search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாத்தான்குளத்தில் அனுமதி இன்றி உண்ணாவிரத போராட்டம்- முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது
    X

    போலீசார் எர்வர்ட் ராஜதுரையை கைது செய்த போது எடுத்த படம்.


    சாத்தான்குளத்தில் அனுமதி இன்றி உண்ணாவிரத போராட்டம்- முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் உட்பட 5 பேர் கைது

    • முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
    • சாத்தான்குளத்தில் மட்டும் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டுள்ளதாக எட்வர்ட் ராஜதுரை கூறினார்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சி பகுதியில் புதிய குடிநீர் இணைப்பு திட்டத்திற்காக வைப்புத் தொகை ரூ. 8,100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    உண்ணாவிரதம்

    வைப்புத் தொகை கூடுதலாக உள்ளதாகவும் இதனை ரத்து செய்ய வேண்டும் என கோரி முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் எட்வர்ட் ராஜதுரை தலைமையில் சாத்தான்குளம் வாசகசாலை பஜாரில் உண்ணாவிரத போராட்டம் நடத்த போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

    போலீசார் அனுமதி மறுத்ததால் தடையை மீறி வாசக சாலை பஜாரில் உண்ணாவிரதம் இருந்தனர். இதைத்தொடர்ந்து அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக எட்வர்ட் ராஜதுரை உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது எட்வர்ட் ராஜதுரை போலீசாருடன் வாக்குவாத்த்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் கூறியதாவது:-

    கூடுதல் கட்டணம் புகார்

    சாத்தான்குளத்தில் மட்டும் தான் குடிநீர் கட்டணம் கூடுதலாக முன்வைக்கப்பட்டு ள்ளது, உடன்குடி, நாசரேத், தெந்திருப்பேரை பேரூராட்சியில் குடிநீர் வைப்புத் கட்டணம் குறைவாக உள்ளது.

    எனவே கூடுதல் குடிநீர் கட்டணம் ரூ. 8 ஆயிரத்தை ரத்து செய்ய கோரி தீர்மானம் நிறைவேற்றி கலெக்டருக்கு அனுப்ப வேண்டும். கட்டணத்தை ரத்து செய்யும் வரை போராட்டம் நடத்துவேன் என்றார்.


    Next Story
    ×