பல்லடம் அருகே பயணிகள் நிழற்குடை இடிந்து விழும் அபாயம்

20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது.மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர்.
இடிந்து விழும் நிலையில் உள்ள  பயணிகள் நிழற்குடை.
இடிந்து விழும் நிலையில் உள்ள பயணிகள் நிழற்குடை.
Published on

பல்லடம் :

பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பிரிவில் பயணிகள் நிழற்குடை உள்ளது. இதனை அவரப்பாளையம், மற்றும் அருகிலுள்ள பகுதிவாழ் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையானது தற்போது சிதிலமடைந்து உள்ளது. மேலும் குடிமகன்கள் அங்கே அமர்ந்து மதுபானங்கள் அருந்தி விட்டு பாட்டில்கள், தம்ளர்கள், உள்ளிட்டவைக ளை வீசிச் செல்கின்றனர். மேலும் குடிமகன்கள் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் படுத்தும் தூங்குகின்றனர்.

இதனால் பயணிகள் நிழற்குடையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. மேலும் சுவர்கள் பழுதடைந்து எந்நேரமும் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது. எனவே பயணிகள் நிழற்குடையை பராமரித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com