என் மலர்

  செய்திகள்

  வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார்
  X

  வேதாரண்யத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #NirmalaSitharaman
  நாகப்பட்டினம்:

  கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
   
  கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

  புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.

  இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  இதற்கிடையே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

  நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்தடைந்தார். அங்கிருந்து வேதாரண்யம் சென்ற அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

  மேலும், கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் பார்வையிட்டார்.

  அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். #GajaCyclone #NirmalaSitharaman
  Next Story
  ×