என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணி நிரந்தரம்"
- முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாநகராட்சியில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 4 மண்டலங்களிலும் தூய்மை தொழிலாளர்களாக பணி செய்து வருகின்றனர்.
இந்நிலையில் 4 மண்டலத்தை சேர்ந்த டிரைவர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் 400-க்கும் மேற்பட்டோர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை ஒப்பந்த நிறுவனம் வழங்க வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூய்மை பாரத டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணி டிரைவர்கள், தூய்மை பணியாளர்களை தமிழ்நாடு பணி 1981-ன் படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
தமிழக அரசாணை படி தூய்மை பணியாளர்களுக்கு சம்பள பில்லுடன் நாள் ஒன்றுக்கு 725-ம் ஓட்டுனருக்கு 763-/ம் வழங்க வேண்டும். பி.எப், இ.சி.ஐ. தொழிலாளர்களிடம் பணம் பிடித்தம் செய்வதை முறைப்படுத்த வேண்டும்.
ஊதியம் குறித்த நாளில் ஒவ்வொரு மாதமும் 1-ந் தேதிக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட19 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்,
இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, `கடந்த மாதம் 26-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் என்று உறுதி அளித்துள்ளனர்.
ஆனால் கடந்த 5-ந் தேதி அனைத்து மண்டலத்தில் பணிபுரியும் டிரைவர் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சம்பளத்தில் 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது நிறைய பணியாளர்களுக்கு, குறைவாக சம்பளம் அவர்களது கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த செயலை கண்டித்து கோரிக்கைகள் நிறைவேறும் வரை காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். திடீரென சாலை மறியலில் ஈடுபட தொடங்கினர். இதனால் தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராம் தலைமையில் பாதுகாப்பு பணிக்காக 50-க்கும் மேற்ப்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்
தகவல் அறிந்த தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், 5 கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் எனவும், 50 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டதை திரும்ப பணியாளர்களுக்கு வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதனை ஏற்று அவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து மேயர் ஜெகன் பெரியசாமி கூறுகையில், தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாக பிரச்சினை காரணமாக போராட்டம் நடைபெற்றது. பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இ .எஸ்.ஐ. , பி.எப். பிடித்தம் கணக்கு காட்டவில்லை என்றனர். அது வழங்கப்படும்.
பணியில் காயம் ஏற்பட்டால் மருத்துவ சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்ய வழி வகை செய்யப்படும் என்று கூறிய நிலையில் தொழிலாளர்கள் அதனை ஏற்று கலைந்து சென்றனர் என்றார். அப்போது மேயருடன் துறை சார்ந்த அதிகாரிகள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார்.
- இனியாவது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி:
கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும், கிராம பஞ்சாயத்து ஊழி யர்களை பணி நிரந்தரம் செய்ய மறுக்கும், புதுச்சேரி அரசை கண்டித்து, காரைக் காலில் கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகே நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டத் திற்கு, கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க தலைவர் நாகராஜன் தலைமை தாங்கினார். அரசு ஊழி யர் சம்மேளன கவுரவத் தலைவர் ஜார்ஜ், தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் ஷேக் அலா வுதீன், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர் சம்மேளன தலை வர் அய்யப்பன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வரும் தினக்கூலி ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படு வார்கள் எனும் முதல மைச்சரின் அறிவிப்பின்படி, உள்ளாட்சி அமைப்புகளான கிராம பஞ்சாயத்துகளில் 12 வருடங்களுக்கு மேலாக தினக்கூலி ஊழியர்களாக பணியாற்றி வரும் ஊழியர்க ளை பணி நிரந்தரம் செய்ய காலதாமதம் செய்யும் உள்ளாட்சித்துறை, இனியா வது அரசு அறிவிப்புப்படி செயல்படவேண்டும் என வலியுறுத்தப்பட்டது. முடிவில் சங்க செய லாளர் சகாயராஜ் நன்றி கூறினார். கூட்டத்தில், சம்மேளனன நிர்வாகிகள் கலைச் செல்வன், திவ்விய நாதன், சந்தன சாமி, புக ழேந்தி, கலைச்செல்வன் உள்ளிட்ட ஏராள மானோர் கலந்து கொண்டு கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர்.
- தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது.
- பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் திரு.பட்டினத்தை அடுத்துள்ள வாஞ்சூர் பகுதியில் இயங்கி வந்த, தனியார் துறை முகத்தை அண்மையில் அதானி குழுமம் கையகப்ப ப்டுத்தியுள்ளது. அதுமுதல், துறைமுகத்தின் பல்வேறு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, வாஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் துப்புரவு ஊழியர்கள், கடந்த 14 ஆண்டுகளுக்கு மேலாக தனியார் துறைமுகத்தில் வேலை செய்து வருகிறார்கள். 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யப்ப டுவார்கள் என கூறியதாக தெரிகிறது. ஆனால், 14 ஆண்டுகள் ஆகியும் ஒரு ஊழியரை கூட பணி நிர ந்தரம் செய்யப்படவில்லை.
இதனால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கு மேற்பட்ட துப்புரவு ஊழியர்கள், துறைமுகம் வாயிலில் முற்றுகையிட்டு போராட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. போராட் டத்தின்போது, 14 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் பெண் துப்புரவு ஊழியர்களை, உடனே பணி நிரந்தரம் செய்யவேண்டும். என வலியுறுத்தப்பட்டது. இதை அறிந்த, திரு.பட்டினம் போலீசார், போராட்டக்காரர்களுடன் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, துறை முகம் நிர்வாகத்துடன் இது குறித்து பேசப்படும் என சமாதானம் செய்ததையடுத்து, அனைவரும் கலைந்துச் சென்றனர்.
- 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
- 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர்.
திருப்பூர் :
அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டட க்கலை, வாழ்வியல்திறன் படிப்புகளை கற்றுத்தர 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூ தியத்தில் நியமிக்கப்ப ட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரி கின்றனர். 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி வருகிறோம்.
பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வர் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 12 ஆண்டுகளை கடந்து பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.பெரும்பாலானோர் 50 வயதை கடந்து விட்டார்கள். பணிநிரந்தரம் செய்தால் கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். தி.மு.க., தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் பணிநிரந்தரம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- 17 தினக்கூலி தொழிலாளா்களுக்கு பணிச் சுமையை குறைக்க புதிதாக தினக்கூலி பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
- 10 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பணிபுரிந்து வருவதால் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
தஞ்சாவூா்:
தஞ்சையில் ஏ.ஐ.டி.யூ.சி அரசு பண்ணை தொழிலாளா் சங்கக் கூட்டம் கிருஷ்ணவேணி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், காட்டுத்தோட்டம் மண், நீா் மேலாண்மை ஆராய்ச்சி பண்ணையில் பணிபுரியும் 17 தினக்கூலி தொழிலாளா்களுக்கு பணிச் சுமையை குறைக்க புதிதாக தினக்கூலி பணியாளா்களை நியமிக்க வேண்டும்.
தினக்கூலியாக பணிபுரிந்த 17 தொழிலாளா்கள் 10 ஆண்டுகளுக்கு மேல் தொடா்ந்து பணிபுரிந்து வருவதால் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுத் தோட்டம் பண்ணை முன்பு வருகிற 28-ந்தேதி ஆா்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இதில், ஏஐடியூசி மாநிலச் செயலா் சந்திரகுமாா், சங்க மாநிலப் பொதுச் செயலா் அரசப்பன், சங்க நிா்வாகிகள் வனிதா, பிரபாகரன், சாந்தி, பரிமளா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
- ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.
- ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம், மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன், நிர்வாகிகள் சுதா , கல்யாணி, பாலமுருகன், அயூப்கான் ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாநகராட்சி தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க வேண்டும் . சுய உதவிக்குழு மூலம் சம்பளம் வழங்குவதை நேரடியாக வழங்க வேண்டும். முழு நேர பணியாளர்களை பகுதி நேர பணியாளராக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.
மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.தூய்மை பணிகளுக்குரிய சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ .21,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர், இறந்தவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி உண்ணாவிரதம்
- 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை போராட்டம்
புதுச்சேரி:
பணி நிரந்தரம் மற்றும் ஊதிய உயர்வு கோரி, காரைக்காலில் 108 ஆம்புலன்ஸ் டிரைவர்கள் இன்று காலை உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
- பொய்யான தகவலை பரப்புவார்கள் மீது சட்ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- துணை தலைவர் செந்தில் என்கிற பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை, மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.இணை பொதுச் செயலாளர் ஈ.பி.அ.சரவணன் சந்தித்து மனு கொடுத்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:- மின்சார வாரியத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக காலி பணியிடங்களை நிரப்ப வெளியிட்டுள்ள அறிவிப்பை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களையும் விரைவாக பணிநிரந்தரம் செய்ய வேண்டும். தமிழ்நாடு மின்சார மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
அவர்களை பணிநிரந்தரம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொய்யான தகவலை பரப்புவார்கள் மீது சட்ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதில் மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச. தலைவர் பண்டிததுறை, துணை தலைவர் செந்தில் என்கிற பழனிசாமி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
- தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர், அக்.17-
தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு (மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.) சார்பில் இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-
தமிழக மின்சார வாரியத்திலுள்ள தொழிலாளர்களிடம் அரசிற்கு எதிராக சென்னையில் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் பணிநிரந்தரம் கிடைக்கும் என பொய் தகவலை பரப்பி தற்கொலை எண்ணத்திற்கு தூண்டி விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் சூழலில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் இது தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும்
தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார். செயலாளர் ராஜலிங்கம் இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில், மருத்துவர் சமூக மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் உள்ள ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும். சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திருக்கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் தபால் தலை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் துணைத் தலைவர் பிரபாகரன், துணைச் செயலாளர் ஜீவரத்தினம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ரகுராமன் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் மனோகரன், சின்னராஜா, ரமேஷ், மோகனகுமார், நிர்மல், பார்த்திபன், சரவணன், மணிகண்டசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.
- பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
- ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் காட்டுத்தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலைய பண்ணை தொழிலாளர் சங்க கூட்டம் வனிதா தலைமையில் தஞ்சையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காட்டுத் தோட்டம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் பல ஆண்டுகளாக தினக்கூலியாக பணிபுரிந்து வரும் பண்ணை தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்,
தினக்கூலி ரூ. 750 ஆக உயர்த்தப்பட வேண்டும், ஓய்வு பெற்ற பணியாளர்கள் அனைவருக்கும் விடுபடாமல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக கூட்டத்தில் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி தலைவராக வேம்பு, செயலாளராக வனிதா, பொருளாளராக கிருஷ்ணவேணி, துணைத் தலைவராக பிரபாகரன், துணைச் செயலாளராக பரிமளா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி மாநில செயலாளர் சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜன், பண்ணை தொழிலாளர் சங்கத்தின் மாநில பொது செயலாளர் அரசப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் முறையிட்டனர்.
- தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்தில், பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.
திருப்பூர் :
மின்வாரியத்தில் பணியாற்றி வரும் தற்காலிக ஒப்பந்த பணியாளர்கள், தொழிலாளர் சட்ட விதிகளின்படி, பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென போராட துவங்கி விட்டனர்.அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றி வரும் 40 மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள், கலெக்டரிடம் இதுகுறித்து முறையிட்டனர்.தொழிலாளர் நல உதவி கமிஷனர் அலுவலகத்திலும், பணி நிரந்தரம் கோரிவிண்ணப்பித்துள்ளனர்.
இதையடுத்து தொழிலாளர் உதவி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜராக வந்திருந்தனர்.தற்காலிக பணியாளர்கள் -உதவி கமிஷனர் மலர்க்கொடி வந்திருந்தனர். அடுத்த மாதம் 2-ந்தேதி தேதி மாலை 3 மணிக்கு, அசல் ஆவணங்களுடன் ஆஜரானால், பணிநிரந்தரம் கோருவது தொடர்பாக உத்தரவிடப்படும் என உதவி கமிஷனர் அவகாசம் வழங்கியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்