என் மலர்
நீங்கள் தேடியது "SHOP CLOSURE"
- சாலை சீரமைப்பு பணியில் தொய்வு கண்டித்து
- பொதுமக்கள் உண்ணாவிரதம்
ஆலங்குடி,
புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடி தாலுகா திரு–வரங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்லாலங்குடி ஊராட்சி. இந்த பகுதியில் சாலை–கள் சீரமைப்பு பணி நடை–பெற்று வருகிறது. ஆனால் இந்த பணி உரிய வகையில் முழுமையாக நடைபெற–வில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்தது. எனவே ஊராட்சிக்கு உட்பட்ட குளத்தில் இருந்து மண் எடுத்த சாலைகளை முழுமையாக சீர் செய்ய வேண்டும், பணம் பறிக்கும் நோக்கத்தில், தனி நபர் ஒருவர் அதிகாரிகளை தடுத்து மிரட்டி வருவதால், பணிகள் நடைபெறாமல் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின் றனர். எனவே இதனை கண்டித்தும், சாலை பணிகளை முழுமையாக முடிக்க கோரியும் கண்டன கடையடைப்பு நடத்த போவ–தாக அப்பகுதியில் போஸ் டர் ஒட்டப்பட்டது. அதன்படி இன்று காலை கடைகளை அடைத்து பொதுமக்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். நூற் றுக்கும் அதிகமானோர் உண்ணாவிரத போராட்டத் தில் கலந்துகொண்டனர். அப்போது பேசிய அவர்கள் தங்கள் கோரிக்கை நிறை–வேறும் வரை உண்ணா–விரத பந்தலை விட்டு வெளியே செல்ல–மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு பதட்டமான சூழல் நிலவி வருவதால் வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது–மக்க–ளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடு–பட்டுள்ளனர். இனிமேலும் நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 26-ந்தேதி குடியரசு தினத் தன்று நடைபெற உள்ள கிராமசபை கூட்டத்தை ஊராட்சி பொதுமக்கள் புறக்கணிப்போவதாகவும் தெரிவித்து உள்ளனர்.
- புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான, சம்மேத சிகர்ஜி, பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
- அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தரங்கம்பாடி:
ஜெயின் சமூகத்தினரின் புண்ணிய ஸ்தலங்களை சுற்றுலா மையங்களாக அறிவித்த மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயின் சமூகத்தினர் 500-க்கும் மேற்பட்டோர் கடைகளை அடைத்து, அமைதி பேரணியாக ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
புராதன ஜெயின் மதத்தினரின் புண்ணிய ஸ்தலங்களான ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள சம்மேத சிகர்ஜி, குஜராத் மாநிலம் பாலிதானா மற்றும் கிர்னார்ஜி ஆகிய ஆலயங்கள் உள்ள பகுதிகளை சுற்றுலா மையமாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.
இந்த அறிவிப்பை திரும்ப பெற கோரி ஜெயின் சமூகத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடு–துறை, சீர்காழி, செம்ப–னார்கோயில், குத்தாலம், வைத்தீஸ்வரன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 300-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஜெயின் சங்கம் சார்பில் ரமேஷ் ஜெயின் தலைமையில் விபின் ஜெயின், ராஜூவ் ஜெயின், ரஞ்ஜித் ஜெயின், ரௌனிஸ் ஜெயின், உள்ளிட்ட ஜெயின் சமூகத்தினர் அமைதி பேரணி நடத்தினர்.
மயூரநாதர் தெற்கு வீதியில் இருந்து துவங்கிய அமைதி பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பாலாஜியிடம் மனு அளிக்கப்பட்டது.
பேரணியில் பங்கேற்ற–வர்கள் தங்கள் கோரிக்கைகளை வலி–யுறுத்தியும், பதாகைகளை ஏந்தியும் கோஷங்களை எழுப்பியும் கலந்து கொண்டனர்.
- அரசின் கலை விழா 2 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெறும் நிலையில் பல மாநில கலைஞர்கள் ஏனாமிற்கு வந்துள்ளனர்.
- கடை அடைப்பு போராட்டம் கலைஞர்களையும், மக்களின் இயல்பு வாழ்க்கையையும் பாதித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை ஏனாம் பிராந்தியம் ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்று பகுதியில் உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் ஏனாம் தொகுதிகளில் முதல்-அமைச்சர் ரங்கசாமி போட்டியிட்டார்.
ஏனாமில் அவர் தோல்வியுற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சுயேட்சை வேட்பாளர் கொல்ல பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் வெற்றி பெற்றார். இருப்பினும் அவர் பா.ஜனதா-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் கடந்த மாதம் 7-ந் தேதி சட்டமன்றம் வளாகத்தில் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார். அவருடன் முதல்-அமைச்சர் ரங்கசாமி பேச்சுவார்த்தை நடத்தி 15 கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.
இந்த கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதற்கிடையே ஏனாம் எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் முதல்-அமைச்சர் ரங்கசாமி குறித்து அவதூறாக பேசியதாக சமூகவலைதளத்தில் பரவியது. இதனால் கொதித்தெழுந்த புதுவை என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் முதல்-அமைச்சர் ரங்கசாமியை அவதூறாக பேசிய ஏனாம் எம்.எல்.ஏ. மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம் தலைமையில் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடமும், போலீஸ் டி.ஜி.பி.யிடமும் மனு அளித்தனர்.
இன்றும் என்.ஆர். காங்கிரசார் ஏனாம் எம்.எல்.ஏ.வை கண்டித்து புதுவையில் பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கோரிக்கைகளை வலியுறுத்தியும் முதல்-அமைச்சரை கண்டித்தும் நேற்று ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. மண்டல அதிகாரி அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.
மேலும் ஏனாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் தொடங்கி வைத்த அரசின் 19-வது ஆண்டு கலை விழாவை எம்.எல்.ஏ. கொல்லப்பள்ளி ஸ்ரீநிவாஸ் அசோக் புறக்கணித்தார்.
இன்று 2-வது நாளாக உண்ணாவிரதம் தொடர்ந்தது. இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என ஸ்ரீநிவாஸ் அசோக் எம்.எல்.ஏ. அறிவித்திருந்தார். இதன்படி இன்று ஏனாமில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. ஏனாமில் காலை முதல் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன.
- ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
- குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
ராஜபாளையம்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.
பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.
இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.
இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.
இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
- நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
- நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 41-வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் தேர்தல், மகாசபை கூட்டம் ஆகியன நாளை (14-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடன்குடி வடக்கு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதனால் நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதனால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்து விட்டு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு உடன்குடி சங்கத் தலைவர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
- கரூரில் நாளை முழு கடையடைப்பு நடைபெற உள்ளது
- ஜி.எஸ்.டி வரி விதிப்பை கண்டித்து
கரூர்:
ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து கரூர் மாவட்டத்தில் அரிசி ஆலைகள், கடைகள், மளிகை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ், மண்டி கடைகள் நாளை முழு கடையடைப்பு செய்கின்றன. மத்திய அரசு அத்தியாவசிய உணவு பொருளான அரிசி, கோதுமை, பருப்பு ஆகிய உணவு தானியங்களுக்கு ஜிஎஸ்டி வரி 5 சதவீதம் விதித்திருப்பது சாமான்ய மககளை பாதிக்கும் என்பதனை கருத்தில் கொண்டு அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும். இதனை வலியுறுத்தி கரூர் மாவட்ட அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கம், கரூர் மாவட்ட அரிசி மொத்த வியாபாரிகள் சங்கம், கரூர் நகர உணவு பொருள் வணிகர்கள் சங்கம், உணவு தானிய மண்டி (வணிக வளாகம்) கரூர், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழில் கழகம் சார்பில் அரிசி ஆலைகள், அரிசி மொத்த, சில்லரை வியாபாரங்கள், மளிகை கடைகள், டிபார்ட்மெண்ட் ஸ்டோர், தானிய மண்டி (வணிக வளாகம்) ஆகிய நிறுவனங்கள் நாளை (16-ந் தேதி) ஒரு நாள் முழு கடை அடைப்பு செய்வதாக அறிவித்துள்ளன.