search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டம்
    X

    நாமக்கல் மாவட்டத்தில் முதல்-அமைச்சரின் 2-ம் கட்ட காலை உணவு திட்டம்

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார்.
    • அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    நாமக்கல்:

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ந் தேதி தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் முதற் கட்டமாக தொடக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்டது.

    இதை தொடர்ந்து நாமக்கல் நகராட்சி, கொண்டிசெட்டிபட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் வழங்கும் திட்டத்தின், 2-ம் கட்டத்தினை கலெக்டர் ஸ்ரேயாசிங் தொடங்கி வைத்தார்.

    அப்போது கலெக்டர் ஸ்ரேயாசிங் கூறியதாவது:-

    நாமக்கல் நகராட்சியில் முதல் அமைச்சரின் காலை உணவு வழங்கும் 2-ம் கட்டத் திட்டம், சின்ன முதலைப்பட்டி, அழகுநகர், பெரியப்பட்டி, போதுப்–பட்டி, அய்யம்பாளையம், கிருஷ்ணாபுரம், பெரியூர், கருப்பட்டிபாளையம் மற்றும் நாமக்கல் ரங்கர் சன்னதி ஆகிய பகுதிகளில் உள்ள 9 தொடக்கப் பள்ளிகளை சேர்ந்த 1,088 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.

    ராமாபுரம் புதூர், முதலைப்பட்டி, கொண்டி செட்டிபட்டி, முதலைப்–பட்டிபுதூர் மற்றும் காவேட்–டிப்பட்டி பகுதிகளில் உள்ள 5 நடுநி–லைப்பள்ளிகளைச் சேர்ந்த 533 மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்–படுகிறது.

    அதேபோல் திருச்செங்கோடு நகராட்–சிக்குட்பட்ட கூட்டப்–பள்ளி, மலையடி–வாரம், சீத்தா–ரம்பாளையம், சாணார்பாளையம், சூரியம்பாளையம் மற்றும் கொல்லப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 6 தொடக்கப்–பள்ளிகளை சேர்ந்த 973 மாணவ, மாணவிகளும் என மொத்தம் 2,594 மாணவ, மாணவிகள் முதல்- அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்ட 2-ம் கட்டத்தில் பயன்பெறு கிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் நாமக்கல் நகராட்சி தலைவர் கலாநிதி, நகராட்சி கமிஷனர் சுதா, கவுன்சிலர்கள் ஈஸ்வரன், தவராஜன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×