search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "job permanent"

    • தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பூர், அக்.17-

    தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொழிலாளர் முன்னேற்ற கூட்டமைப்பு (மின்வாரிய பொது ஒப்பந்த தொ.மு.ச.) சார்பில் இணை பொதுச்செயலாளர் ஈ.பி.அ.சரவணன் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

    தமிழக மின்சார வாரியத்திலுள்ள தொழிலாளர்களிடம் அரசிற்கு எதிராக சென்னையில் போராட்டம் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் பணிநிரந்தரம் கிடைக்கும் என பொய் தகவலை பரப்பி தற்கொலை எண்ணத்திற்கு தூண்டி விட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் ஏதேனும் உயிர் இழப்பு ஏற்படும் சூழலில் தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால் இது தொடர்பாக தமிழக காவல்துறை அதிகாரிகள் விரைவாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில்களில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
    • முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும்
    திருச்சி:

    தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் முடி திருத்தும் தொழிலாளர் சங்க ஸ்ரீரங்கம் மாநகர சங்கம் சார்பில் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் பகுதியில் கொண்டாடப்பட்டது.

    விழாவிற்கு தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி சங்க கொடியை ஏற்றினார். துணைத்தலைவர் சுரேஷ் வரவேற்றார். செயலாளர் ராஜலிங்கம் இளைஞர் அணி செயலாளர் மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    விழாவில், மருத்துவர் சமூக மக்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் உள்ள ஒதுக்கீடு 5 சதவீதம் வழங்க வேண்டும். சட்டப் பாதுகாப்பு வழங்க வேண்டும். திருக்கோவிலில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

    முடி திருத்தும் கடைகளுக்கு மின்சாரம் அரசு மானியமாக வழங்கிட வேண்டும். சுதந்திரப் போராட்ட தியாகி விஸ்வநாததாஸ் தபால் தலை வெளியிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் துணைத் தலைவர் பிரபாகரன், துணைச் செயலாளர் ஜீவரத்தினம், இளைஞர் அணி துணைச் செயலாளர் ரகுராமன் ,இளைஞர் அணி அமைப்பாளர்கள் மனோகரன், சின்னராஜா, ரமேஷ், மோகனகுமார், நிர்மல், பார்த்திபன், சரவணன், மணிகண்டசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் சங்கர் நன்றி கூறினார்.




    ×