என் மலர்
நீங்கள் தேடியது "Ticket fare hike"
- விரைவு ரெயில்களில் கி.மீ.-க்கு 1 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
- அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்த்தப்பட்டுள்ளது.
ரெயில் கட்டணம் உயர்வு இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ளது. அதே சமயம் புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டணம் தற்போது உயர்த்தப்படவில்லை.
மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில்களின் அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா விலை உயர்த்தப்பட்டுள்ளது.
சாதாரண ரெயில்களின் இரண்டாம் வகுப்பு கட்டணம் 500 கி.மீ. வரை உயர்த்தப்படவில்லை. அதே சமயம் 500 கிலோ மீட்டருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் அரை பைசா கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு 1500 கிமீ தூரம் பயணம் செய்பவருக்கு டிக்கெட் கட்டணம் ரூ.5 அதிகரிக்கும்.
ரெயில் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ரெயில் கட்டணம் சிறிதளவு மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது என்பதால் பயணிகளை பெரிய அளவில் பாதிக்காது என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்வு.
- அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு.
ரெயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் விலை உயர்த்தப்படும் என ரெயில்வேத்துறை அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது. அதன்படி நாளை முதல் புதிய ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
ரெகுலர் ஏ.சி. அல்லாத வகுப்புகள் (Non-Suburban Trains)
இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம்: கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்வு
500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை.
501 - 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5 உயர்வு.
1500 - 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10 உயர்வு.
2501 - 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்வு.
ஸ்லீப்பர் வகுப்பு: கி.மீ.-க்கு அரை பைசா உயர்வு
முதல் வகுப்பு: கி.மீ.-க்கு அரை பைசா உயர்வு
மெயில் மற்றும் விரைவு ரெயில்கள்
2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு: கி.மீ.-க்கு 1 பைசா உயர்வு
அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு
புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை.
- பயணிகள் ரெயில் எக்ஸ்பிரஸாக மாற்றம்
- டிக்கெட் கட்டண உயர்வால் பொதுமக்கள் அவதி
அரக்கோணம் :
அரக்கோணம் காட்பாடி வேலூர் கண்டோன்மென்ட் இடையே இக்கப்பட்டு வந்த பாசஞ்சர் ரெயில்கள் கொரோனா காரணமாக கடந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்த ரெயில்கள் தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு முன்பதிவு இல்லாத எக்ஸ்பிரஸ் ரெயிலாக இன்று முதல் இயக்கப்படுகிறது.
அரக்கோணத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் காலை 9.45 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் நிலையத்திற்கு வந்தடையும். அதேபோல் வேலூர் கண்ட்ரோன்மென்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு 11.50 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
மதியம் 2. 5 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் மாலை 4. 35 மணிக்கு வேலூர் கண்டோன்மென்ட் சென்றடையும் .
அதேபோல வேலூர் கண்ட்ரோன்மெண்ட் ரெயில் நிலையத்திலிருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு இரவு 7. 15 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.
அரக்கோணத்தில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு இரவு 10.50 மணிக்கு காட்பாடி சென்றடையும். இதே போல காட்பாடியில் இருந்து காலை 4.25 புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 6.5 மணிக்கு அரக்கோணத்தை சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாசஞ்சர் ரெயில்களாக இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில்கள் வழக்கம் போல் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் ரெயில்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளதால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து காட்பாடிக்கு பாசஞ்சர் ரெயிலில் ரூ.20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில் என பெயர் மாற்றப்பட்டுள்ளதால் இந்த ரெயிலில் ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு பிறகு ெரயில்கள் மீண்டும் ரெயில் இயக்கப்படுவதால் மகிழ்ச்சி அடைந்த பயணிகள் டிக்கெட் கட்டண உயர்வால் அவதியடைந்துள்ளனர். மீண்டும் பழைய கட்டணத்திலேயே ரெயில்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் மற்றும் மாணவ மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.






