என் மலர்

  நீங்கள் தேடியது "affected areas"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வேதாரண்யத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #NirmalaSitharaman
  நாகப்பட்டினம்:

  கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
   
  கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

  புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.

  இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  இதற்கிடையே, தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பார்வையிட வருவதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் நேற்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதிகளை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று ஆய்வு செய்தார்.

  நாகப்பட்டினத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்காக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் ஹெலிகாப்டர் மூலம் கோடியக்கரை வந்தடைந்தார். அங்கிருந்து வேதாரண்யம் சென்ற அவர், கஜா புயல் பாதித்த பகுதிகளை ஆய்வு செய்தார்.

  மேலும், கோடியக்காடு, அகஸ்தியம்பள்ளி பகுதிகளில் புயலால் பாதிக்கப்பட்ட உப்பளங்களையும் பார்வையிட்டார்.

  அப்போது அவருடன் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் ஹெச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் உடனிருந்தனர். #GajaCyclone #NirmalaSitharaman
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தமிழகத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பார்வையிட உள்ளார். #GajaCyclone #NirmalaSitharaman
  புதுடெல்லி:

  கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
   
  கடந்த 10 நாட்களுக்கு மேலாகியும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

  புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். கஜா புயல் சீரமைப்புக்காக ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி கோரினார்.  இதைத்தொடர்ந்து, டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு சென்னை வந்தது. அவர்கள் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

  இந்நிலையில், தமிழகத்தில் கஜா புயல் பாதிப்பு பகுதிகளை மத்திய பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை பார்வையிட உள்ளார். #GajaCyclone #NirmalaSitharaman
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயல் தாக்கிய பகுதிகளை மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழு இன்று மாலை பார்வையிட்டது. #GajaCyclone #CentralCommittee
  புதுக்கோட்டை:

  கடந்த 16-ம் தேதி நாகை அருகே கரையை கடந்த கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
   
  கடந்த 10 நாட்கள் ஆகியும் மீளாத்துயரில் தவித்து வரும் மேற்கண்ட மாவட்டங்களில் அமைச்சர்கள் முகாமிட்டு மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.

  இதற்கிடையே, புயல் பாதித்த பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்கக் கோரி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு சென்று பிரதமர் மோடியை சந்தித்து வலியுறுத்தினார். அப்போது புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவியை கோரினார்.  இதையடுத்து டெல்லியில் இருந்து மத்திய உள்துறை இணைச்செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையிலான மத்திய குழு நேற்று இரவு சென்னை வந்தது. அவர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.

  மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை குழுவினர் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வந்து பின்னர் காரில் புதுக்கோட்டை சென்றனர்.

  புதுக்கோட்டையில் குளத்தூர் பகுதியில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழு ஆய்வு மேற்கொண்டது. 

  அப்போது துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர், கண்காணிப்பு அலுவலர்கள் சுனில் பாலிவால், சம்பு கல்லோலிகர், மாவட்ட ஆட்சியர் கணேஷ் ஆகியோர் உடனிருந்தனர். #GajaCyclone #CentralCommittee
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியை திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். #GajaCyclone #Stalin
  நாகப்பட்டினம்:

  கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் காந்தி நகரில் புயல் பாதித்த பகுதிகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  கஜா புயல் வரும் என மத்திய அரசு எச்சரித்திருந்ததால், ஓரளவுக்கு தமிழக பேரிடர் குழு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது.

  புயல் ஏற்படும் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்திருந்ததால் தமிழக அரசு ஓரளவு நடவடிக்கை எடுத்துள்ளது. எனவே, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் அரசை பாராட்டினேன். தவறு நடந்தால் தட்டிக்கேட்கும், பாராட்டக்கூடிய வகையில் செயல்பட்டால் பாராட்டும் இயக்கம் திமுக.  புயல் பாதித்த பகுதிகளை இன்று பார்வையிட்டேன். கஜா புயலால் எட்டு மாவட்டங்களில் அதிக பாதிப்பு அடைந்துள்ளது. 

  மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் மின் சீரமைப்பு பணியை விரைந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் வேகமாக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் பாதிப்புகளை மேலும் குறைத்திருக்கலாம் என தெரிவித்தார். #GajaCyclone #Stalin
  ×