என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "selfie"

    • அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.
    • மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் கலந்துகொள்ளவுள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது வெளிநாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் கலந்துகொண்டு வருகிறார்.

    அவ்வகையில் மலேசியாவில் நடைபெறவுள்ள 24H சீரிஸ் கார் பந்தயத்தில் கலந்துகொள்ள அஜித்குமார் மலேசியா சென்றுள்ளார்.

    இந்நிலையில் மலேசியாவில் அஜித்துடன் செல்பி எடுத்துக்கொண்ட ரசிகை ஒருவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், முதல்ல நான் போட்டோ எடுக்க முயற்சி பண்ணப்போ அஜித் சார் என்ன திட்டிட்டாரு. ஆனா அதுக்கு அப்புறம் அவரே கூப்பிட்டு ஒரு செல்பி எடுத்து கொடுத்தாரு. என் வாழ்நாள் கனவு நனவாகிடுச்சி. அந்த ஒரு நொடி எனக்கு உலகத்தையே மறக்க வச்சிருச்சு'' என்று ஆனந்த கண்ணீருடன் மலேசிய ரசிகை பேசியுள்ளார்.

    • தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது
    • சாம்பியனான இந்திய மகளிர் அணிக்கு ஐசிசி சார்பில் ரூ.39.78 கோடி வழங்கப்பட்டுள்ளது.

    மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டி நவி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 298 ரன்கள் எடுத்தது. ஷபாலி வர்மா 87 ரன்னும், தீப்தி சர்மா 58 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 45 ரன்னும் எடுத்தனர்.

    299 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் லாரா வால்வார்ட் நிலைத்து நின்று விளையாடி 101 ரன்களில் அவுட் ஆனார். மற்ற வீராங்கனைகள் சீரான இடைவெளியில் அவுட் ஆகி வெளியேறினர்.

    45.3 ஓவர்களில் 246 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்க அணி ஆட்டமிழந்தது. இதனால் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதனையடுத்து கோப்பையுடன் இந்திய அணி வீராங்கனைகள் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது இந்திய அணி வீராங்கனைகளுடன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் செல்பி எடுத்துக்கொண்டார். இப்புகைடம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    இறுதிப்போட்டிக்கு முன்னதாக நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 339 ரன் இலக்கை ஜெமிமா ரோட்ரிக்ஸின் (127 ரன், 14 பவுண்டரி) அசாத்தியமான பேட்டிங்கால் இந்திய அணி 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது. இந்த வெற்றியால் தான் இந்திய அணியின் உலக கோப்பை கனவு நனவாகியுள்ளது. இதன் பின்னர் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இணையத்தில் வைரலானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.
    • நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டார்.

    புதுடெல்லி:

    மூத்த நடிகையும் சமாஜ்வாடி கட்சித் தலைவருமான ஜெயா பச்சன் டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப்புக்கு வந்தார். அப்போது அங்கிருந்த ஒருவர் ஜெயா பச்சனுடன் செல்ஃபி எடுக்க முயன்றார்.

    இதைக் கண்டதும் தனது நிதானத்தை இழந்த ஜெயா பச்சன் அவரை தள்ளிவிட்டுள்ளார். செல்ஃபி எடுப்பது தொடர்பாக சத்தம் போட்டுள்ளார்.

    ஜெயா பச்சன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரை தள்ளிவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

    இணையத்தில் இந்த வீடியோ வேகமாகப் பரவி வரும் நிலையில், அவரது செய்கையை பலரும் எதிர்த்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.


    • தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுலா வந்திருந்தனர்.
    • தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார்.

    செல்ஃபி எடுக்க வந்ததாக கூறி கிருஷ்ணா நதியில் கணவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் விழுந்த கணவரை கிராம மக்கள் சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கட்லூரில் தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதி அருகே சுற்றுலா வந்திருந்தனர்.

    இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, மனைவி சின்னி திடீரென தனது கணவர் தாயப்பாவை ஆற்றில் தள்ளிவிட்டார்.

    இந்த எதிர்பாராத சம்பவத்தால், தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். இருப்பினும், அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக விரைந்து வந்து கயிறுகளின் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.

    தன்னை கொல்ல திட்டமிட்டு ஆற்றில் தள்ளிவிட்டதாக தனது மனைவி சின்னி மீது தாயப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.   

    • அமெரிக்காவில் பிரதமர் மோடி டிரம்பை சந்தித்ததை பாராட்டி அறிக்கை வெளியிட்டார்.
    • சசி தரூரின் செயல்கள் காங்கிரஸ் கட்சியை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மக்களவை தொகுதியில் இருந்து 4 முறை தொடர்ந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரசை சேர்ந்த சசிதரூர்.

    மன்மோகன் சிங் ஆட்சியில் மத்திய மந்திரியாக பதவி வகித்த சசி தரூர், ஐ.நா.சபையில் உயர் பதவி வகித்தவர்.

    அமெரிக்காவில் பிரதமர் மோடி-டொனால்டு டிரம்ப் சந்திப்பை பாராட்டி அறிக்கை வெளியிட்டது. இடதுசாரி ஆட்சியில் கேரளா முன்னேற்றம் அடைந்துள்ளதாகவும், முதல் மந்திரி பினராயி விஜயன் பொருளாதாரத்தை சிறப்பாக கையாளுவதாகவும் புகழ்ந்து தள்ளியது என இவரது செயல்கள் காங்கிரஸ் கட்சியின் மேலிடத்தை கடுப்பாக்கியது.

    மேலும், பிப்ரவரி 25-ம் தேதி மத்திய மந்திரி பியூஷ் கோயலுடன் செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியது காங்கிரஸ் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. சசி தரூர் இதற்கெல்லாம் உரிய விளக்கத்தை அளித்துவந்தார்.

    இந்நிலையில், கேரள கம்யூனிஸ் கட்சியின் முதல் மந்திரி பினராயி உடன் செல்பி எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியானது.

    கேரள கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அளித்த விருந்தில் முதல் மந்திரி பினராயி விஜயன் கலந்துகொண்டார். விருந்து நிகழ்ச்சியின்போது சசிதரூர் பினராயைச் சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியது காங்கிரஸ் மேலிடத்துக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துயுள்ளது.

    • செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான்.
    • கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    கோவை :

    விரல் நுனியில் உலகம்... இதுதான் இப்போதைய இளைஞர்களின் நிலை. நினைத்த நேரத்தில் தொடர்பு, கருத்து பரிமாற்றம் உள்பட அனைத்துக்கும் அவர்களுக்கு உதவும் முக்கிய பொருளாக செல்போன் ஆகிவிட்டது. அந்த செல்போனை வைத்து நல்லவற்றுக்கு பயன்படுத்தினால் சரிதான். ஆனால் அவர்களுக்கும், பிறருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் விபரீத விளைவுகளுக்கும் திடீரென ஆளாகிவிடுகின்றனர்.

    குறிப்பாக ஓடும் ரெயில் அருகே, ஓடும் பஸ்சின் படிக்கட்டில், வெள்ளம் ஓடும் நீர்நிலைகளின் அருகில், வனவிலங்குகளின் அருகில் நின்று செல்பி எடுப்பது போன்ற அபாயகரமான செயலில் ஈடுபடுபவர்கள் தற்போது அதிகரித்துள்ளனர். இது அவர்களுக்கு சாகசமாக தெரிகிறது. ஆனால் பிரச்சினை ஏற்படும் போதுதான் அவர்களின் குடும்பமே அதிர்ச்சிக்குள்ளாகிறது.

    இளைஞர்கள் ஒருபுறம் இருக்க, மறுபுறம் இளம்பெண்களும் ஓடும் பஸ், ரெயிலில் படிக்கட்டில் நின்றபடி செல்பி எடுத்து அவற்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ய தொடங்கி விட்டனர். இந்த நிலையில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் மேட்டுப்பாளையம் , காரமடை, மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கோவையில் உள்ள கல்லூரிகளுக்கு அதிகளவில் வந்து செல்கிறார்கள். அதுபோன்று தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் பலரும் இந்த ரெயிலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    நேற்று மதியம் 1.45 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவையை நோக்கி ரெயில் சென்றது. அந்த ரெயில் கோவை -அவினாசி ரோட்டில் உள்ள மேம்பாலத்தை தாண்டி சென்றபோது, அந்த ரெயிலில் உள்ள ஒரு பெட்டியில் அமர்ந்திருந்த 3 கல்லூரி மாணவிகள், திடீரென படிக்கட்டு பகுதிக்கு வந்தனர்.பின்னர் அவர்கள் ஒற்றை கையில் அங்கிருந்த கம்பியை பிடித்துக்கொண்டு, மற்றொரு கையால் செல்போன் மூலம் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். செல்பி எடுத்தது மட்டுமல்லாமல், ஒரு மாணவி தனது செல்போன் மூலம் மற்ற 2 மாணவிகளை புகைப்படமும் எடுத்து மகிழ்ந்தார்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

    கோவை -அவினாசி ரோடு மேம்பாலம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் ரெயில் மெதுவாகதான் செல்லும். இருந்தபோதிலும் ஒற்றை கையில் கம்பியை பிடித்துக்கொண்டு செல்பி என்ற பெயரில் சாகசம் செய்யும்போது, கை நழுவினால் என்ன ஆவது?. கரணம் தப்பினால் மரணம் என்பதை இதுபோன்ற சாகசத்தில் ஈடுபடுபவர்கள் நினைத்து பார்க்க வேண்டும்.மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டிய கல்லூரி மாணவிகளே இதுபோன்ற செயலில் ஈடுபடலாமா?. எனவே அவர்கள் இனியாவது இதை உணர்ந்து பாதுகாப்பான முறையில் பயணிக்க வேண்டும். மேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    • உயிரை துச்சமென நினைத்து குட்டைக்குள் குதித்து அவரை மணமகன் காப்பாற்றினார்.
    • இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

    திருவனந்தபுரம் :

    கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பரவூரை சேர்ந்தவர் வினு கிருஷ்ணன் (வயது 25). இவருக்கும், கல்லுவாதுக்கலையை சேர்ந்த சாந்திராவிற்கும் (19) திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு இருந்தது. இவர்களுக்கு நேற்று அங்குள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடக்க இருந்தது.

    இந்தநிலையில், திருமணத்திற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மணமக்கள் இருவரும் காலையில் பல்வேறு கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். அதன்பின்னர் பகல் 11 மணியளவில் பாரிப் பள்ளி வேளமானூர் காட்டுப்புரம் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு சென்றனர். அந்த குவாரியில் 150 அடி உயரத்தின் கீழ் பகுதியில் தண்ணீர் தேங்கி குட்டைபோல் காட்சி அளித்தது.

    அந்த இடத்தை பார்த்ததும் அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்பினார்கள். இருவரும் குவாரியின் மேல் பகுதியில் நின்றவாறு செல்பி எடுத்தனர். அப்போது திடீரென்று சாந்தி்ரா கால் வழுக்கி 150 அடி உயரத்தில் இருந்து குவாரியில் தேங்கிநின்ற தண்ணீருக்குள் எதிர்பாராத விதமாக விழுந்தார்.

    இதைத்தொடர்ந்து சுதாரித்துக்கொண்ட வினு கிருஷ்ணன் உடனடியாக குவாரியில் இருந்த தண்ணீருக்குள் குதித்தார். பின்னர் தண்ணீருக்குள் தத்தளித்துக்கொண்டு இருந்த தனது வருங்கால மனைவி சாந்திராவை காப்பாற்றினார். சாந்திராவின் உடையை பிடித்து இழுத்து பாறையின் ஒரு பகுதிக்கு வினு கிருஷ்ணா கொண்டு வந்தார்.

    அதனைத்தொடர்ந்து இருவரும் குவாரி பாறையை பிடித்துக்கொண்டு காப்பாற்றுங்கள்...காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் ரப்பர் வெட்டும் பணி செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து கயிற்றை இறக்கி பாதுகாப்பாக பிடித்து கொள்ளுமாறு கூறினர்.

    பின்னர் குழாய் மூலம் கட்டப்பட்ட சிறு தோணியில் தொழிலாளர்கள் இறங்கி இருவரின் அருகே சென்று முதலுதவி செய்தனர். இதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு படையினரும், போலீசாரும் சேர்ந்து இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

    லேசான காயங்களுடன் இருவரும் அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக நேற்று நடைபெறுவதாக இருந்த திருமணம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.

    துபாயில் பணி செய்துவரும் வினு கிருஷ்ணன் திருமணத்திற்காக 2 வாரங்களுக்கு முன்னர் தான் சொந்த ஊருக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சினிமாவை மிஞ்சும் சம்பவமாக டூப் இல்லாமல், வாலிபர் தனது வருங்கால மனைவியை 150 உயரத்தில் இருந்து பாறைக்குழிக்குள் குதித்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    • அருவியின் மேல் பகுதிக்கு சென்ற சந்தீப், அங்கிருந்தபடி இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தார்.
    • அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், சந்தீப்பின் உடல் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் சந்தீப் (வயது 21), கல்லூரி மாணவர். இவர் தனது நண்பர்களுடன், கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் மூணாறில் சுற்றிப்பார்த்து விட்டு இடுக்கி சென்றனர். அங்குள்ள சுனையம்மக்கல் நீர்வீழ்ச்சிக்கு சென்று அதன் அழகை ரசித்தனர்.

    பின்னர் அருவியில் குளித்த அவர்கள் அங்கிருந்து அருவியின் மேல் பகுதிக்கு சென்றனர். அருவியின் மேல் பகுதிக்கு சென்ற சந்தீப், அங்கிருந்தபடி இயற்கை அழகை ரசித்து கொண்டிருந்தார். அருவியின் அருகே சென்று, அங்கிருந்தபடியே செல்பி எடுக்க முயன்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக பாறையில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டியதால், சந்தீப்பின் உடல் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டது.

    இதற்கிடையே அருவியின் மேல்பகுதியில் இருந்து வாலிபர் ஒருவர் கீழே விழுந்ததை பார்த்தவர்கள் போலீசாருக்கும், தீயணைப்பு மீட்பு வீரர்களுக்கும் தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து சந்தீப்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேர தேடுதல் வேட்டைக்கு பிறகு சந்தீப் பிணமாக மீட்கப்பட்டார்.

    • உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் காந்தி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான வான்ஷ் சர்மா மற்றும் 20 வயதான மோனு ஆவர்.
    • விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் இருவரின் சடலங்கள் கிடப்பதாக ஷாஹ்தாரா காவல் நிலையத்திற்கு கடந்த புதன்கிழமை மாலை 4.35 மணிக்கு தகவல் கிடைத்துள்ளது.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இரண்டு சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இறந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில், இறந்தவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள் என்றும், இருவரும் ரெயில் தண்டவாளத்தில் வீடியோக்கள் படம்பிடித்துக் கொண்டிருந்தபோது (ரீல்ஸ்), ரெயில் மோதி உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் காந்தி நகர் விரிவாக்கத்தைச் சேர்ந்த 23 வயதான வான்ஷ் சர்மா மற்றும் 20 வயதான மோனு ஆகியவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில், ஷர்மா பி.டெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். விற்பனையாளராக பணிபுரிந்து வந்த மோனு, டெல்லி பல்கலைக்கழகத்தின் திறந்தநிலை கல்வியில் பி.ஏ படித்து வந்துள்ளார்.

    தண்டவாளத்தில் நின்று மெய்மறந்து ரீல்ஸ் செய்துக் கொண்டிருந்தபோது இளைஞர்கள் மீது ரெயில் மோதி ஏற்பட்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இயக்குனர் ராஜ் மேத்தா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘செல்பி’.
    • இப்படத்தில் நடிகர் அக்‌ஷய் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

    தமிழில் '2.0' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தவர் அக்ஷய்குமார். இந்தியில் அதிக சம்பளம் பெறும் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இந்தியா மட்டுமன்றி, வெளிநாடுகளிலும் அக்ஷய்குமாருக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகி வெளியான திரைப்படம் 'செல்பி'.


    செல்பி

    மலையாளத்தில் பிருதிவிராஜ் நடித்து வெற்றிபெற்ற 'டிரைவிங் லைசென்ஸ்' படத்தின் இந்தி ரீமேக் ஆக உருவான இப்படத்தை ராஜ் மேத்தா இயக்கினார். மேலும், இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, நுஷ்ரத் பருச்சா, டயானா பென்டி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.


    செல்பி

    கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் முதல் நாள் வசூலாக ரூ.2.55 கோடியை மட்டுமே வசூலித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், 'செல்பி' திரைப்படம் வெளியாகி 14 நாட்கள் கடந்ததையடுத்து தற்போது வரை உலக அளவில் ரூ.21.85 கோடியை மட்டுமே வசூலித்துள்ளது. இந்திய அளவில் ரூ.16 கோடியை படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அக்ஷய் குமார் படங்களில் முதல் நாள் வசூலில் மிக குறைந்த வசூலை பெற்ற திரைப்படமாக 'செல்பி' உள்ளது.

    • ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார்.
    • விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் காங்கேயத்தான் (வயது 22). பொறியியல் படித்துள்ளார். இவர் நேற்று பகல், தனது நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-விருத்தாசலம் ரெயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரெயில் வந்தது. இதைப்பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரெயில் முன்பாக சென்று செல்பி எடுக்க முயன்றார்.

    இதனிடையே வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காங்கேயத்தான் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரெயில் அருகே சென்று செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

    இந்த வழக்கம் விபரீதித்தில் முடிந்துள்ளதாக அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.

    • சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்
    • விதிகளை மீறும் சுற்றுலாப் பயணிகள் மீது வனத்துறை அபராதம் விதிக்க வேண்டும்.

    ஊட்டி

    ஊட்டி கூடலூர் சாலையில் தலைகுந்தா பகுதியில் அமைந்துள்ள பைன் மரக் காடு, பலநூறு ஆண்டுகள் பழமையான பைன் மரங்களின் தோப்பாகும்

    இந்த இடம் திரைப்படங்கள் மூலம் பிரபலமான சுற்றுலா தலம் ஆகும். இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்

    மேலும் காமராஜர் அணை உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகள் விதியை மீறிய செயலில் ஈடுபட்டு வருகின்றனர் ஆபத்தை உணராமல் புகைப்படங்களை எடுப்பது அணையின் நீர் பிடிப்பு பகுதியில் உள்ள பாறையின் மேல் அமர்ந்து புகைப்படம் எடுப்பது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

    உயிர் சேதத்தை தவிர்க்கும் வகையில் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுக்க வனதுறை தடை விதிக்கும் அறிவிப்பு பலகைகளை வைப்பதோடு கண்காணிப்பு பணியிலும் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

    ×