என் மலர்
உள்ளூர் செய்திகள்

பயன்பாடற்ற நிலையில் ஆர்.ஓ. குடிநீர் நிலையம் இருப்பதை படத்தில் காணலாம். (உள்படம்) தரையில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி.
தென்காசி ரெயில் நிலையத்தில் ஆர்.ஓ. குடிநீர் நிலையம் சீரமைக்கப்படுமா? - பயணிகள் எதிர்பார்ப்பு
- தென்காசி ரெயில் நிலையத்தில் குடிநீர் நிலையம் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது.
- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் தென்காசி ரெயில் நிலையம், தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் முக்கியமான ரெயில் நிலையமாக விளங்கி வருகிறது. இங்கு வரும் பயணிகள், பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக ஆர்.ஓ. குடிதண்ணீர் நிலையம் அமைக்கப்பட்டது.
ஆனால் தற்போது அந்த குடிநீர் நிலையம் பயன்பாடற்ற நிலையில் கிடக்கிறது. இதன் அருகே குடிதண்ணீர் தொட்டி இருக்கிறது. ஆனால் அதன் குடிதண்ணீர் குழாய் மக்கள் பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியாத அளவிற்கு தரையை ஒட்டி வைக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல் பயணிகள் பயன்பாட்டிற்கு கழிப்பிடங்கள் இல்லாத நிலை இருப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
மேலும் இரவு நேரங்களில் மகளிர் மற்றும் குழந்தைகள் கழிப்பிடம் இல்லாமல் அவதிப்படும் நிலைமையும் இருப்பதாக பயணிகள் புகார் கூறி வருகின்றனர். தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் மிக முக்கியமான ரெயில் நிலையத்தின் நிலைமை இப்படி உள்ளதே என்று ரெயில் பயணிகள் வருத்தப்படும் நிலையில் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பயணிகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.






