search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "yatra"

    • யாத்திரைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணம் காரணமாக மணிப்பூர் அரசு தொடர்ந்து மறுப்பு.
    • முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் அறிவித்தார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட காரணம் காரணமாக மணிப்பூர் அரசு தொடர்ந்து அனுமதி மறுத்து வந்தது.

    ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், மணிப்பூரில் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரையை மேற்கொள்ள மணிப்பூர் மாநில அரசு அனுமதி அளித்தது.

    குறிப்பிட்ட பங்கேற்பாளர்களுடன் மட்டுமே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    இருப்பினும், பொதுக் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை எனவும் மணிப்பூர் மாநில அரசு நிபந்தனை விதித்துள்ளது.

    • ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என தகவல்.
    • ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஜனவரி 14-ம் தேதி மணிப்பூரில் இருந்து இந்திய ஒற்றுமை நீதிக்கான யாத்திரை தொடங்க திட்டமிட்டிருந்தார்.

    ஆனால், ராகுல் காந்தி யாத்திரைக்கு இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. மணிப்பூர் அரசு யாத்திரைக்கு அனுமதி மறுத்து வருகிறது. ராகுல் காந்தியின் யாத்திரைக்கு அம்மாநில முதல்வர் பைரன் சிங் அனுமதி தரவில்லை என மணிப்பூர் மாநில காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர், " பெரும் அளவில் மக்கள் கூடுவதற்கு வழிவகுக்கும் பொதுக்கூட்டம் நடத்தவும் அனுமதி இல்லை" என்றார்.

    இதுகுறித்து, "காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், "மணிப்பூரின் வேறு பகுதியில் ராகுல்காந்தி யாத்திரையை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    எந்த இடம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும்" என விளக்கம் அளித்துள்ளார்.

    • பெரம்பலூரில் இன்று அண்ணாமலையின் பாதயாத்திரை நடைபெறுகிறது
    • நாளை லால்குடியில் நடக்கிறது

    பெரம்பலூர்,

    பாரதிய ஜனதா கட்சியின் தமிழ் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கும் என் மண், என் மக்கள் யாத்திரை நிகழ்ச்சி பெரம்ப லூரில் இன்று நடைபெறு கிறது .

    பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இன்று மாலை 5 மணிக்கு தொடங்கும் யாத்திரை ரோவர் ஆர்ச், சங்குப்பேட்டை, சிவன் கோவில், கடைவீதி, தெப்ப குளம், கனரா வங்கி, அம்பேத்கர் சிலை, பழைய பேருந்து நிலையம், காந்தி சிலை வழியாக காமராஜர் வளைவு பகுதியில் நிறைவடைகிறது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட மேடையில் அண்ணாமலை பேசுகிறார்.

    இந்த யாத்திரையில் பா.ஜ.க. மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகா னந்தம், மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்கின்றனர்.

    இதனைத் தொடர்ந்து அவர் நாளை(17-ந்தேதி) லால்குடி தொகுதியில் மதியம் 3 மணிக்கு தனது யாத்திரையை தொடங்குகிறார். லால்குடி அருகே ஆங்கரை பிள்ளையார் கோவில் அருகில் யாத்திரையை தொடங்கும் அண்ணா மலைக்கு புறநகர் மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், மாவட்ட பார்வையாளர் யோகிதாசன் தலைமையில் பா.ஜ.க.வினர் வரவேற்பு அளிக்க உள்ளனர்.

    திருச்சி மெயின் ரோடு வழியாக ஆங்கரை, மலை யப்பபுரம், சந்தைப்பேட்டை, லால்குடி ரவுண்டானா சென்று அங்கு நடைபெறும் கூட்டத்தில் பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை புறநகர் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் செய்து வருகின்றனர்

    • 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார்.
    • 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

    தாராபுரம்:

    திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ.க., சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரைக்கு வரவேற்பு அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தாராபுரம் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் வடுகநாதன், பொருளாளர் சுப்பு என்கிற சிவசுப்பிரமணியம் , மாவட்ட துணை தலைவர்கள் ராஜா என்கிற கோவிந்தசாமி, எஸ்.ஆர். விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட தலைவர் மங்களம் என்.ரவி கூறியதாவது:- தமிழகத்தை குறிப்பாக உலக அளவில் உற்று நோக்கும் மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் யாத்திரையை தொடங்கி தமிழகம் முழுவதும் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் நடைபயணமாக யாத்திரை மேற்கொண்டு வருகிறார். வருகிற 21-ந் தேதி தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வரும் மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும்.மாநில தலைவர் வருகையின் போது தாராபுரம் தொகுதியில் இருந்து யாத்திரையில் கலந்து கொள்ள சுமார் 10,000-க்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்கும் வகையில் கட்சியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நகர தலைவர் விநாயகம் சதீஷ், தாராபுரம் கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், மேற்கு ஒன்றிய தலைவர் ராஜ்குமார், குண்டடம் கிழக்கு ஒன்றிய தலைவர் வெங்கடாசலம், குண்டடம் மேற்கு ஒன்றிய தலைவர் விஜயகுமார், மூலனூர் வடக்கு ஒன்றிய தலைவர் குழந்தைவேல், காங்கயம் தெற்கு ஒன்றிய தலைவர் பிரகாஷ், வெள்ளகோவில் நகர தலைவர் அருண்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் மாவட்ட விவசாய அணி தலைவர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

    • வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.
    • நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.

    நெல்லை:

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி., கடந்த 2022-ம் ஆண்டு, இந்திய ஒற்றுமை யாத்திரையை குமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டார்.

    இம்மாதம் 7-ந் தேதி, அந்த நடைபயணம் நடைபெற்று ஒரு ஆண்டு நிறைவு பெறுகிறது.

    இதையொட்டி, நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக விழிப்புணர்வு பிரசார இயக்கமும், நடை பயணமும் மேற்கொள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபாலும் கேட்டுக்கொண்டனர்.

    இதையொட்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில், மாபெரும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டத்தை நடத்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் ஏற்பாடுகள் செய்து வருகிறார்.

    வருகிற 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு, நாங்குநேரியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து இந்த நடைபயணம் தொடங்குகிறது.

    நாங்குநேரியில் தொடங்கும் இந்த நடை பயணம், நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட களக்காட்டில் உள்ள காந்தி சிலை அருகில் நிறைவு பெறுகிறது.

    தொடர்ந்து, இரவு 8 மணிக்கு, அங்கு பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது.

    இதுகுறித்து ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    எங்களது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைமை கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ராகுல்காந்தி எம்.பி. கடந்த ஆண்டு மேற்கொண்ட இந்திய ஒற்றுமை யாத்திரையின் முதலாம் ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அந்த வெற்றி யாத்திரை தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையிலும், மத்திய பாரதீய ஜனதா அரசின் மக்கள் விரோதப் போக்கை கண்டிக்கும் வகையிலும் விழிப்புணர்வு பிரசார இயக்க நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறோம்.

    நாங்குநேரியில் தொடங்கி களக்காடு காந்தி சிலை முன்பு நிறைவு பெறும் இந்த நடைபயணத்தில், நாங்குநேரி சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள், மகளிர் அணியினர், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள இருக்கி றார்கள்.

    இவ்வாறு ரூபி மனோ கரன் எம்.எல்.ஏ. கூறினார்.

    • மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது.
    • இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன.

    ராமநாதபுரம்:

    2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான சுய பரிசோதனையாக என் மண், என் மக்கள் நடைபயணத்தை தொடங்கியுள்ள தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசத்தையும், தேசியத்தையும் மதிக்கும் மண்ணான ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிட்டு மீண்டும் பிரதமராக பொதுமக்கள் சூளுரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    ஆன்மீக பூமியான ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைத்த இந்த பிரமாண்ட நடைபயணம் நேற்று இரண்டாவது நாளில் சற்றும் தளர்வின்றி, மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது. ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவில் பகுதியில் தொடங்கி கேணிக்கரை வழியாக அரண்மனை வாசலை அடைந்தது.

    சுமார் 5 கி.மீ. தூரம் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் அண்ணாமலையுடன் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். மூத்த தலைவர்களை முந்தியடிக்கும் வகையில் அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருந்தது. காரணம் வழிநெடுகிலும் பெண்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினர் மலர்களை தூவி வரவேற்றனர்.

    ஆனால் அண்ணாமலை ஒரு மாநில தலைவர் என்பதை மறந்து, மக்களோடு மக்களான கலந்தார். அதேபோல் செல்லும் வழியெல் லாம் தன்னுடன் செல்பி எடுக்க வந்தவர்களிடம் சிரித்த முகத்துடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு சிலரிடம் அவர்களின் செல்போனை வாங்கி, அவர்களை அருகில் அழைத்து நிற்கவைத்து தானே செல்பி போட்டோ எடுத்து அசரவவைத்தார்.

    நடந்து சென்ற தூரம் 5 கி.மீ. என்றாலும் சற்றும் ஆர்வம் குறையாத அண்ணாமலை யாருடனும் முகம் சுழிக்காமல், முக மலர்ச்சியோடு பேசினார். அதேபோல் இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சியாக எதிர்க் கட்சிகளால் குத்தப்பட்ட முத்திரையை தகர்த்தெறியும் வகையில் அவரது செயல்பாடுகள் இருந்தன. நடைபயணத்தின் போது தன்னை நோக்கி வந்த இஸ்லாமிய பெண்கள், கிறிஸ்தவ பெண்களிடம் கை குலுக்கியும், நலம் விசாரித்தும் குறைகளை கேட்டறிந்த அண்ணாமலை, அனுபவத்தில் மிளிர்ந்தார்.

    அத்துடன் வழியெங்கிலும் அண்ணாமலையை வரவேற்ற கட்சியினர், பெண்கள் தங்களுடன் அழைத்து வந்த குழந்தையை கொடுத்து வாழ்த்த சொன்னார்கள். அப்போது குழந்தைகளை தூக்கி கொஞ்சி மகிழ்ந்த அண்ணாமலை அவர்களுக்கு பரிசு பொருட்களையும் வழங்க தவறவில்லை.

    மொத்தத்தில் பல்வேறு தலைப்புகளில் நடைபயணம் மேற்கொண்ட முன்னோர்கள், தலைவர்களை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு அண்ணாமலையின் நடைபயணம் அமைந்திருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். நடைபயணம் தொடங்கியதில் இருந்து முடிவடைந்த 5 கி.மீ. தூரமும் மிகவும் எளிமையாகவும், நெருங்கியும் வந்த அண்ணாமலை, 3-வது நாளான இன்று முதுகுளத்தூரில் காலை 9.30 மணிக்கு நடைபயணத்தை தொடங்கினார்.

    அங்குள்ள செங்கியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அவர்கள் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். மாலையில் பரமக்குடியில் நடைபயணம் மேற் கொள்கிறார்.

    • ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் திடீரென ‘கினிங் கினிங்’ என மணி ஓசையுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஏராள மான சைக்கிள்கள் வந்தன.
    • சுமார் 85 கி.மீ தூரத்தை கடந்து வந்து இவர்கள் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் பகுதியில் நேற்று மாலையில் வழக்கமான போக்குவரத்து நெரிசல் இருந்தது.

    இந்த வேளையில் அங்கு திடீரென 'கினிங் கினிங்' என மணி ஓசையுடன் ஒன்றன்பின் ஒன்றாக ஏராள மான சைக்கிள்கள் வந்தன. இதற்கு அங்குள்ள வர்கள் வழி விட்டு ஆச்சரியத்துடன் கண்டு ரசித்தனர். இவ்வாறு தொடர்ச்சியாக சைக்கிளில் வந்த வர்கள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விரதம் இருந்து செல்லும் பக்தர்கள் என்பது தெரிய வந்தது.அனைவரும் காவி, மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தி ருந்தனர்.சைக்கிள்களில் பச்சைக்கொடி கட்டப்பட்டி ருந்தது.

    தூத்துக்குடி மாவட்டம் வைப்பார் பகுதியை சேர்ந்த குருசாமியான ராஜகோபால் என்பவரின் தலைமையில் அங்கிருந்து நேற்று காலையில் 100 பேர் சைக்கிள்களிலும், 50 பேர் மோட்டார் சைக்கிள்களிலும் வந்தனர். 40-வது ஆண்டாக இந்த யாத்திரையை தொடங்கி உள்ளனர்.

    சுமார் 85 கி.மீ தூரத்தை கடந்து வந்து இவர்கள் ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பில் உள்ள செந்தில் விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். இதன் பின்னர் நேற்று இரவு திருச்செந்தூரை சென்ற டைந்த இவர்கள் இன்று காலையில் சுவாமி தரிசனம் முடித்த பின் அங்கே தங்கி விட்டு நாளை காலையில் மீண்டும் ஊர் திரும்புவதாக தெரிவித்தனர்.

    • வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • அனுமதி கோரி மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை.

    திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த விஷ்வ இந்து பரிஷத்தின் மாநில இணைச்செயலாளர் பரத் மதுரை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் ஏராளமான பேரணிகள், கூட்டங்கள், கலந்தாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    அதன்படி வாகனத்தில் முருகன் சிலையை வைத்து, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பூசாரிகள் சிலரோடு யாத்திரையை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 1 ந் தேதி, திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இந்த யாத்திரையை தொடங்கி சமயபுரம், சுவாமிமலை, திருத்துறைப்பூண்டி, ராமநாதபுரம், திருமங்கலம், பொள்ளாச்சி, திண்டுக்கல் வழியாக மீண்டும் திருச்சி விராலிமலையில் 17-ந் தேதி யாத்திரையை முடிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இதற்காக அனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படஅனுமதி கோரி அனைத்து மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்தவித பதிலும் வழங்கப்படவில்லை. எனவே ஜனவரி 1 முதல் 17-ந் தேதி வரை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்படும் யாத்திரைக்கு அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கு தனக்கு வழங்கப்பட்ட வழக்குகளை விசாரிக்கும் அதிகாரத்திற்குள் இல்லை என்று கூறி வேறு நீதிபதிக்கு மாற்ற உத்தர விட்டார்.

    • ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.
    • ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காமராஜ் ஆகியோர் செய்து வரு கின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 7-ந் தேதி ( நாளை மறுநாள்) ராகுல்காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணம் மேற்கொள்கிறார்.இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 200 வேன்கள், 25 பஸ்களில் தொண்டர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    மேலும் 8-ந் தேதி காலை 6மணிக்கு விவேகானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்து ராகுல்காந்தி நடை பயணத்தை தொடங்குகிறார்.

    அவருக்கு கல்லூரியில் இருந்து கொட்டாரம் காமராஜர் சிலை வரை 3½ கிலோமீட்டர் வரை ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கபட உள்ளது.

    இதற்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட தலைவர் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., மாநில துணை தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், வடக்கு மாவட்ட தலைவர் காம ராஜ் ஆகியோர் செய்து வரு கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஜெகன் மோகன் ரெட்டி இன்று சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார். #JaganmohanReddy #Yatra
    ஐதரபாத்:

    ஆந்திர மாநிலத்தின் முக்கிய எதிர்க்கட்சியான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் ஜெகன் மோகன் ரெட்டி. இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கடப்பா மாவட்டம் புலிவெந்தலா பகுதியில் இருந்து பொதுமக்களுடன் பாதயாத்திரையை தொடங்கினார்.

    கடந்த மாதம் 25-ந் தேதி ஜெகன் மோகன் ரெட்டி விசாகப்பட்டினம் விமான நிலையத்துக்கு வந்தபோது, ஒரு வாலிபர் ‘செல்பி’ எடுப்பது போல் நடித்து அவரை கத்தியால் குத்தினார். இதில் காயம் அடைந்த ஜெகன் மோகன் ரெட்டி ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

    அவரை கத்தியால் குத்திய விமான நிலைய ஓட்டல் ஊழியரான சீனிவாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (திங்கட்கிழமை) சலூர் சட்டமன்ற தொகுதியில் இருந்து தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்க உள்ளதாக அக்கட்சியின் கவுரவ தலைவர் விஜயம்மா தெரிவித்துள்ளார்.

    இதுபற்றி அவர் கூறுகையில், ‘கடவுளின் கருணையாலும், மக்களின் ஆசீர்வாதத்தாலும் ஜெகன் மோகன் ரெட்டி முழுமையாக பூரண குணம் அடைந்து விட்டார். எனவே அவர் இன்று முதல் தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்குகிறார். மறைந்த முதல்-மந்திரி ராஜசேகர் ரெட்டிக்கு மக்கள் ஆதரவு அளித்ததுபோல், ஜெகன் மோகன் ரெட்டிக்கும் மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்’ என்றார்.  #JaganmohanReddy #Yatra 
    ×