search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரெயில்வே தண்டவாளத்தில் முதியவர் பிணம்
    X

    கோப்பு படம் 

    ரெயில்வே தண்டவாளத்தில் முதியவர் பிணம்

    • ரெயில் நடுவழியில் நிறுத்தம்
    • வாகன ஓட்டிகள் அவதி

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே சுக்குப்பாறை தேரிவிளை பகுதியில் நேற்று மாலை சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார்.

    இது பற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    இந்த நிலையில் கன்னியாகுமரியில் இருந்து புனலூருக்கு பாசஞ்சர் ரயில் வந்தது.

    சுக்கு பாறை தேரிவிளை பகுதியில் ரயில் வந்த போது தண்டவாளத்தில் பிணம் கிடந்ததால் டிரைவர் ரயிலை நடு வழியில் நிறுத்தினார்.சுமார் அரை மணி நேரமாக ரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்தது.

    ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டு இருந்ததை யடுத்து அந்த பகுதியில் உள்ள ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு இருந்தன. மூடப்பட்ட ரயில்வேகேட் திறக்க தாமதம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    அரசு பஸ்கள் இருசக்கர வாகனங்கள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு இருந்தது. ஒரு சில வாகன ஓட்டிகள் வாகனங்களை திருப்பி மாற்று பாதை வழியாக சென்றனர். சுமார் அரை மணி நேரத்துக்கு பிறகு தண்டவாளத்தில் கிடந்த உடலை போலீசார் அப்புறப்படுத்தினார்கள்.

    பின்னர் ெரயில் அங்கிருந்து புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வந்தது. கன்னியாகுமரி புனலூர் பாசஞ்சர் ெரயில் நடுவழியில் நிறுத்தப்பட்டிருந்ததால் பயணிகள் பரிதவிப்பிற்கு ஆளானார்கள். நாக ர்கோவிலில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற ெரயில்களும் தாமதமாக சென்றது.

    பிணமாக கிடந்தவரின் உடல் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை போலீசார் இது தொடர்பாக விசா ரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×