search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்
    X

    ராஜபாளையத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருக்கும் காட்சி.

    ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம்

    • ராஜபாளையத்தில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.
    • குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் சத்திரப்பட்டி சாலையில் ெரயில்வே மேம்பால பணிகள், ராஜபாளையம் நகர் பகுதி முழுவதும் பாதாள சாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய 3 பணிகளும் ஒரே சமயத்தில் தொடங்கப்பட்டது. இதனால் அனைத்து பாதைகளும் குண்டும் குழியுமாகி விட்டது.

    பொதுமக்கள் அன்றாடம் செத்துப் பிழைக்கும் நிலை இருந்து வருகிறது. குறிப்பாக ராஜபாளையத்தில் பிரதான சாலையான தென்காசி தேசிய நெடுஞ்சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

    இதில் ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் முதல் புதுப்பாளையம் மாரியம்மன் கோவில் வரை செல்வதற்கு குறைந்தபட்சம் அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் ஆகிறது.

    இதனால் ராஜபாளையம் வழியாக செல்லும் கனரக வாகனங்கள் பெரும்பாலும் ராஜபாளையத்தை தவிர்த்து வேறு வழியாக சென்று வருகின்றனர். உள்ளூர் வாசிகள் சென்றாக வேண்டிய கட்டா யத்தில் தூசிகளுக்கிடையே சென்று வருகிறார்கள்.

    இது குறித்து பலமுறை அதிகாரிகளுக்கும், கலெக்டருக்கும் ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கம் சார்பில் நினைவூட்டல் செய்தும் எந்த ஒரு பலனும் இல்லை.

    இதை கண்டித்தும், சாலை மற்றும் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வலிறுத்தி தொழில் வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது. 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டதால் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. கடை அடைப்பால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

    Next Story
    ×