என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Safety awareness meeting"

    • பட்டாசு உற்பத்தி செய்யும்‌ பணியாளர்கள்‌, விற்பனையாளர்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு, விற்பனை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம்‌ சேலம்‌ கலெக்டர்்‌ அலுவலகத்தில்‌ நடைபெற்றது.
    • இப்பயிற்சி முகாமில்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள்‌, பட்டாசு விற்பனையாளர்கள்‌ மற்றும்‌ பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள்‌ என 200க்கு மேற்பட்டோர்‌ கலந்து கொண்டனர்‌.

    சேலம்:

    சேலம் தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் ஓசூர் இணை இயக்குநர்கள் சேலம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மாவட்டத்தில் உள்ள பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பட்டாசு விற்பனை கடைகளில் தீ மற்றும் வெடிவிபத்து நடைபெறாமல் தடுப்பதற்கு, அத்தொழிலில் ஈடுபடும் உரிமையாளர்கள், பட்டாசு உற்பத்தி செய்யும் பணியாளர்கள், விற்பனையாளர்களுக்கு விபத்தில்லா பட்டாசு தயாரிப்பு, விற்பனை குறித்து விழிப்புணர்வு பயிற்சி முகாம் சேலம் கலெக்டர்் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இப்பயிற்சி முகாமில் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டாசு தொழிற்சாலை உரிமையாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தி தொழிலாளர்கள் என 200க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    முகாமை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை ஏற்று தொடங்கி வைத்து பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பட்டாசு தயாரித்தல் தொடர்பான பாதுகாப்பு கையேடு வெளியிட்டார்.

    அதனை தொழிற்சாலையின் உரிமையாளர்கள் பெற்றுக்கொண்டனர். மாவட்ட வருவாய் அலுவலரின் தலைமை உரையில் பட்டாசு தயாரிப்பில் அனுமதிக்கப்பட்ட ரசாயனங்களை அளவுடன் மற்றும் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பயன்படுத்தி கவனத்துடன் செயல்பட்டு விபத்தில்லா உற்பத்தி பணி செய்யவேண்டும் எனவும் பட்டாசு விற்பனையாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமத்தில் குறிப்பிட்டுள்ள் அளவில் மட்டும் பட்டாசு சேமித்து வைத்து எளிதில் தீப்பிடிக்கும் மற்ற பொருட்கள் இல்லாமல் பாதுகாப்பாக பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமென எடுத்துரைத்தார்.

    இப்பயிற்சி வகுப்பில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் பட்டாசு தயாரித்தலின் போது ரசாயனங்களை கையாளுதல் மற்றும் மருந்து கலவைகள் செலுத்துதல், அனுமதிக்கப்பட்ட அளவில் ரசாயனங்களை பயன்படுத்துதல், இருப்பு வைத்தல், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகளை உடனுக்குடன் சேமிப்பு அறைக்கு எடுத்துச்செல்லுதல் ஆகியவை குறித்து எடுத்துரைத்தார்கள். மேலும் அதிகளவில் ரசாயன கலவைகளை பயன்படுத்துதல் மற்றும் அதிக அழுத்தத்துடன் மருந்து கலவை செலுத்துவதால் ஏற்படும் உராய்வின் காரணமாக விபத்துகள் ஏற்படுவது பற்றியும் விரிவாக விளக்கப்பட்டது. மருந்து கலவை தயார் செய்து நிரப்பும் பணியில் நன்கு பயிற்சி மற்றும் அனுபவம் பெற்ற தொழிலாளர்களை மட்டுமே பணிசெய்ய அனுமதிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

    மேலும் பட்டாசு விபத்திற்கான காரணங்கள் மற்றும் பட்டாசு விபத்துகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், பட்டாசு விற்பனை கடைகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் குறும்படக் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளால் விரிவாக விளக்கப்பட்டது.

    முகாமில் காட்சிகள், ஆவணப்படங்கள் மூலமாக தொழிலக தீயணைப்பு மற்றும் மீட்பு அதிகாரிகள், தொழிலக பாதுகாப்பு, சுகாதார அதிகாரிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கக துறை மற்றும் சேலம் மாவட்ட நிர்வாக அலுவலர்களால் செய்யப்பட்டது.

    ×