Scorpio கார் விபத்து: ஓட்டிச் சென்ற சிறுவனுக்கு ஜாமீன் - உயிரிழந்த இளைஞரின் தாய் கண்ணீர் மல்க வீடியோ

சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், தேர்வுகள் இருப்பதாலும் ஜாமீன் வழங்கியது.கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான்.
இடது - சஹில், வலது - சஹிலின் தாய்
இடது - சஹில், வலது - சஹிலின் தாய்
Published on

டெல்லியின் துவாரகாவில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி கல்லூரி அருகே கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி நடந்த சாலை விபத்தில் சஹில் தனேஷ்ரா என்ற 23 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

டெல்லி காவல்துறையின் கூற்றுப்படி, பிப்ரவரி 3 காலை 11:57 மணியளவில் அதிவேகமாக வந்த ஸ்கார்பியோ கார், எதிரே வந்த சஹிலின் மோட்டார் சைக்கிள் மீது மோதியதுடன், சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு டாக்ஸி மீதும் மோதியுள்ளது. சஹில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டாக்ஸி ஓட்டுநரும் காயமடைந்தார்.

விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டியது 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அவரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை. காரில் அந்த சிறுவனுடன் அவனது சகோதரியும் இருந்துள்ளார். அவர்கள் காரை அதிவேகமாக ஓட்டி ரீல்ஸ் எடுத்துக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அந்த சிறுவன் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் சிறுவன் 10-ஆம் வகுப்பு மாணவன் என்பதாலும், அவனுக்கு தேர்வுகள் இருப்பதாலும் நீதிமன்றம் அவனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த சஹில் தனேஷ்ராவின் தாய் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், "23 ஆண்டுகளாக கணவர் இன்றி தனியாக கஷ்டப்பட்டு என் மகனை வளர்த்தேன். பிப்ரவரி 3 அன்று, அதிவேகமாக கார் ஓட்டி ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனால் என் மகன் கொல்லப்பட்டான். நான் ஒரு ஆதரவற்ற தாய், எனக்கு நீதி வேண்டும்" என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலாகி வரும் நிலையில் சிறுவனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதற்கு கண்டனம் எழுந்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com