என் மலர்tooltip icon

    இந்தியா

    புதிய ரெயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்..!
    X

    புதிய ரெயில் கட்டண உயர்வு நாளை முதல் அமல்..!

    • மெயில் மற்றும் விரைவு ரெயில்களில் 2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்புகளுக்கு கி.மீ.-க்கு 1 பைசா உயர்வு.
    • அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு.

    ரெயில் கட்டணம் உயர இருப்பதாக தகவல் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், ஜூலை 1ஆம் தேதி முதல் விலை உயர்த்தப்படும் என ரெயில்வேத்துறை அறிவிப்பாணை வெளியீட்டுள்ளது. அதன்படி நாளை முதல் புதிய ரெயில் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

    ரெகுலர் ஏ.சி. அல்லாத வகுப்புகள் (Non-Suburban Trains)

    இரண்டாம் வகுப்பு சாதாரண கட்டணம்: கிலோ மீட்டருக்கு அரை பைசா உயர்வு

    500 கி.மீ. வரை கட்டண உயர்வு இல்லை.

    501 - 1500 கி.மீ. வரை கட்டணம் ரூ.5 உயர்வு.

    1500 - 2500 கி.மீ. வரை கட்டணம் ரூ.10 உயர்வு.

    2501 - 3000 கி.மீ. வரை கட்டணம் ரூ.15 உயர்வு.

    ஸ்லீப்பர் வகுப்பு: கி.மீ.-க்கு அரை பைசா உயர்வு

    முதல் வகுப்பு: கி.மீ.-க்கு அரை பைசா உயர்வு

    மெயில் மற்றும் விரைவு ரெயில்கள்

    2ஆம் வகுப்பு, முதல் வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் வகுப்பு: கி.மீ.-க்கு 1 பைசா உயர்வு

    அனைத்து ஏ.சி. வகுப்புகளுக்கும் கிலோ மீட்டருக்கு 2 பைசா உயர்வு

    புறநகர் ரெயில் மற்றும் சீசன் டிக்கெட் கட்டண உயர்வு இல்லை.

    Next Story
    ×