ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரெயில் தண்டவாளத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்
Published on

தஞ்சாவூர்:

தஞ்சை அருகே உள்ள சோழகம்பட்டி ரெயில்வே நிலைய தண்டவாளத்தில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடந்தது.

இதனை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் தலைமையில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் இசையரசன், தனிப்பிரிவு சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர். ஆனால் அவர் யார்? எந்த ஊர்? என்று விவரம் தெரியவில்லை.

இதையடுத்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த நபர் தண்டவாளத்தை கடக்க முயலும் போது ரெயிலில் அடிப்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா ? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் ‌‌. மேலும் அவர் யார் என்ற விவரம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com