என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Temple pool"

    • கோயில் குளத்தில் ஜாஸ்மின் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை அவர் பகிர்ந்துள்ளார்.

    கேரளா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற குருவாயூர் கோயில் குளத்தில் யூடியூப் பிரபலம் ஜாஸ்மின் ஜாஃபர் என்ற பெண் காலைக் கழுவுவது போல் ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். அந்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்துக்கள் அல்லாதவர்கள் குருவாயூர் கோவில் குளத்தில் நுழைய அனுமதி இல்லை என்றும் கோவில் குளத்தில் புஸ்கிப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று கூறி தேவசம் போர்டு ஜாஸ்மின் மீது புகார் அளித்தது.

    இந்நிலையில், குருவாயூர் கோவிலில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தப்பட்டு, அதன் புனிதத் தன்மையை மீட்க பரிகாரம் நடத்தப்படும் எனக் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    இத்தனிடையே,ரீல்ஸ் எடுத்த ஜாஸ்மின் அந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கிவிட்டு, மன்னிப்பு கேட்டுள்ளார்.

    ஜாஸ்மின் ஜாஃபர், மலையாள பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இரண்டாம் இடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    சோழிங்கநல்லூர் அருகே கை கழுவ சென்ற போது கோவில் குளத்தில் விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூரை அடுத்த பொன்னியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது 5 வயது மகன் குகன். அதே பகுதியில் உள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று மாலை ரமேஷ், மனைவி மற்றும் மகன் குகனுடன் பொன்னியம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார்.

    கோவிலில் கொடுத்த பிரசாதத்தை அனைவரும் வாங்கி சாப்பிட்டனர். பின்னர் சிறுவன் குகன் மட்டும் கைகழுவுவதற்காக கோவில் குளத்துக்கு சென்றான். அப்போது அவன் நிலை தடுமாறி குளத்துக்குள் விழுந்தான்.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குகனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி குகன் பரிதாபமாக இறந்தான்.
    ×