என் மலர்
நீங்கள் தேடியது "ரெயில் ஒன்"
- இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது.
- ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை.
ரெயில்வேயில் முன்பு தனித்தனியாக இருந்த ஐ.ஆர்.சி.டி.சி , யூ.டி.எஸ், என்.டி.இ.எஸ் போன்ற பல செயலிகளின் சேவைகளை ஒருங்கிணைத்து ரெயில்வே அமைச்சகம் 'ரெயில் ஒன்' என்ற செயலியை அறிமுகம் செய்தது.
இந்த செயலியின் மூலம் முன்பதிவு டிக்கெட், முன்பதிவில்லாத டிக்கெட், பிளாட்பார டிக்கெட், ரெயில் வரும் நேரம், புறப்படும் நேரம் ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். ரெயில்வே துறை மற்றும் ரெயில் நிலையங்கள், ரெயில் பெட்டிகளில் உள்ள குறைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியும். சீசன் டிக்கெட்டும் இந்த செயலி மூலம் பெற முடியும்.
இந்நிலையில் ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுப்பவர்களுக்கு 3 சதவீத கட்டண சலுகையை ரெயில்வே அறிவித்துள்ளது. அதாவது, ரெயில் நிலையங்களில் உள்ள டிக்கெட் கவுண்ட்டர் கூட்டத்தில் முண்டியடித்து செல்வதற்கு பதிலாக செல்போன் செயலி மூலம் டிக்கெட் எடுப்பதை ஊக்குவிக்க இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த கட்டண சலுகை கியூ.ஆர். கோடு மூலம் கட்டணம் செலுத்துபவர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வந்தது. தற்போது முன்பதிவில்லாத சாதாரண டிக்கெட்டுகளை ரெயில் ஒன் செயலி மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்கள் அனைவருக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
ஆர்-வாலட் மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தில் 3 சதவீதம் திரும்ப பெறும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. எனவே, ரெயில் ஒன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் எடுக்கும் அனைத்து பயணிகளுக்கும் நாளை முதல் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி வரை 3 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
தென்னக ரெயில்வே மண்டலம் தற்போது 29.5 சதவீதம் செல்போன் செயலி மூலம் முன்பதிவில்லாத டிக்கெட் வழங்கி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே சாதாரண டிக்கெட்டுகளுக்கு யூ.டி.எஸ். செயலி பயன்படுத்துபவர்கள் ரெயில் ஒன் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் டிக்கெட் எடுக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதனால், செல்போனில் டிக்கெட் பதிவு செய்தும், முழுமையடையாமலும், அது குறித்த தகவல் கிடைக்கப்பெறாததாலும், அபராதம் செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
- ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை.
- ‘ரெயில்ஒன்’ செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும்.
தற்போது, ரெயில் சேவைகளை பெற வெவ்வேறு செல்போன் செயலிகள் இருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரெயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் மற்றும் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய 'ரெயில் கனெக்ட்' என்ற செயலி உள்ளது.
புறநகர் ரெயில்களில் பயணம் செய்வதற்கான டிக்கெட் பெற 'யு.டி.எஸ்.' செயலி உள்ளது. இதுதவிர, தனியார் துறை செயலிகளும் இயங்கி வருகின்றன.
இதற்கிடையே, இந்திய ரெயில்வே தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் 'ரெயில்ஒன்' என்ற செல்போன் செயலியை ரெயில்வே அமைச்சகம் உருவாக்கி வந்தது.
இந்நிலையில், நேற்று அந்த செயலியை ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார். ரெயில்வே தகவல்சேவை மையத்தின் 40-ம் ஆண்டு விழாவில் அவர் அதை அறிமுகப்படுத்தினார்.
எனவே, ரெயில் பயணிகள் இனிமேல் தனித்தனியாக வெவ்வேறு செயலிகளை வைத்திருக்க தேவையில்லை. இந்த செயலி, ஆன்ட்ராய்டு பிளே ஸ்டோரிலும், ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் ஆப் ஸ்டோரிலும் கிடைக்கிறது.
இதுகுறித்து ரெயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

'ரெயில்ஒன்' செயலி, பயணிகளின் அனைத்து தேவைகளுக்கும் ஒரே தீர்வாக இருக்கும். இந்த செயலியில், முன்பதிவு ரெயில் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், நடைமேடை டிக்கெட், ரெயில்கள் மற்றும் பி.என்.ஆர். எண் குறித்த விசாரணை, பயண திட்டமிடல், ரெயில் உதவி சேவைகள், ரெயிலில் உணவு முன்பதிவு உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் பெறலாம்.
சரக்கு தொடர்பான விசாரணை வசதியும் அதில் இடம்பெற்றுள்ளது. டிக்கெட் முன்பதிவுக்கான பணத்தை போட்டு வைக்கும் 'ரெயில்வே இ-வாலெட்' வசதியும் உள்ளது.
பயணிகளுக்கு சிறப்பான அனுபவத்தை அளிப்பதுதான் செயலியின் அடிப்படை நோக்கம். பயன்பாடு எளிதாக இருக்கும்.
செயலியை பதிவிறக்கம் செய்த பிறகு, ஏற்கனவே உள்ள 'ரெயில்கனெக்ட்' மற்றும் 'யு.டி.எஸ்.' செயலிகளின் பயனர் ஐ.டி. விவரங்களை பயன்படுத்தி, உள்ளே நுழையலாம். இதனால், எண்ணற்ற பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
எண்களை கொண்ட 'எம்பின்' மற்றும் பயோமெட்ரிக் லாகின் வசதிகளும் அளிக்கப்பட்டுள்ளன.
முதல்முறையாக ரெயில்வே செயலியை பயன்படுத்துபவர்கள், குறைவான தகவல்களை அளித்து பதிவு செய்து கணக்கை உருவாக்கலாம்.
விசாரணை மட்டும் மேற்கொள்ள விரும்புபவர்கள், தங்கள் செல்போன் எண் மற்றும் ஓ.டி.பி.யை பயன்படுத்தி, 'கெஸ்ட் லாகின்' வசதி மூலம் உள்ளே நுழையலாம்.
'ரெயில்ஒன்' செயலி அனைத்து சேவைகளையும் ஒரே இடத்தில் கொண்டிருப்பது மட்டுமின்றி, ஒவ்வொரு சேவைக்கும் இடையே ஒருங்கிணைந்த தொடர்பை கொண்டிருக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






