என் மலர்
நீங்கள் தேடியது "Salem DistrictNews"
- பட்டாசு உற்பத்தி செய்யும் பணியாளர்கள், விற்பனையாளர்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு, விற்பனை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் சேலம் கலெக்டர்் அலுவலகத்தில் நடைபெற்றது.
- இப்பயிற்சி முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஓசூர் இணை இயக்குநர்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகளில் தீ மற்றும் வெடிவிபத்து நடைபெறாமல் தடுப்பதற்கு, அத்தொழிலில் ஈடுபடும் உரிமையாளர்கள், பட்டாசு உற்பத்தி செய்யும் பணியாளர்கள், விற்பனையாளர்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு, விற்பனை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் சேலம் கலெக்டர்் அலுவலகத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை ஏற்று தொடங்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பட்டாசு தயாரித்தல் தொடர்பான பாதுகாப்பு கையேடு வெளியிட்டார்.
அதனை தொழிற்சாலையின் உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமை உரையில் பட்டாசு தயாரிப்பில் அனுமதிக்கப்பட்ட ரசாயனங்களை அளவுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயன்படுத்தி கவனத்துடன் செயல்பட்டு விபத்தில்லா உற்பத்தி பணி செய்யவேண்டும் எனவும் பட்டாசு விற்பனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தில் குறிப்பிட்டுள்ள் அளவில் மட்டும் பட்டாசு சேமித்து வைத்து எளிதில் தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமென எடுத்துரைத்தார்.
இப்பயிற்சி வகுப்பில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் பட்டாசு தயாரித்தலின் போது ரசாயனங்களை கையாளுதல் மற்றும் மருந்து கலவைகள் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை பயன்படுத்துதல், இருப்பு வைத்தல், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்துச்செல்லுதல் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்கள். மேலும் அதிகளவில் ரசாயன கலவைகளை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்துவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக விபத்துகள் ஏற்படுவது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. மருந்து கலவை தயார் செய்து நிரப்பும் பணியில் நன்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
மேலும் பட்டாசு விபத்திற்கான காரணங்கள் மற்றும் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பட்டாசு விற்பனை கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் குறும்படக் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளால் விரிவாக விளக்கப்பட்டது.
முகாமில் காட்சிகள், ஆவணப்படங்கள் மூலமாக தொழிலக தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாக அலுவலர்களால் செய்யப்பட்டது.
- இலக்கியா (40). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள அரசு அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
- மாலையில் கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
சேலம்:
சேலம் அய்யந்திருமாளிகை பகுதியை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி இலக்கியா (40). இவர் சேலம் 5 ரோடு பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் உள்ள அரசு அச்சகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார்.
வழக்கம் போல நேற்று வேலைக்கு சென்று விட்டார். இவரது மகளும், மகனும் வெளியில் சென்றிருந்தனர். மாலையில் கல்லூரி முடிந்து மகள் வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இது குறித்து இலக்கியாவுக்கு மகள் தகவல் தெரிவித்தார். உடனே விரைந்து வந்த இலக்கியா சம்பவம் குறித்து அஸ்தம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வீடு புகுந்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளையும் பதிவு செய்து ஆய்வு செய்து வருகிறார்கள்.
- கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார்.
- அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
சேலம்:
சேலம் வீராணம் மன்னார்பாளையம் பிரிவு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கோகுல் (20). இவர் கடந்த 17-ந் தேதி தனது மோட்டார் சைக்கிளில் அம்மாப்பேட்டை பகுதிக்கு பூ வாங்க சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் கோகுல் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கோகுல் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
- அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலு வலரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநருமான சங்கர் பல்வேறு நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக நேற்று இரவு சேலம் வந்தார்.
காலை உணவு திட்டம்
தொடர்ந்து இன்று காலை சேலம் கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்படுவதை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உணவின் தரம் குறித்தும் மாணவர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அல்லிக்குட்டை ஏரியில் நடைபெற்று வரும் புனர மைப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது ஏரியில் மேற்கொள்ளப் பட்டுள்ள புனரமைப்பு பணிகள் மற்றும் மேலும் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
ஆரம்ப சுகாதார நிலையம்
தொடர்ந்து சேலம் பொன்னம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு அங்கு அளிக்கப்படும் சிகிச்சை கள் குறித்து நோயா ளிகளி டம் கேட்டறிந்தார். அப்போது மருந்து மாத்திரை இருப்பு குறித்தும் கேட்டார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் அதி காரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கார்மேகம் தலைமையில் அனைத்து துறை அரசு அதிகாரிகளுடன் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி சங்கர் மாவட்டத்தில் இனி வரும் நாட்களில் மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும் இன்று பிற்பகல் வட கிழக்கு பருவ மழையை யொட்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணி கள் குறித்தும் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
ரூ.19 கோடி மதிப்பு
இது குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சங்கர் கூறியதாவது:-
கொண்டப்ப நாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் போது குறித்த நேரத்தில் சத்தான உணவுகளை, சுகாதார மான முறையில் சமைத்து வழங்கி வரும் சமைய லர்களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அய்யந்திருமாளிகை தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அறிவுசார் மையம் மற்றும் ஆய்வு மையத்தி னையும், அல்லிக்குட்டை ஏரியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனர மைப்பு மற்றும் அழகு படுத்தும் பணிகளை யும், அம்மாப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நோயாளி களுக்கு வழங்கப்படும் மருந்து, மாத்திரைகள் இருப்பு போதிய அளவில் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் போடிநாயக்கன் பட்டி ஏரியில் ரூ.19 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் புனரமைப்பு பணி களும் ஆய்வு செய்யப் பட்டது. சேலம் மாநக ராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலு வலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி கமிஷனர் பாலச்சந்தர், கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலு வலர் மேனகா, உதவி கலெக்டர் (பயிற்சி) சுவா திஸ்ரீ மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
- மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
- இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின்நிலையத்தில் 840 மற்றும் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 யூனிட்கள் செயல்பட்டு வருகிறது.
தனியார் நிறுவனம்
இந்த 2 அனல் மின் நிலையங்களிலும் சென்னையை தலைமையி டமாக கொண்டு இயங்கும் தனியார் என்ஜினீயரிங் நிறுவனம் நிலக்கரி கையா ளும் பிரிவு, முதன்மை அரவை மற்றும் 2-ம் நிலை அரவை, கொதிகலன் குழாய் பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த பணிகளை எடுத்துள்ளது. இந்நிறுவனம் சார்பில் 800 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக அனல்மின் நிலையத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும் தமிழ்நாடு மின்சார துறையில் பல்வேறு ஒப்பந்தங்களையும் இந்நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
முறைகேடு புகார்
இந்த நிலையில் தமிழ்நாடு மின்சார வாரி யத்திற்கு சப்ளை செய்த பொருட்களில் இந்நிறு வனம் முறைகேடுகள் செய்து வரி ஏய்ப்பு செய்துள்ள தாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக அந்த நிறுவனத்துக்கு சொந்த மான 40-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று காலை முதல் சோதனை யில் ஈடுபட்டனர்.
சோதனை
இதன் அடிப்படையில் மேட்டூர் அனல்மின் நிலைய பணிகளுக்கான பொருட்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்து உள்ளதா? வரி ஏய்ப்பு செய்யப்பட்டு உள்ளதா? என்பதை ஆய்வு செய்ய மேட்டூர் அனல்மின் நிலை யத்தில் செயல்பட்டு வரும் இந்த தனியார் நிறுவனத்தில் நேற்று காலை 7 மணிக்கு வருமானவரித் துறையை சேர்ந்த 5 அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
13 மணி நேரம்
இதில் அலுவலகத்தில் இருந்த கோப்புகள், கணினி யில் பதிவாகி இருந்த தகவல்களை சோதனை செய்தனர். மேலும் அங்கு பணியாற்றிய ஊழியர்களி டமும் அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை நடத்தி னர். இந்த சோதனை இரவு 8 மணி வரை நீடித்தது.
வருமான வரித்துறையி னரின் இந்த 13 மணி நேர சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதி காரிகள் கைப்பற்றியதாக தெரிகிறது. ஆனால் கைப் பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து எந்தத் தகவல்களை யும் அதிகாரிகள் தெரிவிக்க வில்லை.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதி காரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
- பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது.
- இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
ஓமலூர்
ஓமலூர் அடுத்த காருவள்ளி சின்ன திருப்பதி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இன்று முதல் சனிக்கிழமையை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதலே சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
நீண்ட வரிசை
இதையொட்டி கோவிலில் குவிந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புகள் உள்ளிட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் புரட்டாசி கடைசி வாரம், ஐப்பசி மாத முதல் வாரத்தில் தேரோட்டம் நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
சங்ககிரி
சங்ககிரி அருகே ஒருக்காமலையில் உள்ள வரதராஜப்பெருமாள் கோவிலில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் செயல் அலுவலர் சங்கரன் தலைமையில் வரதராஜ பெருமாள் சுவாமிக்கு அதிகாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடைபெற்றது.
அதனைதொடர்ந்து திருக்கோடி ஏற்றப்பட்டது. சுவாமியை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதல் வரிசையில் காத்திருந்தனர். பின்னர் கோவிந்தா கோவிந்தா என கோஷமிட்டு சாமியை வழிபட்டனர்.
பக்தர்களின் பாதுகாப்பு கருதி சங்ககிரி டி.எஸ்.பி. ராஜா உத்திரவின் பேரில் சங்ககிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது.
- விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காடையாம்பட்டி:
ஓமலூர் அடுத்த காடையாம்பட்டி ஒன்றியம் கணவாய் புதூர் ஊராட்சி கணவாய்புதூர், கே.என்.புதூர் கிராமங்களில் 1938-ம் ஆண்டு தொடங்கப்பட்ட நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்திற்கு 382 ஏக்கர் நிலம் இருந்தது. சங்கத்தின் பெயரிலேயே பட்டா இருந்து வந்தது.
அந்த நில குடியேற்ற கூட்டுறவு சங்கத்தில் 474 சங்க உறுப்பினர்கள் இந்த நிலத்தை விவசாயம் செய்து அங்கேயே குடியிருந்து வந்தனர். தற்போது 500 குடும்பம் வரை உள்ளன. இந்த சங்கமானது 1986-ம் ஆண்டு கலைக்கப்பட்டது.
அதற்கு முன்பாக கூட்டுறவு சங்கமானது சங்க உறுப்பினர்கள் அவர்களது அனுபவத்தில் உள்ள சங்கத்தின் நிலத்தை அவரவர்கள் பட்டா பெற்றுக்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு அந்த நிலங்கள் அனைத்தும் தரிசு புறம்போக்கு நிலங்களாக மாற்றப்பட்டுள்ளது என தெரிகிறது. அந்த நிலங்களுக்கு அனுபவத்தில் உள்ள விவசாயிகளின் பெயரில் பட்டா வழங்கக்கோரி நீண்ட நாட்களாக அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அந்த நிலத்தை வருவாய்த்துறையினர் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிலங்களை அளவீடு செய்து வந்து உள்ளனர்.
இதனை கண்டித்து லேண்ட் காலனி நிலங்களை விவசாயிகளுக்கு பட்டா வழங்க கோரி சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. மற்றும் கணவாய் புதூர் ஊராட்சி பொதுமக்கள் சார்பில் காடையாம்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட பா.ம.க. தலைவர் டாக்டர். மாணிக்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் வரவேற்றார் கணவாய் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா ரத்தினம் ஒன்றிய பா.ம.க. செயலாளர் சின்னசாமி ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
மாநில வன்னியர் சங்க செயலாளர் கார்த்திக், சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட வன்னியர்் சங்க தலைவர் கண்ணையன் ஆகியோர் கண்டன உரையாற்றினார். மாவட்ட வன்னியர்சங்க தலைவர் முருகன், மாவட்ட வன்னியர் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், தொழிற்சங்க தலைவர் பழனிசாமி, மாநில வன்னியர் சங்க பொதுக்குழு உறுப்பினர் குமார், மாவட்ட கவுன்சிலர் அண்ணாமலை, ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி ராமசாமி, ஒன்றிய பா.ம.க. செயலாளர் வெங்கடேஷ், செல்வம், ராஜாமணி, மாதேஷ், பி எஸ் கே செல்வம் விஜயராகவன், ராஜேந்திரன், நகரச் செயலாளர் சாய் சுஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம்.
- சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.
சேலம்:
தமிழ் மாதமான புரட்டாசியில் பெரும் பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்து பெருமாள், ஆஞ்சநேயர் வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இதனால் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் குறைந்து விட்டது. மேலும் காய்கறிகள் விற்பனை அதிகரித்துள்ளது. சேலம் மாநகரில் திருமணிமுத்தாறு ஆற்று பாலம், வ.உசி.மார்க்கெட் ஆகிய பகுதிகளில் காய்கறி கடைகள் செயல்பட்டு வருகிறது.
இந்த மார்க்கெட்டு களுக்கு சேலம் மாவட்டம் வாழப்பாடி, ஓமலூர், எடப்பாடியில் இருந்து தக்காளி, கத்தரி, வெண்டைக்காய், அவரை உள்பட பல்வேறு காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது. ஊட்டியில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் சேலத்தில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகள் வரத்து குறைவாகவே இருந்தது. வரத்து குறைவு காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் மற்ற நாட்களை விட ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது.
சேலம் மார்க்கெட்டில் விற்பனையாகும் காய்கறிகளின் விலை கிலோவில் வருமாறு:-
கேரட்-ரூ.46, பீன்ஸ்-75, மிளகாய்-ரூ.34 முள்ளங்கி-ரூ.20, பாகற்காய்-ரூ.22க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அவரை-ரூ.45, கத்தரிக்காய்-ரூ.20, பீர்க்கங்காய்-ரூ.24, புடலங்காய்-ரூ.20 தக்காளி-ரூ.15, சின்ன வெங்காயம்-ரூ.40, பல்லாரி-ரூ.34, உருளைக்கிழங்கு-ரூ.34, விற்பனையாகி வருகிறது.
மழை காரணமாக மார்க் கெட்டுக்கு காய்கறிகள் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக அனைத்து காய்கறிகளின் விலையும் உயர்ந்துள்ளது. கடந்த வரத்தைவிட இந்த வாரம் சற்று உயர்வாகவே இருந்து வருகிறது.
- பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
- சேலம் கோட்டை அழகிரி நாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது.
சேலம்:
சேலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில்க ளில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
சேலம் கோட்டை அழகிரி நாதர் என்று அழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் இன்று காலை சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. அதன்பின்னர் அழகிரிநா தர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கண்ணாடி மாளிகை
கண்ணாடி மாளிகையில் ராமர், லட்சுமணன், சீதா, ஆஞ்சநேயர் ஊஞ்சல் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த ஆஞ்சநேயர், கருடாழ்வாரை பக்தர்கள் வழிபட்டனர். கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள பட்டை கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவிலில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அம்மாபேட்டை சவுந்தர ராஜ பெருமாள் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சேலம் பெரமனூர் வெங்க டேச பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்கா ரம் செய்யப்பட்டிருந்தது. ஜாகீர் அம்மாபாளையம் வர பிரசாத ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
துளசி மாலை
ஆனந்தா இறக்கம் அருகே உள்ள லட்சுமி நாராயணசாமி கோவிலில் புரட்டாசி முதல் சனிக் கிழமையையொட்டி சாமிக்கு துளசி மாலை அணிவிக்கப்பட்டது.
சேலம் செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து அபி ஷேக வழிபாடு நடை பெற்றது. செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தி யாப்பட்டணம் ராமர் கோவில், சின்னத் திருப்பதி வெங்கடேச பெரு மாள்கோவில், அழகாபுரம் வெங்கடேசுவரா பாலாஜி டிரஸ்ட் கோவில், உடையாப்பட்டி சென்றாய பெரு மாள் கோவில், கடைவீதி வேணுகோபால சுவாமி கோவில், நாமமலை பெரு மாள் கோவில், நெத்திமேடு கரியபெரு மாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர்.
- சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.
- இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
சேலம்:
சேலம் அயோத்தியாபட்டணத்தை அடுத்த குப்பனூர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர்.
2 மாணவிகள்
இந்த நிலையில் இக்கல்லூரியில் படிக்கும் 2 மாணவிகள் நேற்று மாலை அந்த பகுதியில் உள்ள ஓட்டலில் சாப்பாடு வாங்கி விட்டு மீண்டும் கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த 2 வாலிபர்கள் மாணவிகளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் மாணவிகளை தங்கள் கையைப் பிடித்து சாலையை கடத்தி விடுமாறும் வற்புறுத்தி உள்ளனர். அதற்கு மாணவிகள் மறுத்ததாக தெரிகிறது.
சரமாரி தாக்குதல்
இதனை தொடர்ந்து அந்த 2 வாலிபர்களும் மாணவிகளை சரமாரியாக தாக்கினர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை தடுத்து மாணவிகளை மீட்டனர். மேலும் இதுகுறித்து வீராணம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கைது
இதில் மாணவிகளை தாக்கியது குப்பனூர் பகுதியை சேர்ந்த சக்திவேல் (22), கார்த்திகேயன் (25) என்பது தெரியவந்தது.
இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாணவிகளை வழிமறித்து வாலிபர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
- புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
சேலம்:
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதங்களிலும் பல்வேறு சிறப்பு வைபவங்கள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே அடுத்த மாதம் 27-ந் தேதி பல ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேக வைபவமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கோவில் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று கோட்டை மாரியம்மன் கோவிலில் உள்ள அம்மன் சிலை மீது பச்சை கிளி ஒன்று தானாக வந்து அமர்ந்தது கண்டு பக்தர்கள் பரவசமடைந்தனர்.
இந்த நிகழ்வு காட்டு தீயை போல பரவியது. இதனையடுத்து கோட்டை மாரியம்மன் சிலை மீது பச்சைக்கிளி அமர்ந்திருப்பதை பார்க்க ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து கோவில் குருக்கள் கூறும்போது எங்கிருந்து பச்சை கிளி வந்தது என்று தெரியவில்லை. ஆனால் அம்மன் கருவறையில் சிலையின் மீது அமர்ந்து கொள்வதும், அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யும்போது அருகிலேயே அமர்ந்து கொண்டும் கோவில் நடை சாத்தும் போது கூட கருவறையிலேயே பச்சைக்கிளி அமர்ந்து இருக்கிறது.
கடந்த 3 நாட்களாக கிளியானது கருவறையை விட்டு செல்லாமல் உள்ளது. அம்மனுக்கு வைக்கக்கூடிய பிரசாதத்தையே உண்டு வருகிறது.
அடுத்த மாதம் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா நடைபெறுவதால் கோட்டை மாரியம்மன் கிளி ரூபத்தில் இங்கு வந்து இருப்பதாக குருக்கள் பரவசத்துடன் தெரிவித்தார். மேலும் பச்சை நிறம் அம்மனுக்கு உகந்த நிறம். பச்சைக்கிளி அல்லது வெட்டுக்கிளி இல்லங்கள் வந்தால் செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம். ஆகையால் அம்மனே வந்து அமர்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
- ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன.
- கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
சேலம்:
சேலம் டவுன் மேட்டுதெரு ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் என்ற பல்சர்குமார் (33), பிரபல ரவுடியான இவர் மீது 12 வழக்குகள் உள்ளன. மேலும் குண்டர் தடுப்பு சட்டத்திலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த மாதம் 7-ந் தேதி சிறையில் இருந்து வெளியில் வந்தார்.
இந்த நிலையில் டவுன் ரெயில்வே ஸ்டேசனில் உள்ள தண்டவாளத்தில் நண்பர்கள் 8 பேருடன் சேர்ந்து மது குடித்து கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. அப்போது பல்சர் குமாரை அவர்கள் ஓட ஓட விரட்டி தலையில் வெட்டினர். அலறிய படி வெளியில் ஓடிவந்த பல்சர் குமார் அதிர்ச்சியில் உறைந்தார். பின்னர் உறவினர்களை செல்போனில் அழைத்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரி சிகிச்சைக்கு சேர்த்தனர்.
அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நண்பர்களை தேடி வந்தனர். இதையடுத்து கிச்சிப்பாளையம் நாராயணநகர் ஹவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (36) சேலம் சாரதா கல்லூரி சாலை பின்புறம் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (34)இருவரையும் போலீசார் கைது செய்தனர்.






