைய வீடியோ என்றும் இதுபோன்ற எந்த சம்பவமும் பதிவாகவில்லை எனவும் வடக்கு ரெயில்வே மறுப்பு தெரிவித்துள்ளது.
- ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
- புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு தினமும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்படுகிறது.
குறைந்த நேரத்தில் பயணிகளை குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு செல்வதால் இந்த ரெயிலில் பயணம் செய்ய பயணிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த ரெயிலில் பயணிகளின் டிக்கெட்டுடன், உணவிற்கும் சேர்த்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.
நேற்று திருப்பதியில் இருந்து செகந்திராபாத்திற்கு வந்தே பாரத் ரெயில் சென்று கொண்டு இருந்தது. அப்போது பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட சிக்கன் குழம்பில் புழுக்கள் நெளிந்தன.
இதனைக் கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகளிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் எழுத்து மூலமாக புகார் அளித்தனர்.
இதையடுத்து புகார் அளித்த பயணிக்கு மாற்று உணவாக நூடுல்ஸ் வழங்கப்பட்டது. உணவுக்காக பயணிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்யும் ரெயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







