என் மலர்
நீங்கள் தேடியது "Passenger"
- பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளில், பல்வேறு தென் மாநில உணவு வகைகள் புதிதாக சேர்ப்பு
- முந்திரி உப்புமா, சாம்பார், மசால் தோசை, கிச்சடி, பரோட்டா ஆகிய உணவு வகைகள் சேர்ப்பு
வெளிநாடுகளுக்குச் செல்லும் தங்களது விமானங்களில் பயணிகளுக்கு தென்னிந்தியவின் சிறப்பான உணவுகளை இலவசமாக வழங்கப் போவதாக ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டு உணவான மிளகாய்ப் பொடி இட்லி, முந்திரி உப்புமா, மினி மைசூர் மசால் தோசை, கிச்சடி, பரோட்டா, சாம்பார், மூன்று வகை சட்னிகளான தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்டினி உள்ளிட்டவையும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் தமிழக பயணிகள் உற்சாகம் அடைந்துள்ளனர். அதே சமயம் பிரியாணி, மலபாரி கோழிக் கறி, சிக்கன் பிம்பாப் உள்ளிட்ட அசைவ உணவுகளும் வழங்கப்படும் என்று ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
- விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும்.
- பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும்.
லண்டன்:
விமானங்களில் செல்லும்போது மற்ற பயணிகளுக்கு இடையூறு அளிக்கும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் அவசரமாக தரையிறக்கப்பட்டு விமான நிலையத்தில் கைது செய்யப்படுகின்றனர்.
இதற்கு விமானங்களில் அளவுக்கு அதிகமாக மது அருந்துவதே முக்கிய காரணமாக கருதப்படுகிறது. எனவே விமான நிலையம் மற்றும் விமானங்களில் மது அருந்துவதற்கான அதிகபட்ச அளவை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பதால் இறக்கி விடப்படும் பயணிகளுக்கு சுமார் ரூ.60,000 அபராதம் விதிக்கப்படும் என இங்கிலாந்தின் மிகப்பெரிய விமான நிறுவனமான ரியானேர் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
- தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன்..?
- நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார்.
அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு சம்பவத்தன்று ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் பிசினஸ் வகுப்பில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சங்கர் மிஸ்ரா இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென சிறுநீர் கழித்தார்.
இதனால் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரின் உடை மற்றும் அவரது பையில் சிறுநீர்பட்டு நனைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.
ஆனால் அவர்கள் பெண் பயணியை தொட மறுத்தனர். அவரது காலணி மற்றும் பை மீது கிருமி நாசினி தெளித்தனர்.மேலும் பைஜாமா மற்றும் கையுறையும் கொடுத்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனக்கு இருக்கையை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் வேறு இருக்கை இல்லை எனக்கூறி அவருக்கு மாற்று இருக்கை கொடுக்க விமான பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.
விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் பயணி தன் மீது சிறுநீர் கழித்த தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிறிது நேரம் கழித்ததும் அந்த பெண், தொழில் அதிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார். இதனால் இருவரும் சமாதானமாகி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.
சம்பவம் நடந்த அன்று சங்கர் மிஸ்ராவிடம் நடந்த விவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அந்த சமயம் அங்கு இருந்த பெண் பயணியை பார்த்த அவருக்கு கண்களில் இருந்து பொலபொல வென கண்ணீர் வடிந்தது. நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடுங்கள் என அவர் அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறினார்.
நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார். ஆனாலும் என்னை பற்றி கேள்விபட்டால் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.
அதனால் தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். அந்த பெண் அவர் மீது மேலும் குற்றம் சுமத்தினால் கடினமாக இருக்கும் என நினைத்து நடந்ததை கெட்ட கனவாக எண்ணி புகார் கொடுக்காமால் சமாதான மாக சென்று விட்டார். இதனால் தொழில் அதிபர் தண்டணையில் இருந்து தப்பிவிட்டார்.
- காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பஸ் வந்துகொண்டிருந்தது.
- இதில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நாகப்பட்டினம்:
நாகை அடுத்த நாகூர் ரவுண்டானா பகுதியில் சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு மரக்கட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.
அப்போது காரைக்காலில் இருந்து திருவாரூருக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ் கட்டு பாட்டை இழந்து லாரியின் பக்கவாட்டில் உரசியது.
இதில் லாரியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த மரக்கட்டைகள் பஸ்சின் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணிகள் மீது விழுந்தது. மேலும் பஸ்சின் கண்ணாடியும் உடைந்து நொறுங்கியது. இந்த விபத்தில் 3 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டது.
பஸ்சில் இருந்த பள்ளி கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என 50 க்கும் மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதனை தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாகும்.
- வாகனங்கள் ஒரே திசையில் மட்டும் வந்து செல்வதால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது.
உடன்குடி:
உடன்குடியில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையாகும். இந்த சாலையில் பல இடங்களில் அதிக பள்ளம் இருப்பதினால் வாகன ஓட்டிகள் பகலிலும், இரவு நேரங்களிலும் அதிவேகத்தில் எதிர்புற சாலையில் செல்வதினால் ஒரு மாதத்திற்கு சுமார் 20 வாகன விபத்துகள் ஏற்படுகிறது.
தினசரி பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாண விகள், முதியவர்கள், குடும்பத்தார்கள், தொழிலாளர்கள், அதிகாரிகள் போன்ற ஏராளமானோர் செல்லும் முக்கியமான சாலையில் ஏராளமான இடங்கள் குண்டும், குழியுமாக உள்ளது. வாகனங்கள் ஒரே திசையில் மட்டும் வந்து செல்வதால் விபத்து அதிகமாக ஏற்படுகிறது. விபத்தினை தடுப்பதற்கு நெடுஞ்சாலைத் துறையினர் பொது மக்களின் நலனை கவனத்தில் கொண்டு விரைவில் இந்த தார்சாலையை புதுப்பித்து தரவேண்டும் என்று பயணிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் தனித்தனியாக மாவட்ட கலெக்டர் மற்றும் நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.
- 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.
- மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.
இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள், அமைக்கப்பட்டது.
இந்த நிலையில்,அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன.இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
- போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அமெரிக்காவில் விமானத்தை தவற விட்ட பயணி ஒருவர் கோபத்தில் செய்த காரியத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் லாஸ் வேகாசில் இருந்து நேற்று (வியாழன் கிழமை) மதியம் 2 மணி அளவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு செல்ல இருந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணி, குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தின் புறப்பாடு பகுதிக்கு வராததால் விமானத்தை தவறவிட்டார்.
விமானத்தை தவறவிட்ட கோபத்தில், அந்த பயணி விமான நிலைய அலுவலகத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விமானத்தில் ஏற்றப்பட்ட தனது லக்கேஜில் வெடிபொருட்கள் இருப்பதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

இதையடுத்து விமான நிலையம் விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் புறப்பட தயாராக இருந்த விமானத்திற்குள் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
எனினும், பயணி கூறியதை போன்று வெடிபொருட்கள் எதுவும் அவரது லக்கேஜில் கிடைக்கவில்லை. இதையடுத்து பயணியை போலீசார் கைது செய்தனர். பயணி கோபத்தில் விடுத்த மிரட்டல் காரணமாக விமானம் 37 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- தென்காசி ரெயில் நிலையத்தில் குடிநீர் நிலையம் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் தென்காசி ரெயில் நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் முக்கியமான ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் பயணிகள், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆர்.ஓ. குடிதண்ணீர் நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த குடிநீர் நிலையம் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது. இதன் அருகே குடிதண்ணீர் தொட்டி இருக்கிறது. ஆனால் அதன் குடிதண்ணீர் குழாய் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு தரையை ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் பயணிகள் பயன்பாட்டிற்கு கழிப்பிடங்கள் இல்லாத நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படும் நிலைமையும் இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமான ரெயில் நிலையத்தின் நிலைமை இப்படி உள்ளதே என்று ரெயில் பயணிகள் வருத்தப்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
- வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
- போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
கொல்கத்தா:
கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.
அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,
இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.
உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.
அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
- அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
- பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை.
திருப்பூர் :
அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெயபால் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.
ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்காமல் சீட்டில் தூங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து நடத்துனர் தேவராஜ் அவரிடம் பஸ் நிலையம் வந்து விட்டது, கீழே இறங்கவும் என்று கூறினார். ஆனால் அந்தப் பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர் அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பிணமாக இருந்தவரை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 52) என்பதும் வேலைக்காக இன்று காலை பஸ்சில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
- அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது
காங்கயம்:
கோவை காந்திபுரம், சிங்காநல்லூா் பேருந்து நிலையங்களில் இருந்து கரூா், திருச்சி, நாகப்பட்டினத்துக்கு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. இந்த வழித் தடத்தில் சூலூா், பல்லடம், அவிநாசிபாளையம், காங்கயம், வெள்ளக்கோவில், தென்னிலை, பரமத்தி ஆகிய ஊா்கள் உள்ளன.
இந்த ஊா்களுக்குச் செல்லும் பயணிகளை கோவையில் பேருந்து நடத்துநா்கள் முதலில் ஏற்றுவதில்லை. தொலைதூரங்களுக்குச் செல்லும் பயணிகளையே முதலில் ஏற்றுகின்றனா். இதனால் கடைசியில் ஏற்றப்படும் இடைநிறுத்த ஊா்களின் பயணிகள் பல மணி நேரம் நின்று கொண்டே செல்ல வேண்டியுள்ளது.
இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வெள்ளக்கோவிலைச் சோ்ந்த ஆசிரியா் வடிவேல் என்பவா் புகாா் தெரிவித்திருந்தாா். அதனடிப்படையில் கோவை மண்டல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப்பொது மேலாளா் வெளியிட்ட செய்திக் குறிப்பில், கோவையிலிருந்து குறிப்பிட்ட வழியாகச் செல்லும் பேருந்துகளில் பேருந்து நிலையப் பொறுப்பாளா்கள் மூலம் அனைத்து நிலைப் பயணிகளையும் ஏற்றி, இறக்கிச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.






