search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police Residential"

    எழும்பூர் புதுப்பேட்டையில் 80 போலீஸ் குடியிருப்புகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். #EdappadiPalaniswami

    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை, காமராஜர் சாலையில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகத்தின் அருகில் 2 கோடியே 52 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு வளைவினை திறந்து வைத்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோயம்புத்தூர் மாநகர் காந்திபுரத்தில் 10 கோடியே 90 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 128 காவலர் குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

    44 கோடியே 76 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 339 காவலர் குடியிருப்புகள், காவல் நிலையம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையக் கட்டடம், தீயணைப்பு ஊர்தி நிறுத்துவதற்கான கட்டடம் மற்றும் திண்டுக்கல், காஞ்சிபுரம் மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 28 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

    சென்னை எழும்பூர் புதுப்பேட்டையில் 80 காவலர் குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம் மணிமுத்தாறில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் 9-ம் அணிக்காக 82 காவலர் குடியிருப்புகள் மற்றும் திருநெல்வேலி ஊரக ஆயுதப்படைக்காக 162 காவலர் குடியிருப்புகள், திருப்பூர் மாவட்டம் குடிமங்கலத்தில் 15 காவலர் குடியிருப்புகள், என 41 கோடியே 13 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 339 காவலர் குடியிருப்புகள்.

    சென்னை மாதவரத்தில் 1 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதவரம் பால் பண்ணை காவல் நிலையக் கட்டடம்; தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 67 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையம்; காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் 1 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வான்நோக்கி உயரும் 104 மீட்டர் நீளம் கொண்ட ஏணி ஊர்தியினை நிறுத்துவதற்கான கட்டடம் என மொத்தம், 55 கோடியே 67 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

    ×