search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "meal"

    • தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
    • அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடக்கப்பள்ளி களில் முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அதில் சேலம் மாநகரில் 54 பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது இந்த திட்டம் மாவட்டம் முழுவதும் விரிவு படுத்தப்படுகிறது.

    தொடக்க விழா

    சேலம் மாவட்டம் ஓம லூர் அருகே உள்ள காமலா பும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நாளை காலை இந்த திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் கார்மேகம், ராஜேந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் பார்வையிட்டனர்.

    அப்போது மேற்கு மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஒன்றிய செயலாளர்கள் பாலசுப்பிர மணி, ரமேஷ், என்ஜினீயர் காமராஜ், ஒன்றிய கவுன்சிலர் செல்வி ராஜா, ஊராட்சி மன்ற தலைவர் பழனிகவுண்டர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    சேலம் மாவட்டத்தில் காலை உணவுத் திட்டம் நாளை முதல் 1,418 பள்ளி களில் தொடங்கப்படுகிறது. இதனை அந்தந்த பகுதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் தொடங்கி வைக்கிறார்கள். இதன் மூலம் 1 லட்சத்து ஆயிரத்து 318 மாணவ-மாணவிகள் பயன் பெறு வார்கள். இதனால் இந்த திட்டத்திற்கு அனைத்து தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

    நாமக்கல் மாவட்டம்

    நாமக்கல் மாவட்டத்தில் முதற்கட்டமாக கொல்லி மலை வட்டாரத்தில் உள்ள 41 தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான 1,588 மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

    தற்போது முதல்-அமைச்சரின் காலை உண வுத் திட்டம் 15 ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த 673 பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை யிலான 27,128 மாணவ-மாணவிகளும் மற்றும் 15 பேரூராட்சிகளில் உள்ள 59 பள்ளிகளில் படிக்கும் 3,751 மாணவ-மாணவிகளும் பயன்பெறும் வகையில் நாளை வெள்ளிக்கிழமை முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 773 பள்ளிகளில் 32,497 மாணவ-மாண விகள் முதல்-அமைச்சரின் காலை உணவுத்திட்டம் மூலம் பயன்பெற உள்ளனர். முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல் பாட்டிற்கான சமையல் கூடங்களின் தயார் நிலை, உணவுப்பொட்களின் வினியோகம் மற்றும் கைபேசி செயலியில் தகவல் பதிவேற்றம் செய்வது குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டு உள்ளது.

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி டவும், கண்காணித்திடவும் அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் டாக்டர்.உமா கூறி உள்ளார்.

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
    • அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது:-

    நாமக்கல் நகராட்சியில் முதல் அமைச்சரின் காலை உணவு வழங்கும் 2-ம் கட்டத் திட்டம், சின்ன முதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்–பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் நாமக்கல் ரங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டி செட்டிபட்டி, முதலைப்–பட்டிபுதூர் மற்றும் காவேட்–டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநி–லைப்பள்ளிகளைச் சேர்ந்த 533 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்–படுகிறது.

    அதேபோல் திருச்செங்கோடு நகராட்–சிக்குட்பட்ட கூட்டப்–பள்ளி, மலையடி–வாரம், சீத்தா–ரம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்–பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் முதல்- அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட 2-ம் கட்டத்தில் பயன்பெறு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    • (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார்.
    • சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    சேலம்:

    தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊரக (கிராம ஊராட்சி) மற்றும் மலைப்பகுதிகளில் செயல்படும் 1,545 அரசுப் பள்ளிகளில் பயிலும் 1 லட்சத்து 14 ஆயிரத்து 95 தொடக்கப்பள்ளி (1 முதல் 5-ஆம் வகுப்பு வரை) குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 15.09.2022 அன்று மதுரையில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 16.09.2022 அன்று இத்திட்டம் தொடங்கப்பட்டது.

    சேலம் மாவட்டத்தில் சேலம் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட மணக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 54 மாநகராட்சி தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 5447 மாணவ, மாணவியர்கள் காலை உணவுத் திட்டத்தின்கீழ் பயன்பெற்று வருகின்றனர்.

    இத்திட்டத்தின் மூலம் மாணவ-மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதோடு, ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்படாமல் இருத்தலை உறுதி செய்ய முடியும்.

    மேலும், மாணவ / மாணவியரின் ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல் குறிப்பாக ரத்த சோகை குறைபாட்டினை நீக்குதல், பள்ளிகளில் மாணவ-மாணவியர்களின் வருகையை அதிகரித்தல் மற்றும் கல்வியில் தக்க வைத்துக் கொள்ளுதல் மற்றும் வேலைக்கு செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையைக் குறைத்தல் உள்ளிட்டவைகள் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

    சேலம் மாநகராட்சியில் காலை உணவாக உப்புமா வகைகள், கிச்சடி வகைகள் மற்றும் பொங்கல் வகைகள் உள்ளிட்டவை சுழற்சி முறையில் நாள்தோறும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சேலம் மாநகராட்சியில் மணக்காடு சமுதாயக் கூடம், இரும்பாலை மெயின் ரோட்டில் உள்ள டாக்டர்ஸ் காலணி, அம்மாப்பேட்டை வித்யா நகர், களரம்பட்டி சமுதாயக்கூடம், மணியனுர் காத்தாயம்மாள் நகர் சமுதாயக்கூடம் ஆகிய 5 ஒருங்கிணைந்த சமையல் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்திடவும், கண்காணித்திடவும் ஏதுவாக 54 பள்ளிகள் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு தினசரி காலை உணவு முறையாக வழங்கப்படுவதை உறுதிசெய்திட துணை கலெக்டர் நிலையில் ஒருவர் தினசரி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்து உள்ளார்.

    ×