search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏற்காடு, மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது
    X

    ஏற்காடு, மேட்டூருக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது

    • ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.
    • கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    சேலம்:

    ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும், சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தினசரி வந்து செல்வார்கள்.

    குறிப்பாக கோடை காலமான ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் இருக்கும். தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது.

    எனினும் வார விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணியை வருகை அதிக அளவில் இருந்தது. இந்த நிலையில் விடுமுறை நாளான நேற்று ஏற்காட்டில் வழக்கத்தை விடவும் குறைந்த எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    இதனால் அண்ணா பூங்கா, படகு துறை மற்றும் காட்சி முனை பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பணிகள் குறைவாக இருந்ததால் வெறிச்சோடி காணப்பட்டன.

    இது குறித்து சுற்றுலா தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறுகையில், பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர் ஏற்காட்டுக்கு சுற்றுலா வருபவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. வெயிலின் தாக்கம் குறையாமல் இருந்ததால் கோடை விடுமுறை பள்ளிகள் திறப்பு தள்ளி போனது. எனவே சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஞாயிறு ஒருநாள் விடுமுறைக்காக ஏற்காடு வருபவர்கள் குறைந்துவிட்டனர்.

    ஏற்கனவே மழைக்காலம் தொடங்கி விட்டதால் தமிழகம் முழுவதும் குளிர்ச்சியாகவே காணப்படுகிறது. எனவே ஏற்காடு வருவதை மக்கள் குறைத்துக் கொண்டனர் என்றனர்.

    மேட்டூர்

    மேட்டூர் அணை பூங்கா 33 ஏக்கர் பரப்பரளவில் அமைந்துள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். மேலும் இந்த பூங்காவில் பொதுப் பணி துறை சார்பில் நுழைவு கட்டணமாக ரூ.5 வசூல் செய்யப்படுகிறது.

    பண்டிகை, விடுமுறை உள்ளிட்ட விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தருமபுரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று மேட்டூர் அணைக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

    நீண்ட நேரம் காவிரியில் நீராடி விட்டு பூங்காவிற்கு சென்றனர். பூங்காவில் இருந்த பாம்பு, முயல் பண்ணைகளை கண்டு ரசித்தனர். பூங்காவில் இருந்த ஊஞ்சல், சர்க்கிள் , ராட்டினம் விளையாடி சிறுவர், சிறுமிகள் மகிழ்ந்தனர். மேலும் பூங்கா நுழைவு கட்டணமாக வசூல் செய்ததில் ரூ.29880 கிடைத்தது.

    Next Story
    ×