search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vellayan"

    • நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது.
    • நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது.

    அச்சரப்பாக்கம் :

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி நேற்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.

    மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட சங்க நிர்வாகிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் நிருபர்களிடம் த.வெள்ளையன் கூறியதாவது:-

    நம் நாட்டில் அந்நிய வணிகம் மேலோங்கி உள்ளது. இதன்மூலம் நமது வணிகத்தை உயிரோடு குழிதோண்டி புதைத்து வருகிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். நம் நாட்டு தயாரிப்புகளை பார்த்து வாங்கி அதை வியாபாரிகள் விற்பனை செய்ய வேண்டும்.

    அந்நிய தயாரிப்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது. நம் நாட்டு தயாரிப்புகள் காப்பாற்றப்பட வேண்டும். அந்நிய தயாரிப்புகளை விரட்டி அடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு வணிகர் சங்க பேரவை தொடர்ந்து போராடும்.

    எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது அரிசிக்கும் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி ஒழியும் வரை நாம் போராட வேண்டும்.

    எதற்காகவும் சிறைக்கு செல்லவும் தயாராக வேண்டும். இதன் முதல் கட்டமாக மதுரையில் விரைவில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்பட உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
    • நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    உடன்குடி:

    உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 41-வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் தேர்தல், மகாசபை கூட்டம் ஆகியன நாளை (14-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடன்குடி வடக்கு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.

    இதனால் நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    அதனால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்து விட்டு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு உடன்குடி சங்கத் தலைவர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    வால்மார்ட் நிறுவனத்தை விரட்டி அடிப்போம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.

    சென்னை:

    தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது சில்லரை வணிகத்தை சீரழிக்கும் செயல் ஆகும். லட்சோப லட்சம் சிறுவணிகர்களின் வாழ்தாவாரத்தையும், வாழ்க்கை முறையையும் சின்னா பின்னாமாக்கி விடும்.

    எனவேதான் அந்நிய நேரடி முதலீட்டை கடுமையாக எதிர்த்து வருகிறோம். அமெரிக்காவின் வால்மார்ட் நிறுவனம் தமிழகத்தில் கால் ஊன்ற முயற்சித்த போது வணிகர்களை திரட்டி போராடினோம். அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா இந்த வி‌ஷயத்தில் வணிகர்களுக்கு துணையாக நின்றது மறக்க முடியாதது.

    அன்று விரட்டப்பட்டு முன் வாசல் வழியாக வெளியேறி வால்மார்ட் நிறுவனம் இன்று இந்திய ஆன்-லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட்டின் 77 சதவீத பங்குகளை வாங்கி பின் வாசல் வழியாக நுழைந்து சில்லரை வணிகத்தை ஒட்டு மொத்தமாக கைப்பற்ற பார்க்கிறது. மத்திய அரசு இதை அனுமதித்து இருப்பது கண்டிக்கத்தக்கது.

    உள்நாட்டு வணிகத்தின் மீதும், வணிகர்கள் மீதும் உண்மையில் அக்கறையிருந்தால் பிளிப்கார்ட்- வால்மார்ட் உடன்பாட்டை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பன்னாட்டு நிறுவனங்களை இந்தியாவிற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலக வேண்டும். வால்மார்ட் நிறுவனத்தை இந்தியாவிற்குள் நுழைய வணிகர்கள் அனுமதிக்கமாட்டோம். ஆன்லைன் வணிகத்தில் நுழைந்த வால்மாட்டை விரட்டி அடிப்போம்.

    தேச விரோத வர்த்தக செயல்பாடுகளை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து தடுத்து நிறுத்த வேண்டும். இல்லை என்றால் வணிகர் நலன் காக்க தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை நேரடியாக களம் இறங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பதை எச்சரிக்கிறோம்.

    இவ்வாறு த.வெள்ளையன் கூறினார். #tamilnews

    ×