வாழப்பாடி அருகே போதையில் விபரீதம்- ஓடும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற என்ஜினீயர் பலி

ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாழப்பாடி அருகே போதையில் விபரீதம்- ஓடும் ரெயில் முன்பு செல்பி எடுக்க முயன்ற என்ஜினீயர் பலி
Published on

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே சிங்கிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி மகன் காங்கேயத்தான் (வயது 22). பொறியியல் படித்துள்ளார். இவர் நேற்று பகல், தனது நண்பர்கள் சபரி (27), சபரிநாதன் (19), கவுதம் (23) ஆகியோருடன் சேர்ந்து வாழப்பாடி புதுப்பட்டி மாரியம்மன் கோவில் அருகே சேலம்-விருத்தாசலம் ரெயில் பாதை அருகில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது, அந்த வழியாக காரைக்காலிருந்து பெங்களுரு செல்லும் ரெயில் வந்தது. இதைப்பார்த்த காங்கேயத்தான் ஓடும் ரெயில் முன்பாக சென்று செல்பி எடுக்க முயன்றார்.

இதனிடையே வேகமாக வந்த ரெயில் அவர் மீது மோதியது. இதில் உடல் துண்டாகி காங்கேயத்தான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ரெயில் வருவதை பார்த்து, காங்கேயத்தானை காப்பாற்ற முயன்ற அவரது நண்பர் சபரி படுகாயம் அடைந்தார். அவர் வாழப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து சேலம் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான காங்கேயத்தான் அடிக்கடி அப்பகுதிக்கு வந்து மது அருந்துவதும், ரெயில் அருகே சென்று செல்பி எடுத்து நண்பர்களுக்கு பகிர்வதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்த வழக்கம் விபரீதித்தில் முடிந்துள்ளதாக அப்பகுதியினர் சோகத்துடன் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com