பல்லடம் பஸ் நிலையத்தில் பயணிகள் அமரும் நாற்காலிகளை சீரமைக்க வேண்டும்.

500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
சாய்ந்து கிடக்கின்ற நாற்காலிகளை படத்தில் காணலாம்.
சாய்ந்து கிடக்கின்ற நாற்காலிகளை படத்தில் காணலாம்.
Published on

பல்லடம் :

பல்லடம் பஸ் நிலையத்தில் உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, கோவை, திருச்சி, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் பல்லடம் பஸ் நிலையத்தில், உள்ளூர் பஸ்கள், வெளியூர் பஸ்கள் நிற்கும் இடங்களில் பல லட்சம் ரூபாய் செலவில் பயணிகள் அமரும் நாற்காலிகள், அமைக்கப்பட்டது.

இந்த நிலையில்,அதில் சில நாற்காலிகள் உடைந்து, சாய்ந்து கிடக்கின்றன.இதனால் கூட்ட நேரங்களில் பயணிகள் அமர்வதற்கு சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே உடனடி நடவடிக்கை எடுத்து நாற்காலிகளை சீரமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com