என் மலர்
நீங்கள் தேடியது "visit"
- நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
- நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
உடன்குடி:
உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்கத்தின் 41-வது ஆண்டு விழா மற்றும் புதிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் தேர்தல், மகாசபை கூட்டம் ஆகியன நாளை (14-ந்தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு உடன்குடி வடக்கு பஜாரில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதனால் நாளை உடன்குடி பஜார் 4 சந்திப்பு வீதிகள், பஸ் நிலையம், சத்தியமூர்த்தி பஜார் ஆகிய பகுதிகளில் உள்ள ஓட்டல் உட்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்படுகிறது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு வணிகர்கள் சங்கங்க ளின்பேரவை தலைவர் வெள்ளையன், மாநில பொதுச்செயலாளர் விநாயகர் மூர்த்தி, குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
அதனால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கடைகளை அடைத்து விட்டு கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பிக்குமாறு உடன்குடி சங்கத் தலைவர் ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மாலை 6.30 மணிக்கு கோவை வருகிறார்.
விமான நிலையத்தில் அவருக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து ஈச்சனாரி செல்லும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அங்கு நடைபெறும் சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்று பேசுகிறார். பின்னர் இரவு அரசு விருந்தினர் மாளிகையில் தங்குகிறார்.
நாளை(சனிக்கிழமை) காலை கொடிசியாவில் நடைபெற உள்ள ‘உயிர்’ அமைப்பு தொடக்க விழாவில் பங்கேற்கிறார். தமிழ் நாட்டில் விபத்து உயிரிழப்பு நடைபெறும் நகரங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை நகரம் உள்ளது.
விபத்து உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்தினால் உடல் ஊனம் ஏற்படுவதை தவிர்க்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கோவை நகரின் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்களால் ‘உயிர்’ அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘உயிர்’ அமைப்பை தொடங்கி வைத்து பேசுகிறார். நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கலந்து கொள்கிறார்கள்.
பின்னர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உக்கடம் ஆத்துப்பாலம் மேம்பாலப்பணிகள், உக்கடம் பெரியகுளம் உள்பட ‘ஸ்மார்ட் சிட்டி’ பணிகளை பார்வையிடுகிறார்.
பின்னர் கவுண்டம்பாளையம் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை பார்வையிடுகிறார். மாலையில் பல்லடம் எம்.எல்.ஏ. கரைப்புதூர் நடராஜன் இல்லத் திருமண விழாவில் பங்கேற்கிறார். பின்னர் இரவு கோவை திரும்பி விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.
முதல்-அமைச்சர் வருகையையொட்டி அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். கோவை நகரின் பல இடங்களில், முதல்-அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களிலும் அவரை வரவேற்று அ.தி.மு.க. கொடி, தோரணங்கள், பிளக்ஸ் பேனர்கள் வைத்துள்ளனர். #ADMK #EdappadiPalaniswami
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், மத்திய ஆசிய நாடுகளில் ஒன்றான தஜிகிஸ்தானில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சவிதா கோவிந்துடன் நேற்று தஜிகிஸ்தான் புறப்பட்டு சென்றார்.
ராணுவ இணை மந்திரி சுபாஷ் ராம்ராவ் பாம்ரே மற்றும் மாநிலங்களவை எம்.பி. சாம்சேர் சிங் மன்ஹாஸ் ஆகியோரும் ஜனாதிபதியுடன் சென்று இருக்கிறார்கள்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தஜிகிஸ்தான் அதிபர் எமமொலி ரஹ்மான், பிரதமர் கோஹிர் ரசூல்சோடா மற்றும் நாடாளுமன்ற சபாநாயகர் சுகுர்ஜோன் சுரோவ் ஆகியோரை நேரில் சந்தித்து பேசுகிறார்.
இந்த சந்திப்பின் போது இருநாட்டு உறவு, பிராந்திய மற்றும் பன்முக ஒத்துழைப்பு தொடர்பாக அவர்களுடன் ராம்நாத் கோவிந்த் தீவிர ஆலோசனை நடத்துவார் என தெரிகிறது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அந்நாட்டின் தலைநகர் துஷன்பேயில் உள்ள மகாத்மா காந்தி மற்றும் ரவீந்தரநாத் தாகூர் ஆகியோரின் நினைவிடங்களில் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மாரியாதை செலுத்துகிறார்.
அதனைத் தொடர்ந்து தஜிகிஸ்தான் தேசிய பல்கலைக்கழகத்துக்கு செல்லும் ராம்நாத் கோவிந்த், அங்கு மாணவர்கள் மத்தியில் ‘பிரிவினைவாதத்தை ஒழிப்போம்; நவீன சமுதாயத்தின் சவால்கள்’ என்கிற தலைப்பில் உரையாற்றுகிறார். அதன் பின்னர் அவர் தஜிகிஸ்தானில் வாழும் இந்திய வம்சாவளியினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய ஜனாதிபதி ஒருவர் தஜிகிஸ்தான் செல்வது இதுவே முதல்முறை. இருநாடுகளுக்கு இடையே நெருங்கிய நட்புறவு தொடர்ந்து வரும் நிலையில், ராம்நாத் கோவிந்தின் பயணம் இந்த உறவை மேலும் பலப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. #Tajikistan #RamNathKovind
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது முதல் மத்திய ஆசிய நாடான தஜகிஸ்தானுக்கு அரசுமுறை பயணத்தை நாளை துவங்க உள்ளார். நாளை முதல் 9-ம் தேதி வரை நடைபெற உள்ள இந்த பயணத்தில் அந்நாட்டு தஜகிஸ்தான் ஜனாதிபதி எமாமோலி ரஹ்மோன், பாராளுமன்ற சபாநாயகர் ஷுகுர்ஜோன் ஜுஹுரோவ், மற்றும் அந்நாட்டு பிரதமர் கோஹிர் ரசுல்ஜோடா ஆகியோரை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், தஜகிஸ்தான் நாட்டின் தேசிய பல்கலைக்கழகத்தில் நவீன சமூகத்தில் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உள்ள சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார். அதேபோல், இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களிடமும் சந்தித்துபேச இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாட்டு உறவுகளையும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் இந்த பயணம் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. இந்த பயணத்தில் ஜனாதிபதியுடன், லோக் சபா உறுப்பினரான சுபாஸ் பம்ரே மற்றும் ராஜ்யசபா உறுப்பினரான ஷம்ஷெர் சிங் ஆகியோர் உடன் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #Tajikistan #RamNathKovind

இதனை அடுத்து, பிரதமரின் இல்லத்துக்கு வந்த புதினை மோடி வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார். பின்னர், இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய பயணத்தை முடிக்கும் முன்பு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட தலைவர்களை புதின் சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. #VladimirPutin #SushmaSwaraj
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகிற 3- ந்தேதி திருவாரூர் வருகை தர உள்ளார்.
3-ந்தேதி மதியம் திருவாரூருக்கு வருகை தரும் புரோகித்திற்கு மாவட்ட எல்லையான வலங்கைமானில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.
அதனை தொடர்ந்து திருவாரூர் வருகை தரும் கவர்னர் பன்வாரிலால் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகையில் மாவட்ட அளவிலான அதிகாரிகளுடன் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.
இதனை தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4.20 மணி வரை பொதுமக்களை சந்தித்து மனுக்கள பெறுகிறார். அதன் பின்னர் திருவாரூர் தெற்குவீதியில் அமைக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்த கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
அதன் பிறகு அகர திருநல்லூர் கிராமத்திற்கு சென்று சுகாதார பணிகளை பார்வையிடுகிறார். தூய்மை செய்யும் பணியிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். அதன்பின்னர் திருவாரூர் விளமல் சுற்றுலா மாளிகை வரும் ஆளுநர் இரவு ஓய்வு எடுக்கிறார். அன்று இரவு கவர்னர் பன்வாரிலால் திருவாரூரில் இருந்து கார் மூலம் திருச்சிக்கு புறப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.
முன்னதாக 3-ந் தேதி காலை கும்பகோணத்துக்கு கவர்னர் பன்வாரிலால் செல்கிறார். காலை 10.30 மணிக்கு கும்பகோணம் அருகே அருகே உள்ள திப்பிராஜபுரம் அரசுபள்ளியில் புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அதனைத்தொடர்ந்து கே.ஆர்.எஸ். கவுசல்யா மகாலில் டாக்டர் செண்பகராமன் பிள்ளையின் உருவச்சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் பிரதமரின் பசுமை புரட்சி திட்டத்தின் சார்பில் திப்பிராஜபுரத்தை தத்து எடுத்து கொள்வதை முறைப்படி அறிவித்து, பல்வேறு துறையில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்ற 50 வயதுக்கு மேற்பட்ட 4 பேரை பாராட்டி நினைவு பரிசு வழங்குகிறார். திப்புராஜபுரம் கிராமத்தில் 20 இடங்களில் கண்காணிப்பு கேமிரா பொருத்தியுள்ளதை இயக்கி வைக்கிறார்.
இதில் தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, அறக்கட்டளையின் கிராமிய திட்ட ஆலோசகர் சென்னை கீதா ராஜசேகர் ஆகியோர் பேசுகின்றனர்.
விழா நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு கும்பகோணத்தில் இருந்து கார் மூலம் கவர்னர் பன்வாரிலால் திருவாரூருக்கு புறப்பட்டு செல்கிறார். #TNGovernor #BanwarilalPurohit